பின் தொடர்பவர்கள்

0420 அன்று வந்ததும் அதே நிலா! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0420 அன்று வந்ததும் அதே நிலா! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 பிப்ரவரி, 2017

0420 அன்று வந்ததும் அதே நிலா!

அன்று வந்ததும் அதே நிலா!
அன்பர்களே! ஞானத்தை தேடு வதற்கு படிப்பறிவு, அல்லது வாசிக்கும் திறமை இருக்கவே ண்டும் என்று அவசியம் இல்லை. ஞானிகள் வெட்கம் படும்படியாக அறிவற்றவ ர்களை ஞானமுள்ளவர்களாக மாற்றுவார் என்று பைபிள்கூறு கின்றது. ஞானத்தைப்போ லவே,  நிர்வாணா அதாவது  முக்தி என்பது  எ ல்லாவற்றை யும் கடந்துவிட்ட ஒன்றுமற்ற நிலை. எழுதப் படிக்கத் தெரியாத போதும்,  சில ஞானிகளிடம் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து உட்கார்ந்து அவர் சொல்வதைக் கேட்கிறார்கள். ஏதோ ஒன்று இருந்தால், அதை விளக்க படிப்பு தேவைப்படலாம். எது இல்லாததோ, எது படைத்தலைத் தாண்டி இருக்கிற தன்மையோ, அந்த ஒன்றுமற்ற தன்மையைப் புரிந்துகொள்ள, பெரிய படிப்பு எதற்கு? கண்களை மூடி அமைதியாக இருந்தாலே புரிந்துகொள்ளக் கூடியது அது. அதற்கு எழுத்தும் படிப்பும் அவசியம் இல்லை.

ஞானி ஒருவரிடம், பெண் சீடர் ஒரு புத்தகத்தின் பக்கத்தைத் திறந்து காட்டினாள். “பல வருடங்களாகப் படித்தும் நிர்வாணா குறித்த இந்தச் சூத்திரங்கள் எனக்குப் புரியவில்லை. அவற்றுக்கு விளக்கம் அளிப்பீர்களா?”  அதற்கு அந்த ஞானி சொன்னார்: “எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. சூத்திரத்தைப் படி. உதவ முடிகிறதா என்று பார்க்கிறேன்!” பெண் சீடர் அதிர்ந்தாள். “எழுதப் படிக்கத் தெரியாதவரால் அர்த்தத்தை எப்படி விளங்கிக்கொள்ள முடியும்? இதை அறியாமல், நீங்கள் சொல்வதைக் கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து கூடுகிறார்களே!” என்றாள் அவள். குரு நிலவைக் சுட்டிக்காட்டினார். “இந்த விரல் இல்லை என்றாலும், அந்த நிலவை நீ பார்க்க முடியும் அல்லவா?”  என்றாராம். அன்பர்களே இதில் இருந்து நீங்கள் என்ன புரிந்து கொள்கின்றீர்கள்? நிலா சூரியன் இவற்றினை பார்ப்பதற்கு விரல் சுட்டிக்காட்டவேண்டிய அவசியமே இல்லை. விரல் என்று இங்கு அடையாளப்படுத்தப்பட்டது மனித அறிவே. நன்றி அன்புடன் பேசாலைதாஸ்

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...