பின் தொடர்பவர்கள்

0241 கட்டழகியும் கற்பனையும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0241 கட்டழகியும் கற்பனையும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 ஜனவரி, 2020

0241கட்டழகியும் கற்பனையும்

கட்டழகியைக் கற்பனை பண்ணத்தான் முடிகின்றது  பேசாலைதாஸ் 

         அறுபது வய தான மனிதர்க ளுக்கு , நினைத் துப் பார்பதைத் தவிர வேறெதற் கும் வழியில்லை. சக்தியை உடம்பு இழந்து விட்டால் அனுபவிப்பதும் சிரமம். அது பெண்ணாக இருந்தால் என்ன? நல்ல உணவாக குடியாக இருந்தால் என்ன எல்லாமே சிரமம் தான், இது வாழ்வின் அனுபவம் தரும் பாடம் இதை விளக்க ஒரு கதை சொல்ல்கின்றேன். 

                                             முல்லா நஸ்ருதீன் இவரை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் எனக்கும் அவரை நன்றாக பிடிக்கும், குறும்புத்தனமான, நகைச் சுவையாக அவர் சொல்லும் அறிவுரை என்னை கவர்ந்தவை, ஒருமுறை முல்லா நஸ்ரு தீன் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு அழகிய இளம்பெண்ணை பார்த்தார்.

                                                     அவளின் முழங்கையில் வேண்டுமென்றே இடித்தார். தலை நரைத்த கிழ ட்டு முல்லாவைப் பார்த்து அதிர்ந்து போனாள் அவள். "உனது தலைமுடி பளீர் வெள்ளையா கிவிட்டது. எனது தாத்தா வயது உனக்கு, வெட்க மாயில்லை உனக்கு, செத்து சுண்ணாம்பாயி ருக்க வேண்டிய உனக்கு இப்படி வக்கிர புத் தியா? என்று விளாசினாள்.


                               முல்லாவோ, "இங்கே பாரம்மா.... என் தலைமுடி வெள்ளைதான். ஆனால், என் இதயம் இன்னமும் கறுப்பாக, அட்டைக் கறுப் பாகத்தான் உள்ளது" என்றார். அவர் குறிப்பிட் டது இதயத்தில் ஒட்டியுள்ள பாலியல் ஆசையை,
நம்  தலைமுடி வெள்ளையாகும். ஆனால், நம் உள்ளம் வெண்மையடைவதில்லை. மாறாக,  நமக்கு  வயது ஏற, ஏற மேலும், மேலும் ஆசைக ளில் சிக்கிக் கொள்கின்றோம் .


                                           ஏனெனில், இனி நாம்  எதிர்  கொள்ளப் போவது மரணம்தான் என்பதை நாம்  இப்போது தெரிந்து கொண்டிருப்பதால் முடிந்த மட்டும் அனுபவித்துவிடத் துடிக்கின்றோம் . சக்தியை உடம்பு இழந்து விட்டால் அனுபவிப் பதும் சிரமம். ஆனாலும், நாம்  விடுவதாக இல்லை.

                       ஆசையில் மனைவியை நெருங்கி வரு கின்றோம் , "டியர்... கொஞ்சம் கிட்டே வாயேன்.." என்று ஆரம்பித்த அந்த கணத்திலேயே, "எனக்கு ஒரே தலைவலி.... சும்மா என்னை தொந்தரவு செய்யாதீர்கள்" என்று சிடுசிடுக்கிறாள் மனைவி, அவளுக்கும் இந்த வயோதிப கோளாறு தான்

                                           இது தான் சராசரி நிலவரம். வயதான நமக்கு , நினைத்துப் பார்பதைத் தவிர வேறெதற்கும் வழியில்லை. நினைத்துப் பார்க்க வேறு என்னதான் இருக்கிறது? கட்டழகியைக் கற்பனையில் தான் காணமுடிகிறது . சும்மாவா சொன்னார்கள் அறுபது தாண்டினால்  பிறகு வானமே எல்லைஅதுதான் மோட்ஷம் பற்றிய ஆசை  அன்புடன் பேசாலைதாஸ் 

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...