பின் தொடர்பவர்கள்

0140 பாகவதரும் ‍‍பால்காரியும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0140 பாகவதரும் ‍‍பால்காரியும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

0140 பாகவதரும் ‍‍பால்காரியும்

பாகவதரும் ‍‍பால்காரியும்

ஆற்றுக்கு அக்கரையில் வசித்து வந்த பாகவதர் ஒரு வருக்கு ஒரு பால்காரி பால் கொண்டுபோய் கொடுப் பது வழக்கம். தினமும் படகு சரியான் நேரத்துக்குக் கிடைக்காததால் பால் கொண்டு கொடுப்பதில் தாம தம் ஏற்ப்பட்டு கொண்டே இருந்தது.ஒரு நாள் தாமத மாக வந்ததற்காக பாகவதர் அவளை கடிந்து கொண் டார்.அதற்கு,"சுவாமி, நான் என்ன செய்வது? படக்கு காக வெகுநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது" என் றாள். அதற்கு பாகவதர் "பெண்ணே ! பகவானுடைய நாமத்தை உச்சரிப்பதால் துன்பமாகிய கடலையே கடக்கிறார்கள்,இந்த சின்ன ஆற்றை கடக்க முடி யாதா என்ன?" என்றார். வஞ்சனையறியாத அந்த பெண் பாகவதர் சொன்னதை அப்படியே நம்பிவிட் டாள்.அடுத்த நாள் பகவான் பெயரை சொல்லி கொண்டே ஆற்றை கடக்க தொடங்கினாள்.தாமதம் ஆகவில்லை.ஒரு நாள் பாகவதர்,"இப்போதெல்லாம் நீ தாமதமாக வருவதில்லையே?" என்று கேட்டார். அவள்,"சுவாமி தங்கள் கட்டளைப்படி இறைவன் பெயரை சொல்லிகொண்டே ஆற்றை கடந்து வருகி றேன்'' என்றாள்.பாகவதர் இதை எப்படி நம்புவார்? ஆற்றை எவ்விதம் கடக்கிறாள் என்பதை நேரில் பார் க்க விரும்பினார்.அவள் பாகவதரைத் தன்னோடு அழைத்து கொண்டு போய், பகவானுடைய பெய ரைச் சொல்லிக்கொண்டே ஆற்றின் மீது நடக்கலா னாள்.சற்று நேரத்தில் அவள் திரும்பி பார்த்தபோது பாகவதர் தயக்கத்துடன் பின்னால் தொடர்ந்து வரு வதையும் நீரில் நனைந்துவிடாமல் இருக்க தனது துணிகளை உயர்த்தி பிடித்திருப்பதையும் கண்டாள். உடனே " சுவாமி என்ன இது கடவுள் பெயரை வாயால் சொல்கிறிர்கள் அதே சமயம் துணி எங்கே நனைந்துவிடுமோ என்று அதை தூக்கிப் பிடிக்கிறீர் களே" என்றாள். பாகவதர் பதில் கூற முடியாமல் தலைகுனிந்தார்.

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...