பின் தொடர்பவர்கள்

0399 குரங்கு மனம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0399 குரங்கு மனம்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 2 பிப்ரவரி, 2017

0399 குரங்கு மனம்!

குரங்கு மனம்!


அன்பர்களே ஆபத்துக்காலங்க ளில் நமது புத்தி சஞ்சலப்படு வது உண்மைதான். தான் மட்டும் தப்பினால் போதும், அல்லது மற்றவர்களின் சங்க டத்தை தனக்கு சாதகமான சந்தர்ப்பம் என்று நம்மில் பல பேர் செயல்படுவதும் உண்டு, ஒரு சில சலுகைகளுக்காக இன்னொருவரை காட்டிக்கொ டுக்கும் துரோகம் ஒரு போதும் பயணளிக்காது, கடைசியில் அது அவர்களுக்கே ஆபத்தாக முடி யும். அதற்கு நான் சொல்லப்போகும் கதை ஒரு நல்ல உதார ணம்,,,,,,  ஒரு வேட்டைக்காரன் தன் நாயுடன் வேட்டையாட காட்டு க்கு சென்றான். நாய்க்கோ படு குஷி! காட்டிலே அங்கும் இங்கு மாக பறந்த வண்ணத்துப்பூச்சிகளை துரத்தி துரத்தி விளை யாடியது, விளையாட்டின் ஆர்வத்தில், நாய் வழி தவறி நடுக்கா ட்டில் நின்றது, அந்தநேரம் பார்த்து சிங்கம் ஒன்று  நாய்க்குஎதிரே வந்தது என்ன செய்வதென்று புரியாத நாய், சட்டென்று   அங்கே கிடந்த ஒரு எலும்புத்துண்டை கடித்த வண்ணம், சிங்கத்துக்கு முதுகை காட்டிக்கொண்டு, நின்றது, சிங்கம் மிக அருகில் வந்ததை உணர்ந்த நாய், ஆஹா இன்று எனக்கு கிடைத்த சிங்க‌ இறைச்சி நன்றாக இருக்கின்றது என்று சொல்லி, எலும்புத்து ண்டை ஆவலாக நக்கியது. இதைக்கேட்ட சிங்கம், இந்த மிருகம் பொல்லாத விலங்காய் இருக்கக்கூடும் என்று எண்ணி மெல்ல நழுவியது, இதை மரத்தின் மீது இருந்து கொண்டு அவதானித்த குரங்கு, சிங்கத்திடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற நினைப்பில், நாய், சிங்கத்தை ஏமாற்றியதை  சிங்கத்துக்கு எடுத்துச்சொன்னது. ஆத்திரம் கொண்ட சிங்கம், நாயை என்னபாடு படுத்துகின்றேன் பார் என்று உறுமிக்கொண்டு, நாயை தன் முதுகிலே ஏற்றிக்கொண்டு, நாயிடம் சென்றது. சிங்கமும் நாயும் ஒன்றாக வருவதைக்கண்ட நாய், இன்னொரு சிங்கத்தை கூட்டி வருகின்றேன் என்று சென்ற குரங்கை இன்னும் காணோம் என்று திரும்பி பார்க்காமலே அட்டகாசமாக குரைத்தது நாய். பிறகென்ன சிங்கத்தை நம்பிய குரங்கின் பாடு படுதிண்டாட்டம் தான்! அன்பர்களே! தான் வெட்டிய குழியில் தானே விழுந்து அழியும் சில அறிவிளிகள் நம்மிடம் இருக்க த்தான் செய்கின்றார்கள் அவர்களை இனம் கண்டு வாழ்வோம்! என்றும் அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...