பின் தொடர்பவர்கள்

0501 ஏக்கமே நரகமாகின்றது! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0501 ஏக்கமே நரகமாகின்றது! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

0501 ஏக்கமே நரகமாகின்றது!

ஏக்கமே நரகமாகின்றது!
அன்பர்களே! நம்மில் பலபேருக்கு தற்போது வாழும் இயல்பான வாழ்க்கையில் திருப்தி இல்லை. மற்றவர்கள் வாழும் பகட்டான வாழ்க்கையை பார்த்துவிடு, என்னடா நமது வாழ்க்கை என்று சலித்துக்கொள்கின்றார்கள். தற்போதுள்ள வாழ்கையைவிட, ஏங்கும் வாழ்க்கை நரகமாக மாறிவிடாதா? என்ற எண்ணம் இல்லாமல் ஏக்கத்தோடு வாழ்கின்றனர். ஆலயம் என்பது வீடாகும் ஆசைவைத்தால், ஆனந்த மாளிகை போலாகும் அன்பு கொண்டால், ஆம் நமக்கு கிடைத்துள்ள வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு அதில் இருந்து முன்னேற துடிக்கவேண்டுமே தவிர, வாழ்கின்ற வாழ்க்கை மீது, பிடிப்பு இல்லாமல் இல்லாத ஒன்றுக்காக ஏக்கப்பெருமூச்சு விடுவாதால் என்ன பயன்? இலையுதிர்காலத்தில் மரங்களில் இருந்து அத்தனை இலைகளும் தரையில் விழுந்து, மரங்கள் எல்லாம் கடுங்குளிருக்காக விரைத்து, விதைவைகளாய் நிற்கும் நோர்வே நாட்டு பனிக்காலத்தின் பழுத்து விழுந்த ஒரு இலையை பார்த்த போது, என் எண்ணத்தில் எழுந்த சிந்தனைக்கதை இது!,,,,,,,,,,,,
மரத்தில் இருந்த இலைக்கு 'போர்' அடித்தது. எத்தனை நாள்தான் இந்த மரத்திலேயே தொங்கிக்கொண்டிருப்பது என்ற சலிப்பு அதற்கு. வானத்தில் சிறகடித்துப் பறந்த பறவைகளைப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விட்டது. இலையின் ஏக்கம், எரிச்சலாக மாறியது. இந்தப் பாழாய்போன மரத்திலிருந்து எப்போதுதான் எனக்கு விடுதலை கிடைக்குமோ என்று புலம்பித் தீர்த்தது.

இலை, ஏங்கிக் காத்திருந்த அந்த விடுதலை நாள் வந்தது, இலையுதிர் காலத்தின் வடிவில். மரத்திலிருந்து இலை விடுதலை பெற்றது. விடுபட்ட இலை, தன்னை இதுவரைத் தாங்கி, வளர்த்துவந்த மரத்திற்கு விடைகூடச் சொல்லாமல், வீசியத் தென்றலில் மிதந்து சென்றது. பறவையைப் போல தானும் பறக்க முடிகிறதே என்று இலைக்கு நிலைகொள்ளா மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி ஒரு சில நொடிகளே நீடித்தது.

உதிர்ந்த இலை, இறுதியில் தரையில் விழுந்தது. எப்படி முயன்றாலும் அதனால் மீண்டும் பறக்க முடியவில்லை. தரையோடு வீசிய காற்று புழுதியை அதன் மீது கொட்டியது. காய்ந்து விழுந்த மற்ற இலைகள் அதன் மீது விழுந்து மூடின. மனிதர்கள் அதனை மிதித்துச் சென்றனர். இலைக்கு மூச்சுத் திணறியது.

கண்களில் நீர் பொங்க அண்ணாந்து பார்த்தது இலை. தான் வாழ்ந்த மரக்கிளையில் மற்ற இலைகள் தென்றலில் அசைந்தாடியது, தன்னைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்பதைப்போல் இருந்தது. "நான் அங்கேயே தங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே" என்ற ஏக்கம் இலையைச் சூழ்ந்தது. மரத்தில் இருந்தபோதும் ஏக்கம்… தரையில் வீழ்ந்தபோதும் ஏக்கம். ஆம் அன்பர்களே "இயல்பே இன்பம், ஏக்கம் நரகம்" - கவிஞர் வைரமுத்து சொன்னது எவ்வளவு அர்த்தமுள்ளது. அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...