பின் தொடர்பவர்கள்

0074 கழுதையின் காதில் வைரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0074 கழுதையின் காதில் வைரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூன், 2015

0074 கழுதையின் காதில் வைரம்

                      அன்பர்களே! நாம் நமக்கு கிடைக்க விருக்கும் மதிப்பு மிக்க கொடைகளை, நமது கீழ்த்தரமான சிந்தனை ஓட்டத் தால், அதனை இழந்து விடுகின் றோம். மதிப்புள்ளது என்று எமக்கு புரிந்துவிட்டல் அதனை நாம் எப்படி யாவது பெற்றுவிடவேண்டும் அதனை நமது பிற்போக்கான எண்ணங்களினால் தவறவிடக் கூடாது. இதனை விளக்க ஒரு சிறிய கதை இது.
                                                                
                                                                                                                                               ஒரு பிச்சை க்காரர் விலையுயர்ந்த வைரத்தை வழியில் கண்டெ டுத்தார். அதன் மதிப்பு என்னவென்று தெரி யாமல் அதை தன்னுடனிருந்த கழுதையின் காதில் மாட்டி விட்டார். இதை கண்காணித்துக் கொண்டிருந்த ஒரு வைரவியாபாரி அவரிடம் சென்று “இந்த கல்லை எனக்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன், எவ்வளவு வேண்டும் கேள்” என்றார்.                                                                      உடனே பிச்சைக்காரர், “அப்படியானால் ஒரு ரூபாய் தந்து விட்டு இந்தக் கல்லை வைத்துக்கொள்” என்றார். இன்   னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் அந்த வைரவியாபாரி, “ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 சதம் தருகிறேன் இல்லையென்றால் வேண் டாம் “என்றார். “அப்படியானால் பரவாயில்லை. அது இந்த கழு தையின் காதிலேயே இருக்கட்டும்” என்றவாறே பிச்சைக்காரர் நடக்கலா னார்.                                                                      வைர வியாபா ரியோ, எப்படியும் அந்த பிச்சைக்காரர் தன்னிடம் அதை 50 சதத்திற்கு தந்துவிடுவார் என்ற எண் ணத் துடன் காத்திருந்தார். அதற்குள் அங்கு வந்த இன் னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரரிடம் 1000ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டார். இதை சற்றும் எதிர்பாராத முதல் வைர வியாபாரி அதிர்ச்சி யுடன், “அட அடி முட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு மகிழ்ச்சியாகச் செல்கிறாயே! நன்றாக ஏமாந்து விட்டாய்“ என்றார். 
                                                    அதைக் கேட்ட பிச்சைக்காரர், பலத்த சிரிப்புடன் “ யார் முட்டாள்?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன். மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை. எனவே நான் மிகுந்த மகிழ்வுடனிருக்கிறேன். அதன் மதிப்பு தெரிந்தும் வெறும் ஒரு ரூபாய்க்கு அதை இழந்துவிட்டாய்..! இது எவ் வளவு பெரிய முட்டாள்தனம்..!” என்றவாறே நடக்கலானார். அன்பர்களே! பேராசை கொண்ட இந்த வைர வியாபாரி போல நாம் சில வேளைகளில் நடந்துகொள்வதில்லையா? அன்புடன் பேசாலைதாஸ்

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...