பின் தொடர்பவர்கள்

0225 குறைகள் எல்லாம் கொடைகளா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0225 குறைகள் எல்லாம் கொடைகளா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஜூலை, 2015

0225 குறைகள் எல்லாம் கொடைகளா?

 குறைகள் எல்லாம் கொடைகளா?
அன்பர்களே! நாம் நமது இயலாமை பற்றி அடிக்கடி நொந்து கொள்கின்றோம். ஆனால் தம் குறைக ளையே ஆதாரமாக கொண்டு சாதனைகள் படைத்த பலரை நாம் காணத்த வறிவிடுகின்றோம். "உன் பல வீனத்தில் என் பலம் பூரணமடையும்" என்று பவுலுக்கு இயேசு சொன்னார். ஆம் பலவீனமாதில் தான் இறைவனின் செயல்கள் வெளிப்படுகின்றது என்பது என் அசைக்க முடிய எண்ணம், என் எண்ணத்தை ஊர்ஜீதம் செய்ய இதோ ஒரு உண்மைச்சம்பவம்!
                                                                             "நீங்கள் தனிமையில் இருந்தாலோ, அல்லது உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை கள் என்றாலோ தொலை பேசியில் என்னைக் கூப்பிடுங்கள். நான் ஒரு சக்கர நாற்காலியில் இருக்கிறேன். அதனால், நான் எங்கும் வெளியில் செல்வதி ல்லை. நாம் தேவைப்பட்ட நேரம் தொலைபேசியில் பேசலாம். கூப்பிடு ங்கள்" என்று அந்த விளம்பர வரிகள் இருந்தன. இந்த வரிகளை விள ம்பரப்படுத்திய வர் நான்சி என்ற இளவயது பெண். இந்த விளம்பரம் பலரின் கவனத்தை ஈர்த்தது. நான்சியுடன் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 30 பேர் தொலைபேசி யில் தொடர்பு கொண்டு, தங்கள் பிரச்சனைகளைப் பகிர்ந்து வருகின்றனர். இவர் செய்து வந்த இந்த அற்புத பணியைக் குறித்து கேள்விப்பட்ட இவாஞ்செலிக்கல் சபை யின் சிறந்த போதகரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான, Tony Campolo என்பவர் நான்சியைத் தேடிச் சென்றார். அவர் நான்சியிடம், "உங்க ளைச் சக்கர நாற்காலியில் முடக்கிப்போட்டது எது?" என்று கேட்டார். நான்சி சொன்ன பதில் அவரை அதிர்ச்சியடையச் செய்தது. "நான் தற்கொலை முயற்சி செய்தேன். அதனால் இப்போது சக்கர நாற்கா லி யில் வாழ்கிறேன்" என்று நான்சி கூறினார். தொடர்ந்து நான்சி தன்னைப்பற்றி கூறினார்:
"என் சிறுவயது முதல் நான் தனிமையில் துன்புற்றேன். எனக்கென்று நண்பர்கள் இல்லை. நான் செய்து வந்த வேலை எனக்குப் பிடிக்கவி ல்லை. ஒரு நாள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன், நான் வாழ்ந்து வந்த அடுக்கு மாடி கட்டடத்திலிருந்து கீழே குதித்தேன்... என் உயிர் போகவில்லை, ஆனால், அந்த விபத்தால் என் இடுப்பு க்குக் கீழ் உணர்விழந்து போனேன். நான் மருத்துவ மனையில் இரு ந்தபோது, இயேசு எனக்குத் தோன்றி, 'நான்சி, இதுவரை நீ முழு உட லோடும், முடமான மனதோடும் வாழ்ந்து வந்தாய். இனிமேல் நீ முடமான உடலோடு வாழப் போகிறாய். ஆனால், உன் மனம் இனி முழுமையடைந்துள்ளது' என்று சொல்லிச் சென்றதை நான் உண ர்ந்தேன்" என்று அவர் கூறினார்.
                                 அன்பர்களே இதோ இன்னுமொரு தகவல் அதையும் படியுங்கள், குறைகள் எல்லாம் கொடைகளா? என்பதற்கு பதிலை நீங்களே அறிவீர்கள்.பல ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ஐக்கிய நாட்டின் டெக்சஸ் (Texas) மாநிலத்தில் நடைபெற்ற ஒரு வழக்கு, இந்த உண்மையை நம் உள்ளத்தில் பசுமரத்தாணியைப் போல் பதிக்கி றது. டெக்சஸ் மாநில நீதி மன்றத்தில் ஒரு வழக்கு  விசாரணைக்கு வந்தது. கைகளும், கால்களும் இல்லாத நிலையில் வாழ்ந்துவந்த ஒரு தாய், தன் 5 மாதக் குழந்தையைக் காப்பாற்ற முடியாது என்று அம்மாநில அரசு தீர்மானம் செய்தது. தன்னால் முடியும் என்று நிரூ பிக்க, அந்தத் தாய் நீதிமன்றத்தை நாடினார். வழக்கு ஆரம்பமா னதும், அந்தத் தாய் நீதிமன்றத்தில் செய்தது, அனைவரையும் ஆன ந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.கைகளும், கால்களும் இல்லாத அந்தத் தாய், தன் உதடுகள், நாவு இவற்றின் உதவியுடன், அவருக்கு முன்ப டுத்திருந்த குழந்தையின் துணிகளைக் கழற்றி, மீண்டும் புதுத்துணி யை மாட்டிவிட்டார். குழந்தைக்குத் தேவையான உணவை ஊட்டிவி ட்டார்.இதைக் கண்ட நீதிபதி, தன் இருக்கையைவிட்டு எழுந்து நின்று, அந்தத் தாயை வணங்கினார். பின்னர் அவர், "திறமைகளை உடல் அளவில் பெற்றிருப்பது, உண்மையின் ஒரு சிறு பகுதிதான்; உள்ளத்தில் பெற்றிருக்கும் உறுதியே, உண்மையான திறமை என்ப தை, எங்கள் அனைவருக்கும் உணர்த்திய உங்களுக்கு நன்றி" என்று கூறினார்.
குறைகள், நிறைகள் இரண்டும் ஒவ்வொரு மனிதருக்கும் தரப்பட்டுள்ள கொடைகள். குறைகள்...கொடைகளா? என்ற கேள்வி எழலாம். ஆம், குறைகளும் கொடைகள்தாம். குறைகளையும் நிறைகளாக மாற்றும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது.
அன்பர்களே ! நமது குறைகளை எண்ணி கவலைப்படாமல் துணிந்து செயல்படுவோம் அன்புடன் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...