பின் தொடர்பவர்கள்

0391 குருவைத்தேடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0391 குருவைத்தேடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 ஜனவரி, 2017

0391 குருவைத்தேடி,,,,,,,,,,,,,,,,,,,,,,

குருவைத்தேடி,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஒரு கிராமத்து மீன்பிடிகாரன் ஒரு வனுக்கு அவன் சிந்தனையில் மாற்றங்கள் உருவாகலாயின. எது வுமே அவனுக்கு அர்த்தமற்றதாக தெரிந் தது. மற்றவர்களுக்கு சந்தோசமாக தெரிவதெல்லாம் இவனுக்கு ஒன்றுமில்லாமல் தோன்றியது.வாழ்வின் நிலை யாமை அவனை மனதை குடைந் தது. பரம் பொருள்ஞானம் இவை பற்றி அதிகம் சிந்தி க்கலானான். தனக்குள் ஏற்பட்டுள்ள இந்த அதீத மாற்றத் திற்கு காரணம் புரியாமல் அவன் தவியாய் தவித்தான். தனக்கு அமைதி காட்ட ஞானத்தக்காட்ட சிறந்த ஆன்ம குருவை அவன் தேடலானான். அவ்வாறு அவன் தேடிக் கொண்டிருக்கும் போது,ஒரு ஞானியை கண்டான்தன் நிலைமைய ச்சொல்லி தனக்கு ஒரு குருவை காட்டும் படி கெஞ்சினான். அந்த ஞானியோ உனக்கு வழிகாட்டக் கூடிய ஒரு குரு யார் என்று சொல்கி ன்றேன் கேள். அதன்படி அவரை நீ தேடிப்பிடிக்கலாம் என்று சொல்லி விட்டு,தேடப்போகும் குருவின் அடையாளங்களைச் சொன்னார். அந்த குருஉடலில் எதனையும் அணியா மல்,இருப்பதற்கு ஒன்றையும் விரி க்காமல்,வெறும் தரையில் தியானம் செய்வார். அவர் எந்த மர நிழலி லும் அமரமாட்டார்ஆனால் அவர் இருக்கும் இடத்துக்கு மிக அருகில் இரண்டு பனைமரங்கள் இருக்கும்இது தான் அந்த அடையாளம் என்று அந்த ஞானி சொல்லமீன்பிடிகாரன் தன் குருவை தேடி அலந்தான். எங்கே யொவெல்லாம் தேடி அலைந்தான் முடியவில்லை.
காலங்கள் கடந்தன்ஒருமுறை அவன்,இரண்டு பனை மரங்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் ஒரு தவமுனிவர் இருப்பதையும்தான் தேடிய அத்தனை அடையாளங்களும் சரிவர பொருந்தியதால்ஒடோடிச் சென்று அந்த தவசியின் காலில் விழுந்தான் மீன்பிடி காரன். எழுந்து பார்த்தான் அப்படியே அதிச்சியில் வாய் பிளந்து நின்றான். தான் ஆரம்பத்தில் கண்ட அதே ஞானி,அடையாளங்கள் சொன்ன அதே ஞானி! ஐயா நீங்களாஎன்றான்ஆம் வா மகனே! கடைசியில் வரவேண்டிய இடத்திற்கே வந்துவிட்டாய். ஆனால் அதற்குள் முப்பது வருடங்கள் கடந்துவிட்டன. இப் போது உனக்கு வழிகாட்டி தேவையில்லை. எனது இடத்தில் நீ இருந்து இறைவனை தரிசிக்கலாம் என்று சொல்லிஎழுந்து நடந்தார் அந்த ஞானி. நாமும் அப்ப டித்தான் நமக்குள் உறைந்து போயிருக்கும் இறைத்தன் மையை உணரமால்பித்தர்கள் போல அலைகின்றோம். இறைவன் நமக்குள் வசிக்கின்றான் என்ற உன்னதமான தத்துவத்தை உணரமால் வாழ்நாளை வீணே கழிக்கி ன்றோம்.   உங்கள் உள்ளங்களை தோண்டிப்பாருங்கள் அங்கே இருப்பார் இறைவன். என்னைத்தோண்டி ஞானம் கண்டேன் அதுதான் என் கட்சி!
                     தோண்டிப்பார்த்து சொல்பவன் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...