பின் தொடர்பவர்கள்

0218 எள்ளி நகையாடல் ஒரு கலையா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0218 எள்ளி நகையாடல் ஒரு கலையா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 ஜூலை, 2015

0218 எள்ளி நகையாடல் ஒரு கலையா?

எள்ளி நகையாடல் ஒரு கலையா?
அன்பர்களே சிரிக்கவும் சிந்திக்கவும் தெரிந்த ஒரே ஒரு ஜீவராசி மனிதன் மட்டுமே! சிரிப்பு மனுக் குலத்தின் உயிர்ப்பு என்றால் அது மிகையாகாது. ஆனால் சிரிப்பு நகைச்சுவை என்ற போர்வையில், நாம் மனித மனங்களை துன்புறுத்தும் கிண்டலை, வேடிக்கைகளை, எள்ளி நகையாடலை ஒரு கலையாக, இன்றை ய தமிழ் சினிமா வளர்த்துவிட்டது வேதனை க்குரிய ஒரு விடயம். வேடிக்கையாக பொழுது போகத்தான் வேண்டும், கொஞ்சம் விளையாட்டாக வாழ்வை வாழ்ந்து பார்ப்ப தில் தப்பே இல்லை, ஆ ஜோடி காலணி களைப் பார்த்தனர். ஒரு விவசாயி, அவற்றை அங்கே விட்டுவிட்டு அருகிலிரு ந்த ஏரியில் கை கால் கழுவிக்கொண்டிருந்தானால் அதே வேடிக்கையால் நகைச் சுவையால் நமது சிந்தனையும்,  ஆன்மாவும் வளம் பெறும் என்றால் அதை நாம் வரவேற்போம், அதை எளிதாக விளக்க இதோ ஒரு கதை,,,,,, ஓர் ஏரி ஓரமாக இரண்டு சிறார் நடந்து போய்க்கொண்டிரு ந்தனர். அவர்களில் ஒருவன் ஏழை. மற்றவன் பணக்காரன். இவ்விரு வரும் வழியில் ஒருர். அதைப் பார்த்த பணக்காரச் சிறுவன், இப்போ து ஒரு வேடிக்கை செய்யலாம். அந்தக் காலணிகளைத் தூர த்தில் வீசி விடுவோம், அந்த ஆள் வந்து அவற்றைக் காணாமல் அல்லா டுவார், அங்கேயும் இங்கேயும் பதட்டத்தோடு ஓடுவார், நாம் அதைப் பார்த்து இரசிக்க லாம் என்று சொல்லி காலணிகளையும் தூக்கப் போனான். உடனே அந்த ஏழைச் சிறுவன், கொஞ்சம் பொறு, நீ சொல்வதில் வேடிக்கை இல்லை, உனது காலணிகள் தொலைந்தால் உடனே உன் அப்பா வாங்கித் தருவார், ஆனால் அந்த மனிதருக்கு அவை தொலைந்தால், அவர் வாயையும் வயிறையும் கட்டி பண த்தைச் சேர்க்க வேண்டியிருக்கும். அதனால் நான் ஒரு வேடிக்கை சொல் கிறேன், அது இன்னும் வேடிக்கையாக இருக்கும் என்றான். காலணிகள் இர ண்டும் இருக்கிற இடத்திலே இருக்கட்டும். நீ உன் சட்டைப் பையிலிருந்து ஒரே ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து ஒரு காலணியின் குதிங்கால் பகுதியிலே வை. நாம் இருவரும் அந்த மர த்திற்குப் பின்னால் நின்று வேடிக்கை பார்ப் போம் என்றான். அதே போல் நாணயத்தை வைத்துவிட்டு அச்சிறார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த விவசாயி காலிலிருந்த மண்ணைத் தட்டிவிட்டு காலணிகளை மாட்டப் போனார். நாணயம் இருந்தது தெரிந்தது. அதை எடுத்துக்கொண்டு, யாராவது பார்க்கிறார்களா என, சுற்றுமுற்றும் பார்த்தார் விவசாயி. பின்னர் வானத்தைப் பார்த்து, கடவுளே, இது உம் கருணைதான். யாரோ புண்ணியவான் மனதில் தருமம் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தை நீர் விதை த்திருக்கிறாய், அந்த மனிதர் நல்லா இருக்கனும் என்று வாழ்த்தி அந்த நாணயத்தை தனது கண்ணில் ஒத்திக்கொண்டார். அதைப் பார்த்த ஏழைச் சிறுவன், பணக்காரச் சிறுவனிடம், பார்த்தாயா, உனக்கு ஒரு ரூபாய் என்பது பெரிதல்ல, ஆனால் அந்த விவசாயி, உன்னைப் புண்ணியவான் என்று வாழ்த்திவிட்டுச் சென்றார். இதில் அவருக்கும் மகிழ்ச்சி, உனக்கும் மகிழ்ச்சி, உனக்குக் கிடைத்தி ருக்கும் மகிழ்ச்சி உயர்வானது என்றான். ஆம். வேடிக்கையும் கிண்ட லும் அடுத்தவர்க்குத் தொந்தரவாக இருக்கக் கூடாது(கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் சொன்னதாக தென்கச்சியார்). அன்புடன் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...