பின் தொடர்பவர்கள்

0463 தங்க குச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0463 தங்க குச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 டிசம்பர், 2017

0463 தங்கமாய் மாற்றும் சக்திபெற்ற குச்சி

தங்கமாய் மாற்றும் சக்திபெற்ற குச்சி

அன்பர்களே நம்மில் பலர் தமக்கு கிடைக்கும் உறவுகள் எப்படிப்பட்டது என்பதை ஆராய்ந்து பார்க்காமால் தற்காலிகமாக‌ கிடைக்கும் நன்மைக ளுக்காக நல்ல உறவுகளை எட்டி உதை த்து தள்ளிவிடுகின்றனர், இன்னும் சிலர் யார் தமக்கு உண்மை அன்பைதருகி ன்றார்கள் என்பதை உணராமல் வேண்டா வெறுப்போடு ஒதுக்கி வாழ்கின்றனர் ஒருவேளை அந்த உறவு இறைவனால் கொடுக்கப்பட்ட உறவாக இருப்பதை எனோ எண்ணிப்பார்ப்பதில்லை, உறவுகளை எட்டி உதைத்து, சுயநலத்தின் பின்னால் ஓடும் ஒரு சிலருக்காக இந்த கதை விரிகின்றது,,,,,,,,
சாதாரணப் பொருள்களைத் தங்கமாய் மாற்றும் சக்திபெற்ற ஒரு முனிவர், காட்டில் வாழ்கிறார் என்ற செய்தி, ஊரெங்கும் பரவியது. இதைக் கேட்ட இருவர், அம்முனிவரைத் தேடி காட்டுக்குச் சென்றனர். அவரைக் கண்டதும், அவர் பாதத்தில் விழுந்து வணங்கினர். தன்னைத் தேடிவந்ததன் காரணத்தை முனிவர் கேட்டபோது, இருவரும் மிகப் பணிவுடன், "குருவே, உங்களைப் போல உலகைத் துறந்து, உள்ளொளி பெறவே உங்களைத் தேடி வந்துள்ளோம்" என்று பொய் சொன்னார்கள். அவர்களை தன் சீடர்களாக ஏற்றுக்கொண்ட முனிவர், அடுத்தநாள், ஒரு மண்கலம் நிறைய தானியங்களையும், ஒரு குச்சியையும் அவர்களிடம் கொடுத்து, சூரிய ஒளியில், தானியங்களைக் காயவைத்து வருமாறு பணித்தார்.
முனிவர் தந்த பணியை அறவே வெறுத்த இருவரும், பொய்யானப் பணிவோடு, கலத்தையும், குச்சியையும் எடுத்துச் சென்றனர். கலத்தில் இருந்த தானியங்களை, சூரிய ஒளியில் வைத்து, குச்சியால் அதைக் கிளறிய வண்ணம் அமர்ந்திருந்தனர். அப்போது, சிறிது, சிறிதாக, அந்த மண்கலமும், அதிலிருந்த தானியங்களும் தங்கமாக மாறத் துவங்கின. அந்த ஆனந்த அதிர்ச்சியில் தங்களையே மறந்த இருவரும், தங்கள் கையில் வைத்திருந்த குச்சியைத் தூர எறிந்துவிட்டு, தங்கமாய் மாறியிருந்த கலத்தையும், தானியங்களையும் எடுத்துகொண்டு, காட்டை விட்டு ஓடி மறைந்தனர். தொட்ட பொருள்கள் அனைத்தையும் தங்கமாய் மாற்றும் சக்தி, அவர்கள் கையிலிருந்த குச்சியில்தான் இருந்ததென்பதை அவர்கள் உணரவில்லை. ஆம் அன்பர்களே! நம்மில் பலர், வாழ்வில் நல்லவை பலவற்றை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல், எவ்விதம் தவறவிடுகிறோம் குறிப்பாக, எதிர்பாராத மகிழ்வு நம்மை அடையும்போது, அந்த மகிழ்வின் ஊற்று எது என்பதையும், அந்த மகிழ்வை நிலைக்கச் செய்யும் வழிகள் எவை என்பதையும் மறந்து, கணப்பொழுது மகிழ்வில் கரைந்து போகும் ஆபத்து உண்டு.
அன்புடன் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...