பின் தொடர்பவர்கள்

0460 யாசித்தல்ல அன்பு! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0460 யாசித்தல்ல அன்பு! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

0460 யாசித்துப்பெறுவதல்ல அன்பு!

யாசித்துப்பெறுவதல்ல அன்பு!

                                                                 

அன்பர்களே நமக்கு உழைக்கவிலுவில்லை என்றால் யாசித்து வாழலாம், உதவிதேவை என்றால் பிறரிடம் அதை கோரலாம் அ ல்ல து பணம் தேவை என்றால் கடன் பெறலாம் இவை அனைத்தும் வாழ்வில் இடம்பெறு பவைதான் அதைவிட முக்கியம் நமக்கு அன்பு தேவைப்படுகின்றது, அன்பு கொடு க்கவும் பெறவும் உயிர்களிடத்தில் உலா வுகின்ற உன்னதமான ஒன்று. அன்பே கடவுள், அன்பே சிவம், அன்பே அகிலம், அன்பே மகாசக்தி இப்படி அடிக்கி க்கொண்டே போகலாம் அன்பைப்பற்றி!                       இந்த அன்பு மனிதரிடம் தானாக உள்ளத்தில் உருவாகி ஊற்றெடுக்க வேண்டும். உன்னதமானவர்களை அடை யாளப்படுத்தும்போது அன்பென்ற நெருப்பில் இதயம் எரிந்து கொண்டி ருப்பதாக ஓவியர்கள் வரைந்து இருப்பதை நீங்கள் அவதானித்து இருப்பீ ர்கள். உண்மைதான் அன்பென்ற அகல் அகத்தில் ஆண்டவனிடம் இரு க்கின்றது, அது அள்ளிக்கொடுக்கப்படுகின்றது, நம்மிடம் இருந்து அள்ளி எடுக்கவும்  ஆசைப்படுகின்றது.அன்பு தானாக மனித மனதில் ஊற்றெடு க்கவேண்டும் அதனை யாசித்தோ அடிபணியவைத்தோ பெறமுடியாது என்ற எனது எண்ணத்திற்கு வலுவூட்டும் ஒரு உண்மைக்கதை இது!                                                                                 பிரெஸிய நாட்டை ஆண்டுவந்தார் மாகா பிரெட்ரிக் என்ற அரசன் அவர் மகா கோபக்காரர். தான் நகரு க்குள் உலாவருகின்ற போது, யாராவது ஏதாவது தறுதலாக நடந்து கொண்டால் க்டுமையாக தண்டிப்பார். அவர் நகர்வலம் வருகின்றார் என்றால் மக்கள் அன்றைய தினம் நகருக்கு செல்வதை நிறுத்திவிடு வார்கள். ஒரு முறை மன்னர் பேர்லின் நகரில் உலாவந்தார், அப்போது வயதான பெண்மனி, அவரைக்கண்டதும், சட்டென்று எதிரே இருந்த வீட்டுக்குள் நுழைவதற்காக வாசலை திறந்தாள் அது திறக்கவி ல்லை அந்த நேரம் பார்த்து மன்னர் அவ்விடம் வந்தார்,  அந்த பெண்மனி யை பார்த்து இன்னொருவனுடைய வீட்டில்  ஏன் அத்துமீறி உட்பிரவே சிக்க முயன்றாய் என்று கேட்டார்.                                                                                அதற்கு அந்த அம்மா மறுமொழியாக நான் அத்துமீறி நுழையவில்லை உங்கள் பார்வையில் இருந்து தப்பி க்கவே அப்படி செய்தேன் என்றாள், இதனை கேட்ட மன்னன் இன்னும் அதிகமாக கடுங்கோபம் கொண்டவனாய், நான் உன் பார்வைக்கு கொடிய அரக்கனாகவா காட்சியளிக்கின்றேன்? நான் உன் இராட்சிய த்தின் மன்னன்,  உன்னைப்போன்ற வயதான அம்மாக்கள் என்னை அன்பு செய்யவேண்டும், நீடூழி வாழவேண்டும் என்று ஆசி வழங்கு வதற்கு பதிலாக, என் பார்வையில் இருந்து தப்பிக்க பார்க்கின்றாய் என்று அரசன் அதட்ட அந்த அம்மாவுக்கோ தொடை நடுங்கியது, ஒரு வாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, நடுநடுங்கிய குரலில், மன்னா! அன்பு என்பது தானாக உள்ளத்தில் ஊற்றெடுக்கவேண்டும் . நீங்களோ மன்னார் அன்புக்காக என்னிடம் பிச்சை கேட்கலாமா? என்றாள். மன்னர் ஒரு முறை யோசித்தார். தனது கண்டிப்பான பேச்சும், நடவடிக்கையும் மக்களை தன்னிடம் இருந்து பிரித்துவைத்துள்ளது என்பதை உணர்ந்தார். அந்த அம்மாவை கட்டி அணைத்து என் அறிவுக்கண்ணையும், அகந்தையையும் அகற்றிவிட்டாய் தாயே! என்று அழுதார். ஆம் அன்பர்களே நம்மில் பல்ரும் இப்படித்தான், நன்மை செய்வார்கள் ஆனால் கண்டிப்போடு நடந்து கொள்வார்கள் இப்படியா னவர்கள் உன்மை அன்பை இழந்து தனிமையில் வாடுவார்கள் எனவே இன் சொல் பேசி இனிமையாக வாழ்வோம் என்றும் அன்பில் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...