பின் தொடர்பவர்கள்

0459 விதி அது வலியது! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0459 விதி அது வலியது! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 டிசம்பர், 2017

0459 விதி அது வலியது!

விதி அது வலியது!

அன்பர்களே! நாம் வாழ்வி ற்கான போராட்டத்தில் ஈடு படுகின்றோம். ஆனால் வாழ்க்கை நாம் நினைத்த மாதிரி அமைவதில்லை. அவரவர் விதிப்படி வாழ்க்கை அமைகின்றது. அதை நாம் எப்படி ஏற்றுக்கொண்டு மகி ழ்ச்சியாக வாழ்வது நமது சுயாதீனத்தில் அதாவது நமது கைகளில் உள்ளது. கடந்து போன சம்பவங்களை நினைத்து கவலைப்படுவ தினால் எதுவும் நடந்துவிட ப்போவதில்லை. நடப்பவை நலமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ திட்டமிட்டு, நமது மனமகிழ்ச்சி, திருப்தியில் எஞ்சிய வாழ்வை பிடித்தமா னவர்களின் இனிய உறவில் வாழ்வதே சிறந்தது. வாழ்க்கை குறுகியது அதில் இனிமையுடன் வாழத்தெரிந்தவன் கெட்டி க்காரன். புத்திசாலி அதுவே எனது வாதம்! விதி வலியது மதியால் அதை மாற்றலாமே தவிர, முற்றாக தடுத்த நிறுத்த முடியாது. இதனை எளிமையாக விளக்க இணையத்தில் என்றோ ஒரு நாள் நான் வாசித்த கதையை இங்கே பதிய விடு கின்றேன். இதோ அந்த கதை!,,,,,,,,,,,,,,,,

                                                                  இந்திரன்மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாகவளர்த்துவந்தாள். ஒருநாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது. அதை பரிசோதித்த மருத்துவர் இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்.
உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி, இந்த கிளியை எப்படியாவதுக்காப்பாற்றுங்கள்.கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள். இந்திரன், கவலைப்படாதே இந்திராணி...நான் உடனே பிரம்மாவிடம்சென்று முறையிடுகி றேன்... ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே? அவரிடம்சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றியெழுதிவிடுவோம் என்று சொல்லிவிட்டு பிரம்மா விடம் சென்று விஷயத்தை கூறினான்.. 

                                                                         விஷயத்தைக்கேட்ட பிரம்மா ,
இந்திரா.... படைப்பது மட்டுமே என்வேலை. உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில். நாம் அவரி டம்சென்று உதவிகேட்போம்...வா ...நானும் உன்னுடன் வருகி றேன் என்று இந்திரனை அழைத்துக்கொண்டு மஹாவிஷ்ணு விடம்சென்று விஷயத்தை தெரிவித்தார் பிரம்மா. மஹாவி ஷ்ணுவோ, உயிர்களை காப்பது நான்தான்.ஆனால் உன் கிளி இறக்குந்தறுவாயிலிருக்கிறது. அழிக்கும்தொழிலை மேற்கொ ண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும். வாருங்கள் நானும் உங்களுடன்வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று கிள ம்பினார் விஷ்ணு.
                                             விபரங்களைக்கேட்ட சிவன் , அழிக்கும் தொழில் என்னுடையதுதான். உயிர்களையெடுக்கும்பொறு ப்பை நான் எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன். வாரு ங்கள் ....நாம் அனைவரும்சென்று எமதர்மனிடம்கூறி அந்த கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிடு வோம் என்றுசொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார் சிவன். தன்னுடைய அவைக்கு சிவன் , மஹாவிஷ்ணு , பிரம்மா , இந்திரன் ஆகிய நால்வரும் வரு வதைக்கண்ட எமதர்மன் உடனே எழுந்து ஓடிவந்து வரவேற்கி றார். விஷயம் முழுவதையும்கேட்ட அவர் , ஒவ்வொரு உயிரை யும் எந்தநேரத்தில் , எந்தசூழ்நிலையில் , என்னகார‌ணத்தால் எடுக்கவேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம். அந்த ஓலை அறு ந்துவிழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும். வாரு ங்கள் அந்த அறைக்குச்சென்று கிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து , அதை மாற்றி எழுதிவிடுவோம் என்று அவர்க ளை அழைத்துச்செல்கிறார்.
                                                                 இப்படியாக இந்திரன் ,பிரம்மா ,விஷ்ணு , சிவன் , எம்தர்மன் ஆகிய ஐவரும் அந்த அறை க்குச்சென்றனர். அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது. உடனே அவர்கள் அவசரமாகச்சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர். அது அந்த கிளியின் ஆயுள் ஓலை.  அவசரமாக அதை படித்துப்பார்க்கின்றனர்....

                                                            அதில்,இந்திரன் , பிரம்மா , விஷ்ணு , சிவன் , எம‌தர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ அப்போது இந்த கிளி இறந்து விடும்.. என்று எழுதப்பட்டிருந்தது. இதுதான் விதி!! விதியை மாற்றுவது என்பது முடியாது என்பதே கதை?! யாருக்கு விதி?!!
எங்கே எப்படி முடியும்!!! என்பது எழுதினவனுக்கே  தெரியாது என்பது தான் உண்மை?! வாழும் காலம் நிரந்தரம் இல்லை? வாழும் காலத்திலாவது அனைவரிடமும் அன்பாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்!
அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...