பின் தொடர்பவர்கள்

0142 கைகேயி நல்லது தான் செய்தாள் !!! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0142 கைகேயி நல்லது தான் செய்தாள் !!! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

0142 கைகேயி நல்லது தான் செய்தாள் !!!

கைகேயி நல்லது தான் செய்தாள் !!!

தசரதனின் மனைவிகள் கௌசல்யா, கைகேயி, சும ந்திரை ஆகிய மூவரும் ராமாயணத்தில் முக்கிய மான கதாபாத்திரங்கள் அதில் கௌசல்யா, ராமனி ன் தாயார் மிக நல்ல முறையில்  சித்தரிக்கப்பட்டு ள்ளார். ராமாயணத்தில் ஒரு காட்சி தசரதர் அமைச்ச ர்களைக் கூப்பிட்டு,"அமைச்சர்களே,நாளைய தினம் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யு ங்கள். ஊர் மக்களுக்கு இந்த நல்ல விஷயத்தை சொல்லுங்கள் " என ஆணையிடுகிறார். இதனைக் கேட்ட தசரதனின் மனைவிகள் மகிழ்ச்சி அடைகிறா ர்கள். ஆனால் மகிழ்ச்சி அடையாதவள் கூனி மட் டும் தான். சிறு வயதில் ராமன் செய்த சில விளையா ட்டுக்கள் அவளைப் புண்படுத்தி இருந்தன. அவை களை நினைத்து சமயம் வருவதற்காக காத்திருந் தாள். "அதுவும் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய் வதா?" "உடன் ஏதாவது செய்யவேண்டுமே? கூனி மனதில் நினைத்துக் கொண்டே கைகேயியைப் பார் க்கச் சென்றாள்.
                                 "கைகேயி, ராமனுக்குப் பட்டாபிஷே கமாமே?, உனக்குத் தெரியுமா?" "ஆம் கூனி ,மகிழ்ச் சியான செய்திதானே? என் மகனுக்கு பட்டாபிஷே கம் எனக்கு மகிழ்ச்சி தராதா?" "என்ன! உன் மகன் பரதனுக்கா பட்டாபிஷேகம்? ராமனுக்கு அல்லவா? எப்படி நீ இதை ஏற்றுக் கொள்கிறாயோ?" "நீ என்னா ல் சொல்ல வருகிறாய் கூனி ?" "எப்படி என்னால் ஏற் றுக் கொள்ள முடியும்? ராமனுக்கு பட்டாபிஷேகம் ஆனா பிறகு உன் மகன் எப்படி பட்டத்திற்கு வரமுடி யும்? யோசனை செய்தாயா கைகேயி?" என்று அஸ் திரத்தை எடுத்து விட்டாள் கூனி.
                                                             சிறிது நேரம் யோசித்த கைகேயியும் , "ஆமாம், நீ சொல்வதும் சரிதான், ராமன் அரசரானபிறகு என் மகன் பரதன் எப்படி பட் டத்திற்கு வரமுடியும்? எல்லாம் முடிந்த பிறகு இனி நாம் என்ன செய்யமுடியும்?" என்று கூனியைப் பார் த்து வினவினாள். "இப்போதும் ஒன்றும் முழுகிவிட வில்லை, அரசரிடம் நீ ஏற்கனவே இரண்டு வரங்கள் வாங்கி வைத்து இருக்கிறாய். அதற்கான சந்தர்ப்பம் இப்போது கிடைத்துள்ளது. அதைப் பயன்படுத்தி அவ ரிடம் இரண்டு வரங்களைக் கேள்." கூனி தன்னு டைய வேலையை சரியான தருணத்தில் ஆரம்பித் தாள். உடனே கைகேகியும் யோசிக்கத் தொடங்கி னாள். அதற்குப் பிறகு நடந்தது எல்லாம் நமக்குத் தெரிந்ததுதான்.
                              இவற்றைப் பார்க்கும் போது கைகேயி யை குலத்தைக் கெடுக்க வந்தவர் என்று தான் நம் பத் தோன்றும். ராமனும் தந்தை சொல்கேட்டு 14 வருடம் காட்டுக்கு கிளம்பினான். பெரியாழ்வார் தன் னுடைய எட்டாம் திருமொழியில்  "கூன் தொழுத் தை சிதகுரைப்பக்* கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு* ஈன்றெடுத்த தாயரையும்*இராச்சியமும் ஆங்கோழிய* கான் தொடுத்த நெறி போகிக் கண்ட கரைக் கலைந்தானூர்* தேன் தொடுத்த மலர் சோலைத்* திருவரங்கம் என்பதுவே." இதனைப் மேற்கண்டவாறு பாடுகிறார்
                                         இத்தனை விஷயங்கள் நடக்கும் போது பரதனும், சத்துருக்ணனும் அவனுடைய மாமா வீட்டிற்கு சென்று இருந்தனர். நடந்த விவரங் களைத் தெரிந்து கொண்ட பரதன் தாயை சந்திக் கிறான். எவ்வளவு சமாதானம் செய்தாலும் கேட்காத பரதன், கடும் சொற்களை தாயின் மீது வீசிவிட்டு
பட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து ராமனை .சந்தி க்க காட்டுக்கு செல்கிறான். வழியில் குகனின் சந்தே கத்தை நீக்கிவிட்டு (குகன் பரதன் ராமனுடன் போரா டத் தான் வருகிறான் என்று தவறாக நினைக் கிறா ன்) சித்திரக்கூடம் வந்து ராமனை சந்திக்கிறான்.
அயோத்தியில் நடந்த (தந்தை வானுலுகம் சென்ற விபரம்) வற்றை எடுத்துக் கூறி உடனே ராமனை நாட்டிற்கு திரும்பி ராஜ்ஜியத்தை ஏற்றுக் கொள்ளும் படி மன்றாடுகிறான். ராமன், " பரதா, உன்னுடைய ஆதங்கம் எனக்குப் புரிகிறது.நம்முடைய தாய் நமக்கு இட்ட கட்டளை என்ன? ராமன் காட்டிற்கு போகவேண்டும் பரதன் நாட்டை ஆளவேண்டும்.
என்பதுதானே? இதைத் தானே நமது தந்தையும் ஆணை இட்டார். மாதா, பிதா, குரு, தெய்வம்
என்ற வரிசைப்படி தாய் தந்தை சொல்வதைக் கேட் கவேண்டாமா? பாபம் நமக்கு வந்து சேராதா? பின் னால் வரும் மக்கள் நம்மைப் பற்றி என்ன நினை ப்பார்கள். அதற்கு இடம் கொடுக்கலாமா ?நான் ஆண் டால் என்ன? பரதன் ஆண்டால் என்ன? என்ன பதி னான்கு வருடங்கள் தானே? நிமிடமாக ஓடிவிடும்."
சமாதானம் சொல்லி பரதனை அனுப்ப முயற்சிக் கிறான் ராமன். என்ன சமாதானம் சொல்லியும் கேட் காத பரதன் முடிவில், "சரி, நீ வராவிட்டால் உன க்குப் பதிலாக இந்த பாதுகையை ஆசிர்வதித்துத் தா. அதை உனக்குப் பதிலாக நாட்டை ஆளும் படி செய்கிறேன்" என்று கூறி தான் கொண்டு வந்திருந்த பொன்னாலும் மணிகளாலும் இழைக்கப்பட்ட பாது கையை ராமனுக்கு முன்னாள் சமர்ப்பிக்கிறான்.
ராமனும் பாதுகையின் மீது ஏறி அதனைக் கடாட் சித்தான். பாதுகையை தனது சிரசின் மீது வைத்துக் கொண்டு, ராமனிடம் இருந்து பிரியா விடை பெற்று பாரத்வாசர் ஆசிரமத்திற்கு வந்து பாதுகையை வைத்து நந்திகிராமத்திலிருந்து ராமனின் சார்பாக 14 ஆண்டுகள் ஆட்சி செய்த பரதன்,
                                                      ஸ்ரீ ராம பாதுகைகளையே சிம்மாசனத்தில் ஏற்றிவைத்திருந்தான். முடி சூடு வதைவிட இறைவனின் அடிசூடுவது உயர்வானது என்பதை பரதனின் செய்கை நமக்கு உணர்த்துகிறது
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். ஆஞ்சநேயர் சீதா தேவியைப் பார்க்க ராமன் தூதநாக இலங்கை க்கு வருகிறார்.
                             சீதையிடம் தன்னைப் பற்றியும், ராமர், சீதை இவர்களுக்கு இடையே நடந்த முக்கியமான
அடையாளங்களையும் சொல்லி தான் ராமனின் தூதன் உணர வைக்கிறார். இதற்காக பெரியாழ்வார்
"நெரித்த கருங் குழல்மடவாய்! நின்னடியேன் விண் ணப்பம், செரிந்தமணி முடிச்சனகன் சிலையறுத்து நினைக் கொணர்ந்த தறிந்து,அரசு களைகட்டஅருந்த வர்த்தோ னிடைவிலங்க செறிந்தசிலை கொடுதவ த்தை சிதைத்ததுமோ ரடையாளம் " என்று பத்துப் பாடல்கள் பாடியுள்ளார்
                                              அப்போது வருத்தம் தோய்ந்த குரலில்,"ராமனுக்கும் எனக்கும் முடிக்கும் சமயம் நான் அவருடைய கையைப் பிடித்தேன். அதலால் நான் வனவாசம் செல்ல நேர்ந்தது. அப்படியல்லா மல் அவருடைய பாதத்தைப் பற்றி இருந்தால் இந்த நிலை எனக்கு வந்திருக்காது " என்று கூறுகிறாள் .
அதாவது இறைவனின் பாதத்தில் சரணாகதி அடை ந்துவிட்டால் அவன் எப்பாடுபட்டாவது நம்மைக் காப்பாற்றுவான் என்பதை சீதையும் உணர்த்து கிறாள்.
                  பாதுகையின் பிரபாபம் பற்றி ஆச்சாரியார் தேசிகர் தன்னுடைய "பாதுகா சஹஸ்ரம் " என்ற நூலில் மிக அழகாக விளக்கியுள்ளார் இந்த ஆயிரம் பாடல்கள் கொண்ட நூலை ஒரு இரவுக்குள் எழுதி முடித்து அரங்கனுக்கு சமர்ப்பித்துள்ளார் என்றால் பாருங்கள் த்ரமிடோபநிஷந் நிவேசசூந்யாந் அபி லக்ஷ்மீரமணாய ரோசயிஷ்யந் த்ருவமாவிசதி ஸ்ம பாதுகாத்மா சடகோப: ஸ்வயமேவ மாநநீய:
எல்லோரும் பெருமாளையடையவேண்டுமென்று
எண்ணங்கொண்டு நம்மாழ்வார் திருவாய்மொழி செய்தருளினார். அந்தத்திருவாய்மொழியையும் சிலர் நெட்டுருபண்ணுகிறதில்லை. அவர்களும் பெருமாளையடைவதற்காக ஆழ்வார் பாதுகையாக அவதரித்தார்.
                             அதாவது எல்லோரும் பெருமாளைய டைவதற்காக  ந்நிதிகளில் பாதுகையை எல்லோ ருக்கும்  துதிக்கிறார்கள். அதனால் பாதுகைக்கு சடகோபனென்று பெயர் இந்த நூல் எழுதுவற்கு காரணமானது ராமன் வனவாசம் சென்றது தானே?
மேலும் ராமாயணத்தில் பரதனின் குணங்களை உலகுக்கு எடுத்துச் சொல்ல இந்த இடம் முக்கிய மானது இல்லையா? இது மட்டுமா? கைகேயி வரம் கேட்பதற்கு முதல் நாள்: ராமனையும் சீதையும் தசரதர் பட்டம் சூட்டிக் கொள்வதற்கு முன்னால்
இறைவனை தரிசித்து விட்டு வரும் படி கூறுகிறார். ராமனுக்கு மனதிற்குள் கலக்கம். என்னடா, நாம் இந்த புவிக்கு வந்த காரணம் முடியாமலே போய் விடுமோ? (ராவணனை அழிக்கத் தான் அவதாரம் எடுத்துள்ளார்.) இதுவரை அதற்கான எந்த அறிகுறி யும் காணோமே? என்று இறைவனிடம் மன்றாடு கிறார். நல்ல வேளை! கைகேயி வரம் கேட்டார் களோ! நாம் பிழைத்தோம்!இந்த புவி பிழைத்தது! என்று ராமன் மகிழ்ந்தான். ஆக ராமாயணம் எழுத,
பரதனின் புகழ் வெளியே தெரிய, பாதுகையின் பிரபாபம் உலகுக்குத் தெரிய ராவணன் வதம் செய் யப்பட கைகேயி நல்லது தானே செய்துள்ளார்கள்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...