பின் தொடர்பவர்கள்

0030 பொறுத்தார் பூமி ஆள்வார் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0030 பொறுத்தார் பூமி ஆள்வார் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூன், 2015

0030 பொறுத்தார் பூமி ஆள்வார் !

பொறுத்தார் பூமி ஆள்வார் !

பொறுமையில் சிறந்தது உலகில் எதுவுமே இல்லை, அகழ்வாரை தாங்கும் நிலம், போல என்று பொறுமைக்கு பூமியை  சொல் வார்கள்। வாழ்வில் ஏற்படும் இன்னல்களை, இடை யூறுகளை, தடைகளை, கடுகளவும் சினமு றாது, இன்முகத்துடன் அவற்றை ஏற்று வெல்வது பொறுமை இந்த கருத்தை அழகாக சொல்லும் ஒரு சின்ன கதை இதோ! 

                                                  ஓர் ஊரில் வாழ்ந்து வந்த அண்ணன் தம்பிகளில், தம்பி சமர்த்தானவர், அண்ணன் சற்று சோம்பேறி ஒரு நாள் இருவ ரும் காட்டுக்கு விறகு வெட்டச் சென்றனர். இருவ ரும், காலையிலிருந்து மதியம் வரை கஷ்டப்ப ட்டு விறகு வெட்டி அவற்றை இரு கட்டுகளாகக் கட்டினர், பின்னர் தாங்கள் எடுத்துச் சென்ற கட்டுச் சாதத்தை உண்டு களைப்பைப் போக் கினர். அதன் பின்னர் அண்ணனும், தம்பியும் விறகு க்கட்டுகளைத் தலையில் வைத்துக் கொண்டு நடக்கலாயினர்.

                                        சிறிது தூரம் நடந்து சென்றவு   ட னேயே, விறகுக் கட்டுப் பாரமாக இருக்கிறதே என்று புலம் பிக் கொண்டே நடந்தார் அண்ணன், ஆனால் தம்பி எதுவுமே சொல்லாமல் நடந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த அண்ணன், இருவரின் சுமையும் ஒரே அளவில்தானே இருந் தது, ஆனால் தம்பி எதுவும் சொல்லாமல் எளி தாக நட ந்து வருகிறாரே என்று சிந்தித்தார். பின்னர் தம்பியிடம், உனக்கு விறகுக் கட்டுப் பாரமாக இல்லையா? என்று கேட்டார்.

                                   அதற்குத் தம்பி, இல்லை, எனது சுமை பாரமாக இல்லை, ஏனெனில் நான் அதில் ஒரு மூலிகை இலையை வைத்திருக்கிறேன் என்று சொன்னார்। அப்படியா! அந்த மூலிகை இலை என்ன வென்று சொன்னால் நானும் எனது சுமையில் வை த்துக் கொள்கிறேன் என்றார் அண்ணன்। அதற்குத் தம்பி, அந்த மூலிகை இலையின் பெயர் பொறுமை என்றார். வாழ்வில் ஏற்படும் இன்னல்களை, இடை யூறுகளை, தடை களை, கடுகளவும் சினமுறாது, இன்முகத்துடன் அவற்றை ஏற்று வெல்வது பொறுமை। அன்புடன் உங்கள் பேசாலைதாஸ் 

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...