பின் தொடர்பவர்கள்

0275 பூனை வொவ் வொவ் என்று கத்தும்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0275 பூனை வொவ் வொவ் என்று கத்தும்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 அக்டோபர், 2015

0275 பூனை வொவ் வொவ் என்று கத்தும்!

பூனை வொவ் வொவ் என்று கத்தும்! பேசாலைதாஸ்

அன்பர்களே நாம் புலம்பெயர்ந்து அடுத்தவர் நாட்டில் வாழ்கின்றோம். புலம் பெயர்ந்த நாட்டில் நாம் வாழ்ந் தாலும், நமது பிள்ளைகள் இந்த நாட் டில் பிறந்தாலும் எமது மொழி கலாச் சாரம் இவைகளை அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தா லும், வாழும் நாட்டின் மொழி கலாச்சாரத்தையும் நாம் பின்பற்றவேண்டிய அவசியம் உண்டு. நமது பிள்ளைகள் புலம் பெயர் தேசத்தைச்சார்ந்தவர்களை திரும ணம் செய்தாலும், நமது பண்பாட்டு, விழுமியங்களை புலம் பெயர் நாட்டு மக்கள் பெருமையோடு கணிக்கும் அளவுக்கு நாம் வாழ வேண் டும் என சொல்லிக்கொடுக்கவேண்டும். 

                                    நோர்வே நாட்டுக்காரர்கள் தமிழ் பெண்களை விரும்பி திருமணம் செய்து, இனிய வாழ்வு வாழ்கின்றார்கள். அந்த அளவுக்கு எமது மாதர் குல மாணிக்கங்கள் தமிழ் பண்பா ட்டுக்கு பெருமை சேர்த்துவருகின்றார்கள்.எமது ஆண்களோ, நோர்வே நாட்டவர்கள் தமிழ் பண்பாட்டை அவமானமாக நோக் கும் அளவுக்கு  வாழ்ந்து வருகின்றார்கள். நோர்வே பெண்கள் தனிமனித சுதந்திர, புரட்சியாளர்கள் என்று தெரிந்திருந்தும், திருமணம் செய்கின்றார்கள், பின்னர் அவர்களை தள்ளிவிட்டு இன்னோரு பிள்ளையை அதுவும் வயது குறைந்த பெண்களை திருமணம் செய்து, திருமணத்தின் அர்த்தம் புரியாமல் வாழ் ந்து, தமக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் அவமரியாதை சேர்க்கின் றார்கள்.  

தமிழன்டா! தமிழ் ஆண்மகனை நம்பிவரும் எந்த பெண்களும் நம்பிகையோடு வாழலாம் என்ற தமிழ் பண்பாட்டு வேர்களை ஆழப்பதிக்கவேண்டும். கலாச்சார காவலர்கள் என தம்மை கூறிக்கொள்ளும் தமிழ் ஆண்கள் உணர்வார்களா? இதை உணர் ந்து, வாழும் பொழுதுதான் நமது பரம்பரைகள் பெருமையுட னும் தன்னம்பிக்கையுடனும் தைரியமாக வாழ முடியும் அப்படி நாம் வாழ்கி ன்றபோது, அந்த நாட்டின் மொழி, கலாச்சாரம், பண்பாடு இவைகளுக்கு நாம் மரியாதை செலுத்துகின்ற அதே வேளை, அந்த மொழியை கட்டாயம் நாம் கற்றுத் தான் ஆக வேண்டும் இல்லை என்றால் நமக்குள் இனந்தெரியாத தாழ்வு எண்ணம் ஒட்டிக்கொள்ளும். 

                                                  நோர்வே நாட்டு மக்களுக்கு சரிசமமாக நாம் வாழ வேண்டுமானல் அந்த மொழிக்கு கட்டாயம் முக்கிய த்துவம் கொடுத்தே ஆகவேண்டும். எனது எண்ணத்திற்கு வலு வூட்டும் என் கற்பனைக்கதை இது! 

பூனை வொவ்வென்று கத்தினால் என்ன நடக்கும் என்ற எனது மாற்றி யோசிக்கும் மூளையில் உதித்தகதை,,,,,,, ஒரு முறை ஒரு தாய் பூனையும் குட்டிப்பூனையும் இரவு நேரத்தில் வீதியிலே சென்று கொண்டிருந்தது. அதைக்கண்ட தெரு நாய் ஒன்று அந்த இரு பூனைகளையும் வொவ் வொவ் என்று குரைத்த படி துரத்தி ச்சென்றது. தாய் பூனையும், குட்டிப்பூனையும் தலை தெறிக்க தெருவிலே ஓடிக்கொண்டிருந்தது. 

                                               நாயும் விட்டபாடில்லை. தாய்ப்பூனைக்கு, நாய் ஏன் துரத்துகின்றது என்றே புரியவில்லை அதுவும் ஓடிக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் பூனைக்கு ஓட முடியவி ல்லை. சற்று யோசித்த பூனை திடீரென்று நின்று திரும்பி, தைரியமாக நாயின் கண்களை பார்த்தபடி, வொவ் வொவ் என்று கத்தியது. துரத்தி வந்த நாய் ஒரு முறை துணுக்குற்றது. என்னடா இது! பூனை மியா மியாவ் என்று தன் குரலில் கத்தாது வொவ் வொவ் என்று எனது குரலில் கத்து கின்றதே என்று அஞ்சி திரும்பி ஓடத்தொடங்கியது. 

                                         அப்போது, தாய்ப்பூனை குட்டிப்பூனையை பார்த்து சொன்னது "பார்த்தாயா அடுத்தவன் மொழி எவ்வளவு அவசியமானது "என்று குட்டிப் பூனை சரியென்று சொல்லி தலையாட்டியது. அன்பர்களே இந்த நாட்டில் நாம் முன்னேற வேண்டுமா? கட்டாயம் அவர்களின் மொழியையும், கலாச்சாரத் தையும் கூடவே கற்றுக்கொள்வது மட்டுமல்ல அதில் நமது திற மைகளை நிரூபிக்கவேண்டும் அப்படித்தான் நமது பிள்ளை களை உருவாக்கவேண்டும் .  அப்படி நிரூபிக்க துடிக்கும் உங்கள் அன்பு பேசாலைதாஸ் 

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...