பின் தொடர்பவர்கள்

0545 மனிதனாக பிறக்கவேண்டும்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0545 மனிதனாக பிறக்கவேண்டும்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 மே, 2018

0545 நான் மனிதனாக பிறக்கவேண்டும்!

நான் மனிதனாக பிறக்கவேண்டும்! 
                                       ஏவாள் சிரித்தால், அவளது இரு கன்னத்திலும் குழி விழும்,  ஏவாளைப் போல பெண் ஒருத்தியை ஆதாம் கண்டதே இல்லை. ஏவாளுக்கு முன்னர் பெண்கள் இந்த உலகத்தில் இருந்ததே இல்லையே! அப்படி இருக்க ஆதாமுக்கு, ஏவாளை விட்டால் வேறு யார்தான் துணையாக இருக்க முடியும்? ஏவாள் கடவுள் தந்த வரமாயிற்றே ஆதாமுக்கு!. ஏவாள் என்ன கட்டளையிட்டாலும், அல்லது ஆசையாக எதை கேட்டாளும் ஆதாமால் தட்டிக்கழிக்க முடியாது. ஏவாள் தான், ஆதாமின் அத்தனை அசைவுகளுக்கும் காரனம். அதனால்தான் அவளை, ஏவாள் என்று ஆதாம் ஆசையாக அவளை அழைத்தான்..                                                                  ஏவாள் என்றால் ஏவுகின்றவள் அதாவது கட்டளை பிறப்பிக்கின் றவள், அல்லது இப்படியும் அழைக்கலாம்,  ஆண்களை  ஆட்டிவைப்பவள் என்று, இது நிஜயம் தான். இப்போது ஆண்கள் எல்லாம் பெண்களின் அழ கில் மயங்கி, மகுடி கேட்கும் பாம்புகள் போல மயங்கி கிடக்கின்றார் களே! ஆண்கள் எல்லாம் ஆதாமின் வாரிசுகள் என்பதற்கு இதுவே நல்ல தோர் சாட்சி. என்னதான் ஏவாள், ஆதாமின் ஆசை மனைவியாக இருந் தாளும், கடவுள் சாப்பிடக்கூடாது என்று சபிக்கப்பட்ட, அப்பிள் மரத்தின் கனியை, ஏவாள் நீட்டிய பொழுது, ஆதாம் அதை வாங்கி கடித்திருக்கக் கூடாது. என்ன செய்வான் ஆதாம்,?  ஆதாமின் விலா எழும்பில், இருந்து எடுக்கப்பட்டவள் தானே ஏவாள்? ஏவாளின் ஏவுதலை, ஆதாமல் மறுதலி க்க முடியாது. எனவேதான் ஆதாம் ஏவளின் பழத்தை  கடித்தான்.                                                                                    ஆதாம் அந்த கனியை உண்டான். இறைவன் ஆதாமின் முன் தோன்றி, " விலக்கப்பட்ட மரத்தின் கனியை நீ புசித்தாயோ?" என்று கடுகடுப்பாக கேள்வி கேட்டார். ஆதாமுக்கும் ஆண்டவருக்கும் இடையில் ஒரு சம்பாஷனை.                               " ஆம் ஆண்டவரே நான் புசித்தேன்." இது ஆதாமின் பதில். " ஏன் புசித்தாய்? அதிகாரமிக்க ஆண்டவரின் கேள்வி. " நீர் எனக்கு துணையாக தந்த ஏவாள் புசிக்கும்படி தந்தாள், நான் புசித்தேன்" இது ஆதாமின் தாழ்மையான பதில்.  ஆண்டவருக்கு ஆத்திரம் வந்தது," ஏவாள் என்றால் அவள் சொல்வதை எல்லாம் நீ கேட்கவேண்டும் என்று சட்டமா?" மீண்டும் ஒரு கேள்வி ஆண்டவரிடம் இருந்து. "என்ன ஆண்டவரே, நானும் ஏவாளும் வெவ்வேறா? இரண்டு உடல், ஒரு மனம் இப்படியாக கணவன் மனைவியாக‌ வாழவேண்டும் என்றுதானே, உங்களது ஆசை" ஆதாம் பதில் சொல்லிவிட்டு, ஆண்டவரின் கண்களை பார்க்கின்றான். "உண்மைதான் ஆதாம், அதற்காக நீ சுயமாக சிந்தித் திருக்கவேண்டுமே!" இது ஆண்டவரின் பிரதிவாதம். " எப்படி எப்படி? ஆன்டவரே நான் சுயமாக சிந்திக்கமுடியும், ஏவாள் என் சதையின் சதை யாக, என் சிந்தனையின் மறு பக்கமாக இருக்கும் படி, என் விலாவில் இருந்து அவளை படைத்து, எனக்கு தந்தவர் நீர்தானே! அப்படி இருக்க இருவேறு சிந்தனைக்கு, எங்களுக்கு இடமேது ஆண்டவரே!" ஆதாம் சொன்னவுடன், கடவுள் சிந்தித்தார், ஆதாம் சொல்வது உண்மையே, ஏவாளும் ஆதாமும் செய்த அத்துமீறலுக்கு, தார்மீக பொறுப்பாக, படைத்தவன் என்ற ரீதியில், அதற்குரிய தண்டனையான மரணத்தை நான் சந்திக்கவேண்டும். ஆம் நான் மனிதானாக பூமியில், இயேசு என்ற நாமத்தில் மனிதனாக பிறக்கவேண்டும்! கடவுள் சிந்தனையில் மூழ்கினார். ஆண்டவருக்கு ஐடியா கொடுத்தவர் உங்கள் அன்பின் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...