பின் தொடர்பவர்கள்

பெண் குறில்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெண் குறில்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

0402 ஆண் நெடில், பெண் குறில்!

ஆண் நெடில், பெண் குறில்! (சிறுகதை) 

பல்கலைக்கழகத்தில் முதல் ஆண்டு ஒரு மாதிரி முடிந்துவி ட்டது, நல்ல பெறுபேறுகளுடன் தேவராஜா சித்தியடைந்திரு ந்தான். அவனுக்கு வேண்டிய பாடத்தில் எதையாவது ஒன்றில் சிறப்பு பட்டம் படிக்கும் வாய்ப்பு கள் இருந்தன, தேவாவின் அண்ணனும் அதே, பல்கலைக்க ழகத்தில் பொருளாதாரத்தில் சிறப்பு மாணவனாக கற்று க்கொண்டிருந்தான்,தேவாவின் அண்ணன், பொருளதாரம்   அல்லது வர்த்தக‌ம் இதில் ஏதாவது ஒன்றில் சிறப்பு நிலை பட்டம் பெற்றால் வங்கிகள் அல்லது நிறு வணங்களில் இலகுவாக வேலை எடுக்கலாம் என்று பலமுறை படித்து படித்து சொன்னான், எதற்குமே மசியாமல் அரசியல் விஞ்ஞானத்தை சிறப்பு பாடமாக கற்க முடிவெடுத்தான் தேவா. எதிர்காலத்தில் மன்னார் மாவட்டத்தில் ஒரு அரசியல்வா தியாகி பாரளமன்றத்தின் படிக்கட்டில் ஏறவேண்டும் என்ற ஒரே ஏக்கம் அவனுக்குள்! நினைத்தபடியே அரசியல் விஞ்ஞானத்தில் முதல்தர பட்டதாரியாகி வெளியேறினான் தேவா! அந்த நாட்க ளில் விடுதலை வேட்கை இளைஞர்களை போராளியாக்கி க்கொண்டிருந்த வேளை, தேவாவும் ஒரு இய்க்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு போராளியாகி, இறுதியில் நாட்டைவிட்டு அகதியாக துருவ‌ நாட்டில் வந்து சேர்ந்தான். கடுங்குளிர் நாட்டில் வெகு சீக்கிரம்,  தன் இளம்ஜெளவனத்தை இழந்தான். பக்கவா ட்டில் பாக்கியராஜா, நேராகப்பார்த்தால் அரவிந்தசாமி என்று தனக்குள்ளே சொல்லிக்கொள்ளும் தேவா, தன் தலைமுடி உதி ர்ந்து, மெல்ல  தலையில்   வழுக்கை தவழ்வதை உணராமல் இல்லை, எப்படியோ தலை முழுவதும் மொட்டையாவதற்குள் கல்யாணமாகி செட்டிலாகிவிட வேண்டும் என்று எண்ணி, கல்யாணத்திற்கு உத்தவிட்டான் தேவா, "அடே தேவா நான் பார்த்துவைத்திருக்கின்ற பிள்ளை, குனிந்த தலை நிமிரமா ட்டாள்,    வாய்க்கு ருசியாக சமைச்சு போடுவா, மெல்ல நடப்பாள் ரெம்ப சாதுடா" அம்மாவின் குமஞ்சான் வார்த்தையில் மயங்கி ப்போனன் தேவா, சரியம்மா அவளை ஏஜன்சி மூலமா அனுப்பி வையுங்கோ என்று சொல்லி, ஒரு மாதத்துக்குள் சட்டென்று லண்டன் எயார்போட்டில் வந்து தரை இறங்கினாள் ரதி!  பெயரு க்கு ஏற்ற  ரதி மாதிரி, பூவிலும் மெல்லிய பூங்கொடியாய் ,இரு ப்பாள் என்று மனக்கற்பனை பண்ணிய தேவாவுக்கு ரதியை பார்த்ததும் பகீர் என்றது மனதுக்குள்! பூங்கொடியாய் எண்ணி யது பூங்காவனமாய் உப்பி பெருத்த குண்டாய்,,,, என்ன செய்வது! விதி வலியது என்று வாழ்கையை தொடங்கினான், இருந்த போதும்,    தான் ஆண், என்ற நெடில் நினைப்போடு சதா வக்கனைப்பேச்சு  தொடர்ந்தது! ரதி மாதிரி பெயர் இருந்தென்ன பிரயோசனம்?  சிம்ரான் மாதிரி, திரிஸா மாதிரி ட்ரீமா உடம்பு இருக்குதா , பொங்கல் பானை மாதிரி உடம்பு உனக்கு இப்படியே வக்கனையும், கிண்டலுமாய் , காலம் கடந்தன. ரதியோ  என்ன செய்வாள்? பெண் என்றால் குறில் தானே! குறுகிப்போனள். வருடங்கள் ஐந்து தாண்டிவிட்டது. குழந்தைகள் ஏதும் இல்லை. ஆனாலும் வக்கனையும் கிண்டலும் குறையவே இல்லை. பொறு த்துப்பொறுத்து பார்த்தாள் ரதி, எல்லை மீறினாள் ஒரு நாள்! "போய் உங்களை கண்ணாடியில பாருங்கள் வழுக்கை தலை யும், தொந்தி வயிறுமாய் மந்தியாட்டம்" தடுமாறிப்போனான் தேவா! வழுக்கை தலை! தொந்தி வயிறு! அவன் காதுக்குள் எதி ரொலித்தது. ஆண் மகன் என்ற  ஆணவம்! ஆண் என்ற நெடில் நினைப்பு குறுகத்தொடங்கியது. ஆண் என்றால் நெடில், பெண் என்றால் குறில்  என்ன கேவலம் கெட்ட உலகம்  இது! குற்ற உண ர்வுடன் ரதியை  பார்த்து கட்டித்தழுவுகின்றான் தேவா! அன்புடன் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...