மின்னுவதெல்லாம் பொன்னல்ல
பூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய்து வந்தார்.
அவரை கொடைவள்ளல் என்றும் தாராளப் பிரபு என்றும் வானளாவப் புகழ்ந்தனர்.எந்த உதவிஎன்றாலும் தனகொடியைக் கேட்டால் கிடைக்கும் என்று நம்பியிருந்தனர்.அந்த தனவந்தரிடம் முனியன் என்று ஒரு வேலைக்காரன் இருந்தான்.பல வருடங்களாக அவரிடம் வேலை செய்து வந்தான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான்.தன மகன் வேலுவை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று முனியன் விரும்பினான்.வேலுவும் பள்ளியில் நன்றாகப் படித்து வந்தான்.
அவ்வூரின் தனவந்தர் தனகோடியின் மகனும் அதே வகுப்பில் படித்து வந்தான்.ஆண்டு முடிவில் தேர்வு முடிவுகள் வந்தபோது வேலு அதிக மதிப்பெண் எடுத்து பள்ளியிலேயே முதலாவதாக வந்திருந்தான்.
தனகொடியின் மனம் பொறாமையில் தவித்தது.தன்னிடம் உதவி கேட்டு வந்த முனியனைக் கடுமையாகப் பேசினார்."முனியா, உன் மகனுக்கு என்னிடமே வேலை போட்டுத் தருகிறேன்.அவன் வருமானம் வந்தால் உனக்கு வசதியாக இருக்குமே. மேல்படிப்பெல்லாம் வேண்டாம். வீணாகச் செலவு செய்யாதே."என்று வேலுவின் மேல்படிப்புக்குப் பணஉதவி செய்ய முடியாது என்பதை ஜாடையாகத் தெரிவித்தார்.
இதைக் கேட்டு முனியனும் வேலுவும் கவலையும் கூடவே கோபமும் கொண்டனர்.உனக்கு இஞ்சினீயர் சீட்டு கெடைச்சும் பணமில்லாததாலே படிக்க முடியலையே.முதலாளி உதவி செய்வாருன்னு நினைச்சிருந்தேனே.புள்ளைய படிக்க விடாமே செஞ்சிட்டாரே."என்று புலம்பினான்.
ஆனால் வேலுவோ கலங்காமல் தன தந்தையைத தேற்றினான்."அப்பா, நான் வேலைசெய்து பணம் சேர்த்துப் படிப்பேன் அப்பா, நீங்க வருத்தப்படாதீங்க."என்று தேற்றினான்.
"தன பிள்ளைக்கு சீட்டுக் கிடைக்கலையின்னு பொறாமையிலே உன்னைப் படிக்க விடாம செஞ்சுட்டாரே.இவரோட பொறாமை பிடிச்ச மனசாலே இவுரு எவ்வளவு நல்ல காரியம் செஞ்சு நல்ல பேரு எடுத்து என்ன புண்ணியம்?"
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முனியனும் வேலுவும் முதலாளி வீட்டு வாயிலில் நின்று வருந்திக் கொண்டிருந்தனர்.
"அப்பா, நம்ப முதலாளி உண்மையிலேயே ஜனங்களுக்கு நல்லது செய்ய நினைக்கலேப்பா. அவரை நாலு பேரு புகழணும்னுதான் இப்படி செஞ்சிட்டு வராரு."
"இருக்கும். அவுக எப்படியானும் இருக்கட்டும் உனக்கு படிப்பு நிக்கிதே"
மன வருத்தத்துடன் நின்றான் வேலு.செய்வதறியாமல் சிந்தனையுடன் முனியனும் நின்றிருந்தான்.
அப்போது அந்தவீட்டு தோட்டக்கார முத்துராஜா அங்கே வந்தார்.அறுபது வயதைத் தாண்டினாலும் இளமையோடு காட்சியளிப்பவர். எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருப்பவர்.
"என்ன வேலு, காலேஜிலே சேரலியா.எப்போ சேரப்போறே?"
"அதுக்குத்தான் முதலாளிகிட்டே பணம் கேட்டேன் தாத்தா."
"குடுத்தாரா?"
வேலுவும் முருகனும் பெருமூச்சுடன் நின்றனர்.
"விடு தம்பி.எவ்வளவு கட்டணும்னு சொல்லு நான் அந்தப் பணத்தை உனக்குக் குடுக்குறேன்.நம்ம ஏழை ஜாதியிலே ஒருத்தன் படிக்க நான் உதவினேன் அப்படீங்கர திருப்தியே எனக்குப் போதும்பா."
"தாத்தா"என்று ஆசையுடன் அழைத்தபடியே அவரை நன்றியோடு கட்டிக் கொண்டான் வேலு.
முனியனோ "ஐயா நீங்க ஆயிரக்கணக்கான பணத்தை எப்படிப் புரட்டுவீங்க"என்றான் சந்தேகத்தோடு.புன்னகை புரிந்த முத்துராஜா,
"எங்க பூர்வீக சொத்தை வித்து வந்த பணம் அது."
"ஐயா,அதுஉங்கபொண்ணுகலியாணத்துக்குன்னுல்ல சொன்னீங்க "தடுமாற்றத்துடன் கேட்டான் முனியன்.
புன்னகையுடன்முத்துராஜா, "படிப்புக்கு அப்புரம்தாம்பா மத்ததெல்லாம் கலியாணத்துக்கு ஆண்டவன் வேற வழி காட்டுவாரு. நீ நாளைக்கே போயி காலேஜிலே சேர்ந்துடு என்ன. யோசிக்காதே வேலு! நீ நல்லாப் படிச்சு இந்த ஊருக்கு நல்லது செய்யணும்தம்பி "என்று சொன்னவர் வேலுவின் தலையில் கை வைத்து ஆசிகூறி நடந்தார்.தெய்வமே நடந்து போவது போல் உணர்ந்தனர் முனியனும் வேலுவும்.
வேலு தந்தையிடம் கண்களில் நீர் மல்க,"அப்பா, கடவுள்தான் தாத்தாவா வந்திருக்குராருப்பா.ஊருக்கெல்லாம் உதவுற பணக்காரருக்கு இல்லாத நல்ல மனசு இந்த தாத்தாவுக்கு இருக்குதேப்பா."
"நாமுமநம்ம முதலாளி உதவி செய்வாருன்னு நம்பிட்டமேப்பா".
"இதைத்தாம்பா மின்னுவதெல்லாம் பொன்னல்ல அப்பிடீன்னு பழமொழியாச் சொல்லியிருக்காங்க.பணக்காரரும் உதவல்லே.அவரு பணமும் நமக்கு உதவல்லே."
நீ சொல்றதும் சரிதான் என்றபடி நிம்மதியுடன் படுத்துக் கொண்டான் முனியன். வேலுவும் தாத்தா சென்ற திசை நோக்கி வணங்கி விட்டுத் தானும் பாயில் தந்தையின் அருகில் படுத்துக் கொண்டான். இனிமேல் முத்துராஜாதானே அவனுக்குத் தெய்வம் அன்புடன் பேசாலைதாஸ்