பின் தொடர்பவர்கள்

0567 கள்ளுக்கடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0567 கள்ளுக்கடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 டிசம்பர், 2018

0567 கள்ளுக்கடை

கள்ளுக்கடை பக்கம் போகாதே! காலைப்பிடித்து கெஞ்சுகின்றேன். பேசாலைதாஸ்

கள்ளுக்கடை பக்கம் போகாதே! காலைப் பிடித்து கெஞ்சுகின் றேன், இது ஈழத்துப் பாடல், ஆனால் நான் உங்கள் காலை பிடி த்து கெஞ்சப்போவ தில்லை, காரனம் நான் கள்ளு குடிப்ப தற்கோ அல்லது மது அருந்துவதற்கோ எதிரானவன் அல்ல. நேர்மையாக சொல்லப்போனால் நானும் மது அருந்துபவன் தான். மது அருந்துவது தேவையான  ஒன்று தான், மகிழ்ச்சியாக இருப்பதற்கு, உடல் சோர்வை கலைவ தற்கு மது தேவைதான்! ஆனால் மது அருந்துவதிலும் ஒரு பண்பாடு உள்ளது. மது அருந்துவது பற்றிய ,போதிய அறிவா ர்ந்த தகவல் அல்லது அறிவு இல்லாதபடியால், நம் ஊர்மக்கள் குடிக்கத்தெரியாமல் குடித்து, தமது பணத்தை வீனாக்கி, தமது உடல் நலத்தையும் கெடுத்துக்கொள்கின்றார்கள்! 

                                                                        தமிழர் தம் பண்பாட்டில் மது அருந்துவது ஒரு பண்பாடாகவே இருந்து வந்துள்ளது. சோம பானம் தேவர்கள் குடித்து மகிழ்ந்தபானம். வேற்று கலாச்சா ரத்திலும் மரு அருந்துவது ஒரு பண்பாடாக இருந்துவந்துள் ளது, பைபிளில் நிறைய ஆதாரங்களை நான் எடுத்து காட்ட முடியும். நம்து பிதாப்பிதாவன நோவா திராட்சை இரம் பருகி போதையில் இருந்துள்ளார். பிதாப்பிதாவன யோசேப்பு, எகிப்திய மன்னனுக்கு பானபத்திரக்காரனாக இருந்துள்ளார். நம்து பிதா பிதாக்கள் செய்வதை, இன்று நம் ஊரவர்கள் செய் தால் அது பிழையான ஒன்றா? கானா ஊர் கல்யாணத்திலே நம்து ஆண்டவ்ர் அற்புதமான திராட்சை இரத்தை தனது புதுமையால் செய்தாரே அது பிழையானதா? அல்லது அந்த இரசம் போதையற்றது, புளிக்காதது என் சொல்லவருகின் றிர்களா? உண்மையில் தரமான மது பானங்களை அளவோடு குடித்தால் ஒரு போதும் உடல் நலத்துக்கு கேடாக இருக்காது.

                                      நோர்வே நாட்டு மக்களின் வாழ்க்கையோடு ஒன்றித்தவன் என்ற வகையில், நோர்வே நாட்டில் மதுபான பழக்கத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நோர்வே நாட்டு மக்கள், உலகத்திலே செல்வச்செழிப்பும்  மகிழ்ச்சியான வாழ்கை வாழும் மக்களாக   கணிக்கப்பட்டு ள்ளனர். நோர்வே நாட்டில் தனியார் மதுக்கச்டைகள் இல்லை. அரசாங்கமே அந்த மதுக்கடைகளை நடத்துகின்றது. மிக சொற்பமான கடைகளே ஒவ்வொரு நகரிலும் உண்டு. காலை ஒன்பது மணிக்கு திறக்கப்பட்டு, மாலை ஆறு மணிக்கு மூடப் படும் , விடுமுறை நாட்களில் அறவே மூடப்படும். 23 வயது மேற்பட்டவர்களே மது பானம் வாங்கமுடியும். 

                                                 அரச மதுபானக்கடைகள் வழக்கமாக, பெரிய சந்தை கட்டிடங்களில் அமைக்கப்பட்டிருக்கும். குடும்ப த்திற்கு மளிகை பொருட்கள் வாங்க வருபவர்கள், கூடவே மது பானக்கடைகளுக்கு செல்வார்கள். அங்கே ஆண்களுக்கான, பெண்களுக்கான குடிவகை இருக்கும். விரும்பியதை வாங்கிக் கொள்ளலாம், ஆனால் அங்கே குடிக்க முடியாது, வேறு எங்கும் குடிக்கமுடியாது, வீட்டிலே மட்டுமே குடிக்கமுடியும். எனவே ஒவ்வொரு வீட்டிலும் பிரோக்களில் வைன், வொட்கா, விஸ்கி, கொணியாக் போன்ற வகை வகையான மதுபானங்கள் வீட்டில் இருக்கும், மனைவியோடு நண்பர்களோடு அளவாக குடித்து, நன்றாக சாப்பிட்டு, மகிழ்ச்சியாக விடுமுறை நாட் களை கழிப்பார்கள். 

                                              வெள்ளி இரவு, சனி இரவு இந்த இரண்டு நாட்களிலும் களியாட்ட இடங்களுக்கு சென்று நன்றாக குடித்து மகிழ்வார்கள். ஞாயிறுவாரம் ஓய்வாக கழித்துவிட்டு, திங்கள் கிழமை தமது காரியாலயம் செல்வார்கள். திங்கள் தொடக்கம்  வெள்ளிவரை தமது தொழிலில் கவனமாக இருப் பார்கள்.    களியாட்ட விடுதிகளுக்கு என சட்டதிட்டங்கள் உண்டு, உணவு விடுதிகளில் சாப்பாடுடன் மதுபானம் விற்க ப்படும் . களியாட்ட விடுதிகள் இரவு பத்து மணிக்கு திறக்கப் பட்டு, அதிகாலை மூன்று மணி வரை திறந்து இருக்கும், இது நோர்வே நாட்டு பழக்கவழக்கம், ஆனால் லண்டன் பரீஸ் நகர ங்களில் மதுபானம் எல்லாக்கடைகளிலும், எல்லா நேரமும் விற்கப்படுகின்றது. பூரண சுதந்திரம் அங்கே உண்டு. 

                                       நோர்வே நாட்டில் களியாட்ட விடுதிகளுக்கு என சட்டதிட்டங்கள் உண்டு, உணவு விடுதிகளில் சாப்பாடுடன் மதுபானம் விற்கப்படும் . களியாட்ட விடுதிகள் இரவு பத்து மணிக்கு திறக்கப்பட்டு, அதிகாலை மூன்று மணி வரை திறந்து இருக்கும், இது நோர்வே நாட்டு பழக்கவழக்கம், ஆனால் லண்டன் பரீஸ் நகரங்களில் மதுபானம் எல்லாக்கடை களிலும், எல்லா நேரமும் விற்கப்படுகின்றது. பூரண சுதந்தி ரம் அங்கே உண்டு. இவ்வளவும் இங்கே நான் விபரமாக விள க்க முற்படுகின்றேன் எதற்கு என்றால், நமது மக்களும் மது பான பாவனைபற்றிய விளக்கம் தெளிவு, இருக்கவேண்டு. 

                                                     நமது கிராமம் எழையானது எனவே விலை உயர்ந்த வெளிநாட்டு மது பானங்களை எண்ணிப்பார் க்க முடியாது. உள்நாட்டில் விற்கப்படும் சாரயங்கள் மிக அதி கமாக குடித்தால் உடல் நலம் நிட்சயமாக பாதிக்கப்படும். அதைவிட சட்டவிரோத வடி சாரயம் இன்னும் ஆபத்தானது. கஸ்டப்பட்டு உழக்கும் மக்களை குடிக்காதே என தடுப்பது, அவர்களின் வாழ்வியல் உரிமையை பறிப்பதாகும். எனவே என்ன செய்யலாம் என்பதை ஒவ்வொரு கிராமத்தில் உள்ள சமய நிர்வாகங்கள் ஒன்று கூடி ஆலோசிக்கலாம், அல்லது உள்ளூராட்சி அமைப்புகள் சமூக நல அமைப்புகள் கலந்து ஆலோசிக்கவேண்டும். 

                                                             மதுபானக்கடைகள் குறிக்கப்பட்ட நேரம் மட்டுமே திறந்து இருக்கவேண்டும் என தீர்மானிக்க லாம். சாரய கடைகளில் மதுபானம் வாங்கலாம், அங்கேயே வைத்து அருந்துவது தடை செய்யலாம். இது எதற்காக என் றால் பாடுபட்ட சேர்த்த பணம் அத்தனையும் சாரயகடைக ளில்  கொட்டி மூக்கு முட்ட குடித்துவிட்டி அங்கேயே சண்டை பிடித்து, விழுந்து கிடக்கும் பரிதாப நிலை ஏற்படுகின்றது. அவ்வாறன நிலைய ஒரு மது பாவனையாளருக்கு வருவதை சாரய கடை உரிமையாளர் தவிக்கவேண்டும். போதையில் இருப்பவருக்கு மீண்டும் மீண்டும் மது விற்பதை நிறுத்த வேண்டும். அவர் மீண்டும் மதுக்கடைக்குள் வருவது தவிர்க்க படல் வேண்டும் எனவேதான் மதுக்கடைகளில் மது விற்கலாம் ஆனால் அங்கே வைத்து குடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். அப்படி உரிமையாளர் இலாபம் கருதி மறுத்தால், வன்முறையை பாவித்து சாரயக்கடைகளை அடித்து மூடவே ண்டும். உரிமையாளர் சட்டத்தை நாடுவார் அதனை எதிர் கொள்ள சமய பொது அமைப்புகள் முன்வரவேண்டும்.

                                                                        குடுமப தலைவிமாருக்கும், அம்மாக்களுக்கும் அன்பான வேண்டுகோள், நல்ல ஆரோக்கி யமான மது பழக்கவழக்கத்தை வீட்டில் ஆரம்பியுங்கள். உழை த்து களைத்து வரும் உங்கள் கணவன்மாருக்கு ஆசையாக அன்பாக மது பானத்தை உங்கள் கைகளால் ஊட்டிவிடுங்கள், போதை ஏறியதும் அன்பாக சுவையான உணவை ஊட்டிவிடு ங்கள். இரவு என்றால் உல்லாசமாக மற்ற இன்பத்தையும் கொடுங்கள், நீங்களும் சந்தோசமாக களவி கண்டு, கழித்திரு ங்கள், உங்கள் கணவன் உங்கள் காலடியில் தவம் கிடப்பான். பின்னர் சாரயக்கடைப்பக்கமே போகமாட்டான்.


                                                வீட்டிலே மது போத்தலும், மனைவியும் காத்திருக்க பின்னர் ஏன் சாரயகடைகளை  எவன் நாடுவான்? நண்பர்களோடு மது அருந்தவேண்டும் என்றால் அதற்கும் அவ்வப்போது வீட்டில் அனுமதியுங்கள், அந்த நணப்ர்கள் யார், ஒருவேளை உங்கள் உறவுக்காரனாக இருக்கலாம், உங்களு க்கு தெரிந்தவராக இருக்கலாம், அனுமதியுங்கள், அப்ப்டியெ நீங்களும் உங்கள் கணவரை அவரது நணப்ர் வீட்டில் மது அருந்துவதை தடை செய்யாதீர்கள், இதனால் வீட்டில் உள்ள கஸ்டங்கள் மற்றவருக்கு தெரியவரும் , உறவு பலப்படும், இதுதான் மேலைத்தேசங்களில் குடும விருந்துபசாரங்கள் நடக்கின்றது. கல்யாணம் சங்கு இவைகளுகுத்தான் நாம் உறவுகளை கூட்டி கொண்டாடுகின்றோம். தனிப்பட்டவிதமாக குடும்பம் ஒன்றை தனியாக அழைத்து உண்டு குடித்து மகிழ் வதை காணமுடியாது உள்ளது. எனவே மீண்டும் சொல்கின் றேன், ஆரோக்கியமான நல்ல குடிப்பழக்கத்தை வீட்டில் இருந்து ஆரம்பியுங்கள்


                                                       மதுபான கடை உரிமையாளர்களே! நீங்களும் சற்று சமூக உணர்வுடன் சிந்திக்கவேண்டும், எவன் எக்கேடு கெட்டால் எனகென்ன. எனக்கு இலாபம் வந்தால் போதும் என நினைக்காதீர்கள். அது ஆசீர்வாதமான பணவர வல்ல! இதனால் உங்கள் வம்சம் தலைத்தோங்கப்போவது இல்லை. சாபமாக வந்துவிழும்! நீங்கள் கடை திறக்காவிட் டால் இன்னொருவன் திறப்பான் என நீங்கள் சொல்வது நியாயமே. நீங்கள் கடையை நடத்துங்கள் தப்பே இல்லை, ஆனால் சற்று சமூக உணர்வோடு செயல்படுங்கள்! குடிப்ப வன் யார்? எமது மாமன் மச்சான் அண்ணன் தம்பிகள் என்று எண்ணுங்கள், இவர்களுடைய பொருளாதார, உடல் நலத்தில் நீங்களும் அக்கறை கொள்ளுங்கள், அளவோடு விற்கப்பாரு ங்கள், வீட்டுக்கு கொண்டுபோய் குடிக்கச்சொல்லுங்கள். வீட்டிற்கு நேரடியாக போத்தல்களை விற்க ஏற்பாடு செய்யுங் கள் பெண்மணிகள் சாரயக்கடை ஏறி, தம் கணவர்மாருக்காக வாங்க சங்கோஜப்படுவார்கள். இதை கருத்தில் கொள்ளுங் கள். எப்படி குடிப்பது? எவ்வளவு குடிப்பது? அளவுக்கு அதிக மாக குடிப்பதினால் ஏற்படும் தீமை பற்றி, சமூக விழிப்புண ர்வு கூட்டத்தை, உரிமையாளர்கள் நடத்த முன்வரவேண்டும். இலாபம் சம்பதிக்கும் நீங்கள், இதனை ஏன் செய்யக்கூடாது? நன்றாக சிந்தியுங்கள்! இளைஞர்களே! நீங்களும் நன்றாக் சிந்தியுங்கள், உங்களை மது அருந்தவேண்டாம் என்று சொல் லவில்லை. கண்ணியமான முறையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல், உங்கள் வருங்கால இலடசியம் சிதைந்து போகா மல், உங்கள் கல்வி குழம்பாமல், உங்கள் செல்வம் குறையா மல், கவனமாக மதுவை கையாளுங்கள், நீங்கள் அதற்கு எஜமானாக இருங்கள், மது உங்களுக்கு எஜமான் அல்ல! அரோக்கியமான உணவு, மது பழக்கத்தை கற்றுக்கொள் ளுங்கள். என்றும் சந்தோசமாக, கடவுளுக்கு அடிபணிந்தவ ர்களாக வாழ்ந்து இன்பங்காணுங்கள் ,
,, அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்


ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...