இலவசமாய் கிடைப்பதற்கு மதிப்பில்லை பேசாலைதாஸ்
இலவசமாய் நமக்கு கிடைப்ப தைப்பற்றி நாம் ஒருபோதும் அக்கறைப்படுவதில்லை, அதன் பெறுமதியும் நமக்கு தெரிவதி ல்லை. சுத்தமான நீரைப்பற்றி முன்பு மக்கள் அக்கறைப்பட்ட தில்லை, ஆனால் வரட்சி ஒரு புறம். சூழல் மாசடைதல் மறு புறம் வந்தவுடன் நல்ல சுத்த மான நீரின் அருமை பற்றி மக் கள் கவலைப்படுகின்றார்கள். இதே போன்றதொரு நிலைமை நாம் சுவாசிக்கும் காற்றுக்கும் ஏற்படலாம்! இதை அழகாக விளக்கும் அருமையான உண்மை சம்பவம் இதோ!
பெரும்பாலும் அவரைக் கடந்து செல்லும்போது நின்று இரசித்தவர்கள், சிறுவர்களே. 45 நிமிடம் அவர் தொடர்ச்சி யாக வாசித்து முடித்தவுடன் ஒரு வர் கூட கை தட்டவில்லை, யாரும் பாராட்டவி ல்லை. அவர் வாசித்து முடித்துவிட்டார் என்ப தைக் கூட அங்கிருந்தவர்கள் பொருட்படுத்தவில்லை. அவருக்கு கிடைத்தது மொத்தம் 32 டாலர். அங்கு வயலின் வாசித்தது, உலக த்தின் மிகச் சிறந்த வய லின் வித்வான், ஜோஷுவா பெல், என்பது அங்கு இருந்த யாருக்கும் தெரியவில்லை. அவர் வாசித்த வயலி னின் விலை 3.5 மில்லியன் டாலர்கள். இர ண்டு நாட்களுக்கு முன் னர் அவர் அரங்கில் நடந்த இசை நிகிழ்ச்சியை ரசிக்க நுழைவு கட்டணம் 5000 ரூபாய். இது ஒரு உண்மை சம்பவம். வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிக்கை, பொது மக்களின் இசை பற்றிய ஆர் வம், அவர்களின் நடவடிக்கைகள், கரு த்துகளை தெரிந்துகொள்ள இந்த முயற்சியை மேற் கொண்டது. ஒரு பொது இடத்தில் எவ்வளவு பெரிய இசை கலைஞன் இசை நிகழ்ச்சி நடத்தினாலும் இது தான் நிலை. மக்கள் யாரும் உண்மையான திறமை க்கு மதிப்பு கொடுப்பதில்லை. எதிர்பாராத இடத்தில் எத்தனையோ இசை கலைஞர்கள் அருமையாக வாசிக்கிறார்கள், ஆனால் அதை யாரும் காது கொடு த்து கேட்பதுமில்லை, பாராட்டுவதுமில்லை.