அப்பாவின் அன்பான பொய்கள். பேசாலைதாஸ்
மருத்துவமனைதொட்டிலில் நான் முதன் முறையாக அழுதபோது.. கடன் வாங்கி கட்டணம் செலுத்தி யதை மறைத்து.. மகாராணி பிறந் திருப்பதாக பொய் சொல் லியும்.. நடந்து பழகுகையில்.. கல்தட்டி விழு ந்து அழும்போது.. கல்லை குச்சியால் தட்டி, அந்த கல் , அழுவதாக பொய் சொல்லியும்.. இரவுகளில் பேய்க் கனவு கண்டு.. பாதியில் எழுந்து அழும் போது,,தோள்களில் இறுக்க மாய் அணைத்துக் கொண்டு பேய் ஓடிப்போனதாக பொய் சொல்லியும்.. முதல்நாள் பள்ளியில் அமர்வதற்கு அழுத போது..இரண்டு தினங்களில், தானும் பள்ளியில் சேரப்போவதாக பொய் சொல்லியும்.. குலதெய் வம் கோவிலில்.. காது குத்திக்கொண்டு அழுத போது,, இன்றிலிருந்து சாமி யோடு "டூ " விட்டு விட்டதாக பொய் சொல்லியும்.. காய்ச்சலுறும் தருண ங்களில்,, ஊசி வேண்டாமென அழும் போது.. மாத்திரை மட்டும் தரச் சொல்லி மருத்துவரிடம் சொல்லியிருப்பதாக பொய் சொல்லியும்.. குறைந்த மதிப்பெண்ணிற்காக, அம்மாவிடம் திட்டு வாங்கிக்கொண்டு அழுத போது.. வாத்தியாருக்கு படிக்க தெரியவில்லை,, என பொய் சொல் லியும்.. திருமணம் முடிந்து,,, புகுந்தவீடு செல்வதற்கு அழுதபோது.. மகிழ் வோடு வழியனுப்புவதாக பொய் சொல்லியும்.. என்னை ஏமாற்றிய அப்பா... தோள்மீது பேத்தி ஏறியதும்,, தொடர்ச்சியாக பலமுறை இருமி விட்டு.. துளியளவு தைலத்தில் எல்லாமே சரி யாகிப்போனதாக, எனது மகளிடம், மீண்டும் ஏமாற்ற துவங்குகிறார்...!! அன்புடன் பேசாலைதாஸ்