பின் தொடர்பவர்கள்

0083 மகிழ்வைத்தரும் விம்பங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0083 மகிழ்வைத்தரும் விம்பங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூன், 2015

0083 மகிழ்வைத்தரும் விம்பங்கள்

மகிழ்வைத்தரும் விம்பங்கள்

                                                                                           
உண்மை சந்தோசம் எங்கே இருக்கின்றது என்பதற் கான ஓர் குட்டி கற்பனைக்கதை கேளுங்கள் உறவு களே! சாக்கடை  ஓர‌மாக நடந்துகொண்டிருந்த ஒரு வன், சாக்கடையில் ஏதோ ஒன்று மின்னு வதைக் கண்டான். நன்றாக உற்று நோக்கிப்பார்த் தான். அது தங்க நகை போல மின்னுவதைக்கண்டான். கையை விட்டு துலாவிப்பார்த்தான் அது கையில் அகப்படவி ல்லை. இப்போது இடுப்பளவு சாக்கடை நீரில் இறங் கிப்பார்த்தான் பயனில்லை. கரைக்கு வந்து மீண்டும் பார்த்தான் அதே தங்க நகை மீண்டும் பளிச் சென்று மின்னியது. இப்போது அவன் சாக்கடையில் நன் றாக மூழ்கித் தேடினான். ஒன்றும் பயனில்லை சலி ப்புடன் அவன் கரைக்கு வந்து பார் த்தான் ஆனால் அதே இடத்தில் மீண்டும் அந்த நகை மின்னியது. அப் போது அவ்வழியால் வந்த முனிவர் ஒருவர், சாக்க டையில் என்ன உற்று நோக்கிப்பார்க்கின்றீர்கள் என்று கேட்டார். தங்கநகை என்று சொன்னால், முனிவர் அபகரித்துவிடுவார் என்று எண்ணி, ஏதோ சொல்லி சலப்பினான். பயப்படாதே நான் ஒன்றை யும் எதிர்பார்க்கமாட் டேன் சொல்லும் என்றார் முனிவர்..அதற்கு அவன் சாக்கடையில் தான் தங்க நகை இருப்பதைக்கண்டு, அதை எடுக்க முயன்று, அது முடியாது போய்விட்டது என்று சொன்னான். அந்த முனிவரோ அந்த இட த்தை நன்றாக நோட்ட மிட்டு, அவனிடம், நகை இருக்கும் இடத்தில் தான், இருக்கின்றது, நன்றாக பாருங்கள். எல்லா இடமும் பாருங்கள், என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். 
                                                அந்த மனிதனோ முனிவர் சொன்னபடியே எல்லா இடமும் பார்த்தான் மேலே நிமிர்ந்து பார்த்தான். ஆனந்தத்தில் குளிர்ந்து போனா ன். தங்க நகை மேலே மரக் கொப்பில் தொங்கிக்கொ ண்டிருந்தது, அதன் விம்பம் மட்டுமே சேற்றில் தெளிவாய் தெரிந்தது. சராசரி மனிதர்கள் இப்படித் தான், மகிழ்ச்சி என்று சொல்லி, மாயவிம்பத்தில் மாய்ந்துபோய், உண்மை மகிழ்வைத்தொலைத்து விட்டு கவலைப்படுகின் றனர். பொய்மைக்கு கொடு க்கும் மதிப்பை, மெய் மைக்கு கொடுப்பதில்லை. நிஜ‌த்தை மறந்துவிட்டு, மனமகிழ்ச்சிக்காக நிழலை த்தேடுகின்றான் மனிதன். உண்மையையும் சத்திய த்தையும் தேடினால் அது உங்களை விடுவிக்கும், உங்களுக்கு உண்மை மகிழ்வைத்தரும்.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...