செக்கு மாடுகள்
அன்பர்களே நம்மில் ஒரு சிலர் நமது பழக்க தோசத்தினால் பல தவறான செய ல்களை செய்துவிட்டு தவிக்கின்றோம். அதனை விளக்க இந்த கதை
ஒரு ஊரில் செல்வந்தர் ஒருவர் இரு ந்தார். அவர் தம் வண்டிக்காரனை அழைத்து, நாளை காலை நாம் பக்கத்து ஊருக்கு ஒரு திரும ணத்துக்கு செல்லவேண்டும். திருமணம் காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனால் இரவு 3 மணிக்குக் கிள ம்பினால் தான் போகமுடியும். நீ இரவு தூங்கிவிடா மல் எழுந்து வண்டி யில் மாட்டைக் கட்டிவிட்டு என்னை எழுப்பிவிடு என்று சொன்னார்.
வண்டிக் காரனும் சரி என் றான். பின் அந்த செல்வந்தர் அந்த வண்டிக்காரனிடம். ஆமாம் எந்த மாடுகளை வண்டியில் பூட்ட இருக்கி றாய்? என்றார். நேற்று அந்த செக்கு க்காரரிடம் வாங் கினோமே இருமாடுகள். அவற்றைத்தான் ஐயா என் றான் அந்த வேலைக்காரன்.இவரும் சரிப்பா மறந்து டாதே.. தூங்கிவிடாதே என்று எச்சரித்துவிட்டுத் தூங்கச் சென்றுவிட்டார்.
இவனும் சரியான நேரத்துக்கு எழுந்து மாடுகளைப் பூட்டிவிட்டு மெத்தைகளெல் லாம் போட்டுவிட்டு செல்வந்தரை சரியாக 2.45 மணி க்கு எழுப்பினான். நல்ல தூக்க த்திலிருந்த அவரும் பாதிக் கண்களைத் திறந்துகொண்டு வந்து மீதித்தூக் கத்தை மாட்டுவண்டியிலேயே தொடர்ந்தார். வண்டி க்காரனுக்கும் தூக்கம் கண்களைத் தழுவியது. இரு ந்தாலும் சமாளித்து க்கொண்டே வந்தான். மாட்டு வண்டி இவர்கள் செல்லவுள்ள முதன்மைச் சாலை க்கு வந்ததும் இவனும் இந்த ச்சாலை நேராக அந்த ஊருக்குத் தானே செல்கி றது. நாம் ஏன் விழித்துக் கொண்டே வரவேண்டும். மாடுகள் ஓடும் மணி யோசை காதுக ளில் கேட்டுக் கொண்டே தானே வருகிறது. மாடுகளின் மணி யோசை நின்றால் மட்டும் நாம் விழித்துப்பா ர்த்தால் போதாதா? என்று தோன்றியது. அதனால் மாட்டுக்கார னும் வண்டி யில் அமர்ந்த நிலையிலேயே நன்றாகத் தூங்கி விட்டான்.
சிறிதுதூரம் சரியான வழியில் சென்ற மாடுகள், முன்பு தாம் இருந்த செக்குக்காரர் வீட்டுக் குச் செல்லும் வழிக ளைக் கண்டதும் வளைந்து அங் கே சென்றுவிட்டன. சென்ற மாடுகள் இத்தனை ஆண்டுகாலமாகத் தாம் சுற்றிக் கொண்டி ருந்த செக் குகளைப் பார்த்ததும். பழைய நினைவு வந்து அந்த செக்கையே விடியவிடிய சுற்றிக்கொண்டிருந்தன. மாடுகளுக்கு நினைவு நாம் செக்கைத்தான் சுற்றிக் கொண்டிரு க்கிறோம் என்று, வண்டிக்காரனுக்கு நினைவு நம் மாடுகள் விரைவாகவும், சரியான பாதையிலும்தான் சென்று கொண்டிருக்கின்றன என்று,செல்வந்தருக்கு நினைவு நாம் திருமணத்து க்கு உரிய நேரத்தில் சென்றுவிடுவோம் என்று.. பொழுதும் விடிந்தது… வண்டிக்காரனும், செல்வந்த ரும் இன்னும் தூங்கிக் கொண்டு தான் இருக்கிறா ர்கள்..வண்டி மாடுகளும் செக்கைச் சுற்றிக் கொண் டே தான் இருக்கின்றன. மணியோசையும் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறது. அந்தச் செக்குக்காரர் வந்து இந்தக் காட்சியைப் பார்த்து சிரியோ சிரியெ ன்று சிரித்தார். பின் அருகே சென்று அந்த வண்டி மாடுகளை நிறுத்திவிட்டு அந்த செல்வந்தரை எழு ப்பி என்னங்க நேற்று ஏதோ திருமணத்துக்குப் பக்க த்து ஊருக்குப் போறேன் என்று சொன்னீங்க. இங்கு வந்து சுற்றிக் கொண்டிருக்கிறீங்க? என்று கேட்டார். நொந்துபோன செல்வந்தார் அந்தவண்டிக்காரனை வேலையை விட்டு நீக்கிவிட்டார். என்றொரு கிரா மியக் கதை உண்டு அன்புடன் பேசாலைதஸ்