பின் தொடர்பவர்கள்

0565 குரங்கு விஸா! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0565 குரங்கு விஸா! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 ஆகஸ்ட், 2018

0565 குரங்கு விஸா!

குரங்கு விஸா! பேசாலைதாஸ்

      அன்பர்களே இருக்கும் இட த்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே! என்ற ஒரு சினிமா பாடல் வரி இரு க்கின்றது அல்லவா அதை நினைத்து இந்த கதையை எழுதுகின்றேன். என்னதான் இருந்தாலும், தெரியாதா நிலா மாதிரி அழுகுள்ள தேவைதையை காட்டிலும், நமக்கு தெரிந்த பேய் நல்லது, தெரியாத நல்ல நாட்டில் கஸ்டப்ப டுவதைவிட, நமக்கு பழ க்கமான கஸ்டமான நமது ஊரிலே வாழ்ந்திருக்கலாம்,,, நோர்வேயில் கடுங்குளிரில் நடுங்கும் போது இந்த கதையை எழுதியிருந்தேன்,,,,,,
                                                 ஒரு சர்கஸ் குழுவிடம் சிக்கி கூண்டில் அடைபட்டுக் கிடந்த அந்த சிங்கத்துக்கு தினமும் சாப்பிட ஒரு கிலோ கரி மட்டுமே கொடுத்தார்கள். கட்டில் சுதந்திரமாக சுற்றி திரிந்து மான்களை கணக்கில்லாமல் வேட்டையாடித் திரிந்த நாட்கள் அதன் நினைவுகளில் வந்து ஏக்கத்தைக் கூட் டியது. அந்த நாட்கள் திரும்பவும் வராதா என்று இறைவனை அது வேண்டியது.

                                                  ஒரு நாள் அமெரிக்காவிலிருந்து வந்த மிருகைக்கட்சிசாலை உரிமையாளார் அதை விலைக்கு வாங் கினார். சிங்கம் கப்பலில் ஏற்றப்பட்டு அமெரிக்காவுக்கு பய ணமானது. தனது பிரார்த்தனைகள் பலித்து விட்டதாக சந் தோசப்பட்டது அது. தனக்கு ஏ.சி அறை கொடுத்து, தினமும் ஒன்றிரண்டு ஆடுகளையாவது சாப்பிட கொடுப்பார்கள் என்று நாக்கை சப்பு கொடிக்கொண்டது.

                                                             அமெரிக்காவில் சென்று இறங்கிய முதல் நாள் காலையில் அதற்கு அழகாக பேக் செய்யப்பட்ட ஒரு பார்சலில் டிபன் கொடுத்தார்கள். ஆசையோடு அதை பிரி த்த சிங்கம், உள்ளே வாழைப்பழங்கள் மட்டுமே இருபத்தை பார்த்து ஏமாந்து போனது. நாடு விட்டு நாடு மாறி வந்திருக் கும் நேரத்தில், கறி கொடுத்தால் வயிறு கெட்டுவிடும் என்ற கவலையில் தருகிறார்கள் என நினைத்தது அது. ஆனால் அடு த்த நாளும் வாழைப்பழம்தான் கொடுத்தார்கள். 

                                                        மூன்றாவது நாள் பார்சல் கொண்டு வந்து கொடுத்தவனை கொஞ்சம் நிற்கச் சொல்லிவிட்டு பிரி த்துப்பார்த்தது. அன்றும் அதே! , பார்சல் கொடுத்த ஆசாமியை கோபத்தோடு ஓங்கி அறைந்துவிட்டு, நான் யார் தெரியுமா? காட்டுக்கே ராஜாவான சிங்கம், எத்தனை விலங்குகளை வேட் டையாடி சாப்பிடுவேன் தெரியுமா? கேவலம் எனக்கு வாழைப் பழம் தருகிறீர்கள். என்ன ஆச்சு உங்கள் நிர்வாகத்துக்கு! என்று சத்தம் போட்டது.

                                                             பார்சல் கொடுத்தவன் பணிவாக சொன்னான் ...ஐயா ! தாங்கள் சிங்கம் என்பது எனக்கு தெரி யும் ஆனால் நீங்கள் இங்கு வந்திருப்பது குரங்கின் விஸாவில் அதனால் குரங்குக்கான உணவைத்தான் உங்களுக்கு தரமு டியும்!.  என்றான். சிங்கமாக தன்னை நினைத்த தேவதாஸ், குரங்காட்டம் குறுகிப்போனார்!  என்றும் என் ஊர் நினைவுகளோடு உங்கள் பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...