பின் தொடர்பவர்கள்

0240 கொடுப்பதில் இன்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0240 கொடுப்பதில் இன்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 ஆகஸ்ட், 2015

0240 கொடுப்பதில் இன்பம்

கொடுப்பதில் இன்பம்

அன்பர்களே கைலஞ்சம், நிர்வாக சீர்கேடுகள் இவைகளினால் ஏழைமக்களுக்கு கிடைக்கின்ற உதவிகள் சரியாக வந்து சேர்வதில்லை. எப்படியோ நம்மில் சிலர் வெளிநாடு வந்து நிம்மதியாக இருக்கின்றோம் ஆனால் நம் உறவுகள், கூடப்பிறந்த உறவுகள் இன்னும் வறுமையில் தள்ளாடுகின்றனர். புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களுக்கு வீட்டைப்பெரிதாக கட்டவேண்டும். விலை உயர்ந்த கார்களில் பவணி வரவேண்டும், இப்படியே ஆடம்பர எண்ணத்தில் மூழ்கிக்கிடக்கின்றோம். ஏழை மக்களுக்கு அரசாங்கம் செஞ்சிலுவை சங்கம் இருக்கின்றது என்று சொல்பவர்களும் ஏதோ சாட்டுக்கு விலைவாசி உயர்வை எண்னிப்பார்க்காமல், கொஞ்ச பணம் அனுப்பிவிட்டு, ஆண்டு முழுவதும் அனுப்பிவிட்டேன் என்று சொல்லும் இரத்த உறவுகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள். நிவாரணம் என்ற பெயரில், அரசாங்கம் கொடுக்கும் பணத்திற்கு என்ன நடக்கின்றது என்பதற்கு இதோ ஒரு கதை !

நாம் எவ்வளவுதான் நலத்திட்டங்களை அறிவித்தாலும், மக்கள் ஏன் எப்போதும் ஏழைகளாகவே இருக்கின்றார்கள் என்ற சந்தேகம் ஒருநாள் அக்பருக்கு வந்தது. எனவே அவர், பீர்பாலை அழைத்து விளக்கம் கேட்டார். அக்பரின் நிதி அமைச்சரை அழைத்த பீர்பால், அவரின் இரண்டு கைகளையும் ஒரு கிண்ணம் போல இணைக்கச் சொல்லி, நிதி அமைச்சரின் இணைந்திருந்த கைகளில், அக்பரை விட்டு, ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்ற சொன்னார். பிறகு, நிதி அமைச்சரை அப்படியே நடந்து போகச் சொல்லி, கல்வி அமைச்சரின் கையில் நிதி அமைச்சரின் கையிலிருந்த நீரை மாற்ற சொன்னார். இப்போது கல்வி அமைச்சர் கையில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. பிறகு அவரை மற்றுமோர் அமைச்சர் கையில் அந்த நீரை ஊற்றச் சொன்னார். இவ்வாறு, அரசவை மண்டபம் முழுவதும் எல்லா அமைச்சர்களின் கையிலும் தண்ணீர் இடம் மாறி, கடைசியில், அரசவையில் நின்றிருந்த குடியானவன் கையில் ஊற்ற சொன்னார். ஆனால் அந்த குடியானவன் கையில் ஊற்றும்போது, கையில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை.பல வேளைகளில், நலத் திட்டங்களின் நிர்வாகச் செலவுகள், ஒதுக்கியுள்ள மொத்த தொகையைவிட அதிகமாகி விடுகிறது. நம் உறவுகளுக்கு நாம் செய்யும் சிறிய உதவி நேரடியாக இருந்தால் அதில் மனநிறைவு உங்காளுக்கு கிடைக்கும் அந்த அனுபவம் எனக்குண்டு உங்களுக்கு உண்டா அன்பர்களே? அன்புடன் பேசாலைதாஸ்


துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...