மறுகரையிலிருந்து மறுகரைக்கு....
ஒரு நாள் இளம் புத்த துறவி ஒருவர், தன் வீட்டிலிருந்து பயணத்தைத் தொடர்ந்தார். அப்போது வீட்டின் முன் இருக்கும் ஒரு பரந்த ஆற்றைப் பார்த்தார். தன் பயணத்திற்குத் தடையாக இருக்கும், இந்த ஆற்றை எப்படி கடப்பது என்று மணிக்கணக்கில் ஒரே சிந்தனையுடன் இருந்தார். அவ்வாறு அவர் சிந்தித்துக் கொண்டிருக்கையில், ஆற்றின் மறுபக்கம் சென்றுகொண்டிருந்த ஒரு பெரிய துறவியைப் பார்த்து, அவரைக் கனத்த குரலுடன் அழைத்து, ஒரு பெரியவர் என்ற மரியாதை இல்லாமல், "ஓ அறிவாளியே, எப்படி மறுகரையை அடைவது என்று சொல்ல முடியுமா?" என்று கேட்டார் அந்த இளம் புத்த துறவி. அதற்கு அந்தப் பெரிய துறவி சற்று சிந்தித்து, இளம் துறவி நின்ற கரையை நோக்கி கனத்த குரலுடன், "மகனே, நீயே மறுகரையில்தான் இருக்கிறாய்" என்று சொல்லிச் சென்று விட்டார்.