பின் தொடர்பவர்கள்

0078 திருப்திதான் வாழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0078 திருப்திதான் வாழ்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூன், 2015

0078 திருப்திதான் வாழ்வு

திருப்திதான் வாழ்வு


நாம் இருப்பதைக்கொண்டு, திரு ப்தி அடைவது எப்படி என்பதை உணரவேண்டும், இறைவன் நம க்கு என்ன கொடுத்திருக்கின்றார் என்பதை அறிந்து கொண்டு அவரு க்கு நன்றி கூறுவோம். இல்லாத ஒன்றிக்காக நாம் கவலைப்படக்கூடாது. இருப்பவனுக்கு கொடுக்கப் படும், இல்லாதவனிடம் இருப்பதும் எடுக்கப்படும் என்று பைபிள் கூறுகின்றது. ந‌மக்கு எந்த திறமை இருக்கின்றதோ அதனை நாம் வளர்த்துக் கொள்ள முயற்ச்சிக்கவேண்டும் அதற்காக நாம் இறைவனிடம் நன்றி கூறுவோம். இந்த கருத்தை எளிதாக விளங்கிகொள்ள ஒரு கதை சொல்கின் றேன் அன்பர்களே! ஒரு ஞானி, தன் சீடர்களுடன் பாலை வனத்தில் நீண்ட தூரம் நடந்து சென்றார். வழியில் தங்கி இளைப்பாற ஒரு நிழல்கூட இல் லை. பசி வேறு வாட்டி எடுத்தது. சீடர்களோ நன்றாக களைத்துப்போய்விட்டனர். நாள் முழுவதும் நடந்து களைப்படைந்த வேளையில் ஒரு ஈச்சமர சோலை யை கண்டு, அங்கே தங்கி படுத்து இளைப்பாற ஞானி முடிவு செய்தார். 
                                                   வழமைபோல படுப்பதற்கு முன்னர் ஞானி செபித்தார். இறைவா இன்று எம்மை எல்லாம் நன்றாக பராமரித்தீர் இறைவா நன்றி என்று செபித்தார். உடனே ஒரு சீடன் கேட்டான், குருவே இன்று முழுவதும் பசியோடும் களைப்போ டும் நடந்தோம், நீரோ நன்றாக பராமரித்தீர் இறைவா என்று மன்றாடுகின்றீர்களே ஒன்றும் புரியவில்லை என்றான் சீடன். அதற்கு ஞானி ஆம் சீடனே இன்று இறைவன் அதிகமாகவே நமக்கு பசி, களைப்பு போன்ற உணர்ச்சிகளை மிக அதிகமாகவே தந்திருக் கின்றார். பசி என்றால் என்ன? களைப்பு என்றால் என்ன என்கின்ற உணர்ச்சி பூர்வமான புரிதலை தந்த இறைவனுக்கு நன்றி என்றார் ஞானி. ஆம் அன்பர் களே இன்பங்களை போல துன்பங்களும் ஒருவகை உணர்வுகள் தான் துன்பத்தை அறியாமல், இன்பத் தை புரிந்து கொள்வது கடினமானது. பசி பட்டினி என்ற துன்பம் எப்படிப்படது என்பதை புரிந்து கொள் ளும் அறிவு இருந்தால் வாழ்வு இனிக்கும்  திருப்தியே வாழ்வு

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...