பின் தொடர்பவர்கள்

0172 புளிகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0172 புளிகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

0172 புளிகாரம்

புளிகாரம்

அன்பர்களே நாம் எவ்வளவுதான் நல்லவர்களாக இருந்தாலும், வல் லவராக இருந்தாலும், நம்மிடம் உ ள்ள சில தீய நடத்தைகள் நம்மை மதிப்பிழக்கச் செய்யும், புளிகாரம் பாலை தயிராக்கு வது, நமது தீய நடத்தை பால் போன்ற நமது ம‌தி ப் பை தயிர்போல புளிக்கவைக்கும். இதனை அருமை யாக சொல்லும் ஒரு கதை, ஒரு வீட்டில் நாய்க் குட் டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க்குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது. ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது. இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று. என்ன காக்கை யாரே!ஏன் ஒன்றும் பேசாமல் வருத் தமாக இருக்கிறீர்? என்று கேட்டது. 
                                      அதற்கு காகம், மனிதர்கள் மற்றப் பறவைகளை அன்புடன் வளர்க்கின்றார்கள். அவைக ளின் செயல்களைப் பாராட்டுகின்றார்கள் ஆனால் என்னை வெறுத்து. கல்லால் எறிந்து துரத்துகிறார் களே ஏன்? என்று கேட்டது காகம். இதற்குக் காரணம் உங்கள் தீய குணங்கள்தான். இதை இல்லா தொலித் தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள், என் றது நாய்க் குட்டி எங்களிடம் அப்படியென்ன தீய குணங்கள் உள்ளன? காலையில் எழுந்து கரைந்து மந்தர்களை எழுப்பும் கடைமை,சுத்தம் செய்வது, இப்படிப் பல நல்ல குணங்களில் நாங்கள்தான் சிறந் தவர்கள்!என்று சொன்னது காகம். 
                                             உண்மை தான்! என்றது நாய்க் குட்டி பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத் தந்ததும் நாங் கள் தான்! என்று பெருமையோடு சொன்னது காகம். ஆமாம் அதுவும் உண்மை தான்! என்று மறு படியும் சொன்னது நாய்க்குட்டி. இப்படி நல்ல குணங் கள் எம்மிடம் இருந்தும் மற்றப் பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு இல்லையே ஏன்? குயில் கூவும்போது அதன் இனிமையை இரசிக்கிறார்கள். மயிலாடும் போது அதை இரசித்துப் பாராட்டுகிறார் கள். கிளியை வீட்டில் வளர்த்து பேசக் கற்றுக் கொடு க்கிறார்கள்.அனால் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தும் எம்மினத்தைக் கண்டாலே துரத்துகிறா ர்களே ஏன்? என்று மீண்டும் கேட்டது காகம். ஏன் என்று நான் சொல்லு கிறேன். உங்களிடம் எவ்வளவு நல்ல குண ங்கள் இருந்தாலும். உங்களிடம் இருக் கும் சில தீய குணங்களால் தான் மனி தர்கள் உங் களை வெறுக்கிறார்கள், என்று கூறியது நாய்க்குட்டி அப்படி என்ன தீய குணங்கள்? என்று கேட்டது காகம். திருடுதல்,ஏமாற்றுதல் என்று சொன்னது நாய்க் குட்டி. காகம் தலை குனிந்தது. ஒருவரிடம் எவ்வ ளவு நல்ல பண்பு கள் இருந்தாலும். அவரின் ஒரு சிறு தீயசெயல் அவரை,அவரின் அத்தனை நல்ல பண்புகளில் இருந்தும் மறைத்து.அந்த தீய செயலே முன்னிற்கும்.
அன்புடன் பேசாலைதாஸ் பேர்கன் நோர்வே

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...