பின் தொடர்பவர்கள்

0199 வலிமையிலும் வலியது எது? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0199 வலிமையிலும் வலியது எது? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 ஜூலை, 2015

0199 வலிமையிலும் வலியது எது?

வலிமையிலும் வலியது எது?

அன்பர்களே! ஒரு கேள்விக்குறியோடு கதையை ஆரம்பிக்கப்போகின்றேன். இனியது எது என்று முருகன் கேட்ட கேள்விக்கு, அவ்வைக்கிழவி "இனியது கேட்பின் வடிநெடுவேலோய்! இனிதி லும், இனிது வேதாந்தம் இனிது" என்று தொடர் ந்து பாடுவார். அது உங்களுக்கு தெரியும். நான் சற்று மாறுதலுக்காக வலியது எது என்று உங்க ளைக் கேட்கின்றேன்? என்னைப்பொறுத்தவரை, விசுவாசமான, நம்பிகையோடு கூடிய தொடர் செபம். இதற்கு இணையான வலிமை எதுவும் கிடையாது. இறைவனை இணங்கவைக்கும் வலிமை இதற்குண்டு. ஒரு உண்மைகதையோடு அதன்வலிமை உணர்த்த கதையை தொடர்கின் றேன்.Dr. Ahmed தலைசிறந்த மருத்துவர். பல ஆண்டுகள் அவர் மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள் மருத்துவ உலகையே வியப்பில் ஆழ் த்தியதால், அகில உலக மருத்துவர் கழகம் அவ ருக்கு விருது ஒன்றை அறிவித்தது. பக்கத்து நாட் டில் நடைபெ றும் அகில உலக கருத்தரங்கில் அவ்விருதை வழங்க, இக்கழகம் அவருக்கு அழைப்பு விடுத்தி ருந்தது. விருது நாளன்று காலை அவர் தன் நாட்டிலிருந்து விமானத்தில் பயணம் மேற்கொண்டார். ஒரு சில மணி நேரத் தில் விமானத்தில் பிரச்சனை ஒன்று உருவான தால், அருகிலிருந்த ஓர் ஊரில் விமானம் தரையி றக்கப்பட்டது. அவர் விமான நிலைய அதிகாரிக ளிடம் சென்று, தன் மாநாட்டைப் பற்றிக் கூறி, எப்படியாவது அங்கு செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கேட்டார்.அந்த விழாவின் முக் கியத்துவத்தை அதிகாரிகள் உணர்ந்தாலும், அடுத்த 10 மணி நேரத்திற்கு வேறு விமானங்கள் அவ்வழியே செல்லாது என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். இருந்தாலும், Dr. Ahmed ஒரு வாடகைக் காரில் அந்த ஊருக்குச் செல்லலாம் என்றும், அதற்கு நான்கு மணி நேரங்களே எடுக் கும் என்றும் குறிப்பிட்டனர். வேறு வழியின்றி, Dr. Ahmed வாடகைக் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு புறப்பட்டார். வழியில், திடீ ரென, எவ்வித முன்ன றிவுப்பும் இல்லாமல், புயல் ஒன்று உருவானது. கனமழை பெய்ததால், அவர் செல்லவேண்டிய பாதையைத் தவறவிட்டார். அந்தப் பாதையில் இரண்டு மணி நேரங்கள் ஒட் டியபின், களைப்பா லும், பசியாலும் சாலையின் ஓரமாக காரை நிறு த்தினார். அருகில் ஏதாவது தொலைபேசி வசதி இருந்தால், விருது விழாவை ஏற்பாடு செய்தவர் களிடம் தகவல் தெரிவிக்க லாம் என்று எண்ணி னார். பக்கத்தில் ஒரு வீடு இருந்தது. அங்கு சென்று கதவைத் தட்டினார். வயதான ஒரு பெண் கதவைத் திறந்தார். அங்கு தொலைபேசி ஏதும் உண்டா என்று டாக்டர் கேட் டதற்கு, தன்னிடம் அந்த வசதி இல்லை என்று கூறிய அப்பெண், Dr. Ahmed இருந்த நிலையைக் கண்டு, உள்ளே வந்து ஏதாவது சூடாகக் குடியுங் கள் என்று அழைத் தார். அந்த அழைப்பை ஏற்று, டாக்டர் உள்ளே சென்றார். அவருக்கு வேண்டிய உணவையும், தேநீரையும் பரிமாறிய அந்தப் பெண், தான் துவ ங்கிய செபத்தை முடித்துவிட்டு வருவதாகக் கூறி, அருகிலிருந்த ஒரு தொட்டில் அருகில், முழ ந்தாள் படியிட்டு தன் செபத்தைத் தொடர்ந்தார் மனம் உருகி, கண்ணீருடன் அவர் செபித்ததைப் பார்த்துக் கொண்டிருந்த டாக்டர், அவருக்கு உதவி செய்ய எண்ணினார். அவர் செபத்தை முடி த்துவிட்டு வந்ததும், அவரது கண்ணீருக்கும், செப த்திற்கும் காரணம் கேட்டார். அந்த வயதானப் பெண், "இறைவன் என் வேண்டுதல்கள் அனைத் திற்கும் பதில் வழங்கியுள்ளார். ஒரே ஒரு செபத் திற்கு மட்டும் இறைவன் இன்னும் பதில் தரவி ல்லை" என்று கூறினார். அந்த செபம் என்ன, அந் தத் தொட்டிலில் இருப்பது யார் என்று கேள்விகள் எழுப்பிய டாக்டரிடம், அவர் விவரங்கள் சொன் னார்: "தொட்டிலில் உறங்குவது என் பேரக்குழ ந்தை. அவனுடைய பெற்றோர் இருவரும் அண் மையில் ஒரு விபத்தில் இறந்துவிட்டனர். என் பேரனுக்கு வினோதமான ஒரு புற்று நோய் உள் ளது. அந்தப் புற்றுநோயைக் குணமாக்கும் திற மை கொண்டவர் பக்கத்து நாட்டில் உள்ள ஒரே ஒரு மருத்துவர். அவர் பெயர் டாக்டர் அஹ்மத் என்பது மட்டும் தெரியும். அவரைச் சென்று பார்க் கும் அளவுக்கு எனக்கு வசதி இல்லை. அதனால், இறைவனிடம் நான் தினமும் வேண்டுவது இது தான்... இறைவா, அந்த டாக்டரி டம் எப்படியாவது எங்களைக் கொண்டு சேர்த்து விடு என்பது ஒன் றே நான் தொடர்ந்து எழுப்பும் வேண்டுதல்" என் று கூறி முடித்தார் அந்தப் பெண். இதைக் கேட்டுக் கொண்டிருந்த டாக்டர் அஹ்மத் கண்களில் கண் ணீர் வழிந்தோடியது. அவர் தன் கதையைச் சொ ன்னார்... தான் விருது வாங்கப் புறப்பட்டது, விமா னம் பழுதடைந்தது, புயலால் தான் வழியைத் தவ றவிட்டது, அந்த இல்லத்தின் கதவைத் தட்டியது என்று, அன்று காலை முதல் தனக்கு நிகழ்ந்த தையெல்லாம் கூறிய டாக்டர் அஹ்மத், அந்தப் பெண்ணிடம், "நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் டாக்டர் அஹ்மத் நான்தான்" என்று கூறினார். பார்த்தீர்களா! ஒரு வலிமைமிக்க செபம்,  நிகழ சாத்தியமாற்ற சம்பவங்களையும், நிகழவைக்கும்.சாத்தியமாகும் சத்தியமான செபம் வேண்டி பேசாலதாஸ்
                                                                                                

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...