பின் தொடர்பவர்கள்

0276 "மனிதர் நோக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0276 "மனிதர் நோக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 அக்டோபர், 2015

0276 "மனிதர் நோக,,, மனிதர் பார்க்கும் பார்வை உண்டோ"? மகாகவி பாரதி

"மனிதர் நோக,,, மனிதர் பார்க்கும் பார்வை உண்டோ"? மகாகவி பாரதி

அன்பர்களே நாம், மனிதர்கள் யாரும் அற்ற தீவில் வாழ்ந்த, குருஸோ மாதிரி வாழவி  ல்லை, மாறாக மனிதர்கள் நடுவில் வாழ்கின்றோம். நம்மைச்சுற்றி நண்பர்கள், உறவுகள், குடும்பம், இப்படி எல்லோருடனும் வாழ்கின் றோம் ஆனால் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களின் உணர் வுகள், துயரங்கள் இவைகளை நாம் எவ்வளவு தூரம், பகிர்ந்து கொள்கின்றோம்? ஒருவனின் கொள்கைகளை, அவன‌து தனி ப்பட்ட விருப்பங்களை நாம் மறுத்து வாழ்கின்றோம். மறுக்கப்ப ட்ட அவனது கோரிக்கையில், எந்தளவு நியாய‌த்தன்மை உண்டு என்பதை அலசிப்பார்க்காமல் அலட்ச்சியம் செய்கின்றோம். சமூகத்துக்கு நன்மை பயக்கும் என்று ஒருவன் விடுக்கும் கோரிக்கையை, போதிய விளக்கம் கொடுக்காமல் அப்படியே அதை நிராகரிக்கின்றோம். ஒரு பொதுக்கூட்டத்தில், அதுவும் மதிக்கதக்க மனிதர், அந்த கோரிக்கையை, தகுந்த காரணமி ன்றி நிராகரிப்பது. நியாயமற்றது. உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மறுக்கும் செயலாகும்.
                                          இதை எழுதும் போது இரஷ்சிய எழுத்தாளர் அன்ரன் செக்கோவ் எழுதிய "The Grief" சோகம் என்ற கதை நினைவுக்கு வருகின்றது.,,,,பால்போன்ற நிலா, வானில் பனிமே கங்களை ஊடறுத்து, நிலா தன் ஒளியை பாச்சுகின்றது கூடவே பனியும் தன்பாட்டில் கொட்டித்தீர்க்கின்றது. ஒரு குதிரை வண் டிக்காரன் கன‌த்த இதயத்தோடு, வாடகைக்கு யாரும் வரமாட் டார்களா? என்று அந்த இரவில் நீண்ட நேரமாக, காத்துக்கிட க்கின்றான், யாருமே வருவதாக தெரியவில்லை, வெகு நேரத்தி ற்குப் பின் நாலு, ஐந்து இளைஞர்கள் வெகு போதையில் வாட கைக்கு, வண்டியில் ஏறுகின்றார்கள், சவாரி கிடைத்துவிட்டதே என்ற சந்தோசத்தில் குதிரைக்காரன் வண்டியை ஓட்டுகின் றான். ஒட்டுகின்றபோது, தனது சோகத்தை அந்த இளைஞர்க ளுடன் பகிர்ந்து கொள்ள முயற்ச்சிக்கின்றான், அவர்களோ போதை மயக்கத்தில் ஒருவரோடு ஒருவர் சந்தோசமாய் சல் லாபித்துக்கொண்டு இருந்தார்கள். குதிரைக்காரனின் கதை யை காது கொடுத்து கேட்கவில்லை. இறங்கும் இடம் வந்தது, இளைஞர்கள் இறங்கிப்போய்விட்டார்கள். கையில் கிடைத்த கொஞ்ச பணத்துடன் வீடு திரும்பினான் குதிரைக்காரன், வழமைபோல அவன் வீடு திரும்பும் போது அயல் வீட்டுக்கார பையன் ஒருவன் அவனுக்காக காத்திருப்பதும். அந்த பையனு டன் அவன் கதைத்துவிட்டு தூங்கப்போவதும் வழக்கம். அன்று அவன் வெகு நேரமாகி வீடு திரும்பியதால் அந்தப்பையனும் அங்கு இல்லை. குதிரைக்காரனுக்கு, நெஞ்சம் நிறைய சோகம், யாருடனாவது தனது சோகத்தை பகிரவேண்டும். எதுவுமே புரியவில்லை. தன் குதிரையை தொழுவத்தில் கட்டிவிட்டு, அதன் வாயில் கொள்ளுப்பையையும் கட்டிவிட்டு, ஒரு ஸ்டூலை எடுத்து, குதிரைக்கு அருகில் வைத்து, குதிரை மீது சாய்ந்தபடி, தன் சோகத்தை தன் குதிரையிடம் சொல்லலா னான்,,, என் அன்பு குதிரையே நான் பிழைப்புக்காக ஊர்விட்டு, ஊர் வந்தேன். எனது சின்ன மகனுக்கு சரியான வருத்தம் என்று கடந்தவாரம் அறிந்தேன், என்ன செய்ய, வைத்திய செலவுக்கு பணம் வேணுமே அதற்காக கொஞ்ச நாள் உழைத்து காசு சேர்த் துவிட்டு போகலாம் என்று இருந்தேன் இன்று என் மகன் இறந் துவிட்டான் என்று செய்தி வந்தது. குதிரையே என்னைப்போல உனக்கும் ஒரு குட்டி இருந்து அது இறந்து விட்டது என்றால் உன் சோகம் எப்படி இருக்கும் என்று கேட்டுக்கொண்டே குதி ரையை தடவியபடியே தூங்கிவிட்டான். என்ன அன்பர்களே கதையில் ஏதாவது தெரிகின்றதா?
அன்புடன் பேசாலைதாஸ் (பேர்கன்தாஸ்)

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...