பின் தொடர்பவர்கள்

0503 தவறான கற்பிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0503 தவறான கற்பிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

0503 தவறான கற்பிதம்

தவறான கற்பிதம்
அன்பர்களே நாம் சில தவறான அனுமானங்களை, கற்பிதங்களை மனதில் ஏற்படுத்திக்கொண்டு, அதற்கு ஏற்றபடி, உண்மையை, இயல்பு நிலையை தேடுகின்றோம், ஆனால் நியமான வாழ்வில் அது நடப்பதில்லை! சினிமாவில் காணும் கதாநாயகன் மாதிரி, கதாநாயகி மாதிரி, நமக்கு கணவன் மனைவி வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். அதனையே மனதில் வைத்துக்கொண்டு தேடுகின்றோம். இறுதியில் ஏமாற்றமே மிஞ்சுகின்றது. அதேபோலத்தான், இறைவன் அப்படி இருப்பா ர்இப்படி இருப்பார் என்று தேவையில்லாத உருவகத்தை மனதில் ஏற்றிக்கொண்டு இறைவனை தேடுகின்றோம். ஆனால் இறைவன் நமக்குள் இருப்பதும், நமது உதவிதேடி, ஏழை எளியவனாக நமக்கு அருகில் இருப்பது தெரியாமல் தேடி அலைகின்றோம், அப்படி அலைந்து சலித்துப்போன ஒரு இளஞனை உங்கள் மனக்கண் முன் நிறுத்துகின்றேன்,,,,,,,,,,

                     உண்மை என்றால் என்ன என்பதை உய்த்தறிய ஒரு வாலிபன் ஆசைப்பட்டு, ஞானி ஒருவரை தேடிச் சென்றான். அவனை எப் படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று சாத்தான் முடிவு செய்தான். வாலிபன் போகும் வழியில் ஒரு அழகான இளம் பெண் போல அவனிடம் வந்து சரசமாடினாள். வாலிபன் அந்த சரசத்திற்கு இடம் கொடுக்காமல், தன் முயற்சியில் கண்ணாய் இருந்தான். சாத்தன் இப்போது ஒரு அமைச்ச ரின் மனதுக்குள் புகுந்து கொண்டு, அந்த வாலிபனை சந்தித்தான். வாலி பனுக்கு பதவி, அந்தஸ்த்து என்பனவற்றைகாட்டி, தன்னோடு இருக்கு ம்படி கூறினான் ஆனால் அந்த வாலிபனோ சற்றும் மசியவில்லை, ஞானியை தேடி அலைந்தான். சாத்தானோ விட்டபாடில்லை. உலக ஆசைகள் அனைத்தையும் காட்டி, வாலிபனின் மனதை மாற்ற முயற்ச்சி செய்தான் எதுவுமே சாத்தானால்முடியவில்லை. ஆச்சிரமத்தை சென்றடைந்தான் வாலிபன். சாத்தான் கவலையால் ஒரு மூலையில் இருளில் உட்கார்ந்து கொண்டான். ஆச்சிரமத்துகு வந்த வாலிபன் ஞானியை பார்த்தான். அந்த ஞானி சற்று வசதியாக, சாதாரண ஒரு அதிகாரியாக இருப்பதைக்கண்டு அளுத்துக்கொண்டான். மக்கள் மடையர்கள் ஞானியின் போலித்தன்மையை கண்டு கொள்ளவில்லை என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு வந்த வழியே வீடு திரும்பலா னான் . 
                                              இதனை உணர்ந்த ஞானி, கவலையில் உட்கார்ந்து கொண்டிருந்சாத்தானிடம் நீ இவனை மனம் திருப்ப படாதபாடுபட்டாய், ஆனால் அவன் எப்போதும் உன்னோடு தான் இருந்தான். சிலர் இப்படி த்தான். மற்றவர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கற்பிதங்களி னால் மற்றவர்களை தவறாக மதிப்பிட்டு, நல்ல உறவுகளை கெடுத்து க்கொள்கின்றார்கள் என்று ஞானி சாத்தானுக்கு விளக்கம் கொடுத்தார். அன்புடன் பேசாலைதஸ்

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...