பின் தொடர்பவர்கள்

0457 தேன் கூடு! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0457 தேன் கூடு! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 செப்டம்பர், 2017

0457 காதல் என்பது தேன் கூடு!

 காதல் என்பது தேன் கூடு!
ஆறு கடல் ஆழம் இல்லை, அது சேறும் இடமும் ஆழமில்லை, ஆழம் எது ? அது பொம்புள மனசு தான், என்கின்றது ஒரு சினிமா பாடல், ஆழிக்கடல் ஆழத்தை அளக்களாம் , அண்டத்தை கூட அளந்துவிடலாம் ஆனால் ஒரு பெண்ணின் அடிமனதில் இருப்பதை அறிவது மிககடினம், அதை விளக்குவதே இந்தக்கதை உங்களுக்காக!,,,,,,,,,,
இரண்டு நாட்டு மன்னர்களுக்கு இடையில் போர் மூண்டது இறுதியில் ஒரு மன்னன் வென்றான், வென்ற மன்னன் தோற்ற மன்னனிடம் கூறினான், நான் கேட்கும் கேள்விக்கு நீ சரியான பதிலை சொன்னால் நீ தோற்ற நாட்டை உனக்கே தருவேன் என்றான். கேள்வி இதுதான் அன்பர்களே! ஒரு பெண் தன் அடிமனதின் ஆழத்தில் என்ன என்ன நினைக்கின்றாள்? இதுதான் அந்த கேள்வி! இந்த கேள்வியை வெற்றி பெற்ற அரசனிடம் அவன் காதலி கேட்டு இதற்கு சரியான பதிலை சொன்னால் தான் நமக்குள் திருமணம் என்று நிபந்தனை போட்டிருந்தாள். இந்த கேள்விக்கான பதிலை தோற்ற மன்னன் பலரிடமும் கேட்டுப்பார்த்தான் சரியான‌ பதில் கிடைக்கவில்லை, பலர் சூனியகார கிழவியிடம் கேட்டுப்பார்கும் படி சொன்னாதால்,  இறுதியில்  சூனியகார கிழவியிடம் பதிலை கேட்டான். அதற்கு அந்த சூனியகார கிழவி சொன்னாள் நான் சரியான் பதிலை சொன்னால் உனக்கு நாடு கிடைக்கும், வென்ற‌ மன்னனுக்கு மனைவி கிடைக்கும், எனக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டாள், அதற்கு அவன் நீ என்ன கேட்டாலும் தருவேன் என்று சொன்னான்,  சூனியகார கிழவி பதில் சொன்னாள் அதாவது ஒரு பெண் தன் ஆழ்மனதில், தான் சம்பந்தபட்டவிடயத்தில் தானே முடிவு எடுக்கவேண்டும் என்று ஆழ்மனதில் எப்பொழுதும் யோசிக்கின்றாள் என்று,  அந்த பதிலை தோற்ற மன்னன் வெற்றி பெற்ற மன்னனுக்கு சொல்ல, அவன் அதனை தன் காதலியிடம் கூற, திருமணம் நடந்தது, தோற்ற‌ மன்னனுக்கு நாடும் திரும்ப கிடைத்தது, நாடு பெற்ற மகிழ்ச்சியில் சூனியகார கிழவியிடம் வந்து அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். கிழவியோ சட்டென்று என்னை திருமணம் செய்யவேண்டும் என்று கேட்டாள். தோற்ற மன்னவனும் வாக்குறுதியை காப்பாற்ற  ஆம் என்றாள், உடனே சூனியகார கிழவி ஒரு அழகிய தேவதையாக காட்சி அளித்தாள். அப்போது அவள் சொன்னாள். நான் படுக்கை அறையில் இருக்கும் போது, அழகிய தேவதை  இருப்பேன், வெளியே உன்னோடு வரும் போது கிழவியாக இருப்பேன் இதில் உன் விருப்பம் என்னவென்று கேட்டாள்.  சட்டென்று மன்னன் சொன்னான்.அது உன் சம்பந்தப்பட்ட விடயம் நீ தான் முடிவு எடுக்கவேண்டும் என்று, மகிழ்ந்து போன சூனியகார கிழவி நிரந்தரமாகவே அழ்கிய தேவதையாக இருக்கவே ஆழ்மனதில் யோசித்தேன் அதனையே நீ சொன்னதால் நான் அழ்கிய உன் தேவையாக எப்போதும் இருப்பேன் என்றாள். இதில் இருந்து நமக்கு என்ன தெரிகின்றது அன்பர்களே! நாம் எப்பொழும் நம்மை மனதார ஒரு பெண் விரும்பவேண்டும் என்றால் அதனை அவள் தன் அடி மனதில் அவளே தீர்மானிக்கவேண்டும் ஒருபொழுதும் அவளை நாம் நிர்ப்பந்திக்க் கூடாது. ஒரு பெண்ணின் மனதை வெல்வது சாதாரண காரியம் அல்ல அன்பர்களே! 
காதல் என்பது தேன் கூடு அதை கட்டுவதென்றால் பெரும் பாடு!  
அரும்பாடுபடும்  உங்கள் அன்பு பேசாலைதாஸ்

என் எண்ணக்கதைகள், வண்ணக்கலவைகளாக‌
நிலாமதி வலைப்பூங்காவில் www.nilaamathy.blogspot.com

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...