பின் தொடர்பவர்கள்

0433 காதல் கடலிலே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0433 காதல் கடலிலே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 பிப்ரவரி, 2017

0433 காதல் கடலிலே இனி நாமாவோம்!

காதல் கடலிலே இனி நாமாவோம்!
காதல், காதலாக இருக்கு ம்போது, நம்முடைய‌ உணர்வு இனிப்பாக இருக்கிறது. உயிர் போனாலும் சரி என்ற ஆனந்த உணர்வு நிறைகிறது. ஒரே ஒரு வராலேயே இவ்வளவு கிடை க்கும் என்றால், எல்லா ஜீவரா சிகளிடமும், ஜீவனுக்கு மூல மாக இருக்கிற காற்றிடமும், மண்ணிடமும், கல்லிடமும், செடியிடமும் காதல்கொ ண்டால், எப்பேர்ப்பட்ட அளவில்லாத ஆனந்தம் கிடைக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள். மலை, நதி, பூ, புல்வெளி, பட்டாம்பூச்சி, ஆடு, மாடு என்று காணும் ஒவ்வொன்றின் மீதும் காதல் கொள்ளலாம். காதலிப்பது கையில் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால்தான், பிரச்சனை. அதைத் தவிர்த்துவிட்டால், கடலின் மீதும், ஆகாயத்தின் மீதும், நிலாவின் மீதும்கூட உண்மையான காதல் கொள்ளலாமே? அந்த உணர்வை உங்களி டம் இருந்து யாரால் தட்டிப் பறிக்க முடியும்?  பாரதி ஆனந்த களி ப்பில் பாடினான் காற்று வெளியில் கண்ணம்மா நின் காதலை எண்ணிக்களிக்கின்றேன் என்று.

                                                    கொஞ்சம் ஆழமாகப் பார்த்தீர்கள் என்றால், காதல் என்பது ஒரு மனிதனுக்கு ஆழமான, மகிழ்ச்சியான, ஆன ந்தமான உணர்வாக இருக்கிறது. இந்த உணர்வை ஏதோ ஒரு காரணம் தூண்டிவிடுகிறது. காதலை ஆங்கிலத்தில் அழகாக ‘Falling in Love’ என்று சொல்வார்கள். காதலில் ஏற முடியாது, இறங்க முடியாது, நிற்க முடியாது, பறக்க முடியாது. விழத்தான் முடியும்.  நான்  நீ என்பது வீழ்ந்து மறைந்து நாமாவோம், அதிலே காதல் பிறக்கும் ‘நான்’ என்ற தன்மை கொஞ்சம் நொறுங்கிக் கீழே விழுந்தால்தான், காதல் பிறக்க முடியும்.

                                                             ஒரு முறை பல்கலைக்கழக‌ நண்பர்கள் சிலர், பல வருடங்கள் கழித்து தங்கள் பேராசிரியர் வீட்டில் சந்தி த்தனர். எங்கெங்கோ சுற்றிவிட்டு பேச்சு அவர்களுடைய காதல் வாழ்வு பற்றித் திரும்பியது. ஒவ்வொரு நண்பரிடத்திலும் ஏதோ ஓர் ஏமாற்றம், ஏதோ ஒரு வருத்தம். ஏதோ ஒரு அதிருப்தி,  இதை கவனித்த பேராசிரியர், ஒரு ஜாடியில் தேநீர் கொண்டு வந்து வைத்தார். “அந்த அலமாரியில் நிறையக் கோப்பைகள் இருக்கி ன்றன. உங்களுக்குப் பிடித்த கோப்பையில் தேநீரை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார். பீங்கான் கோப்பை, கண்ணாடிக் கோப்பை, வெள்ளிக் கோப்பை என்று விதவிதமான கோப்பை கள். நண்பர்கள் ஆளுக்கு ஒரு கோப்பையை எடுத்து தேநீர் நிர ப்பி அமர்ந்ததும், பேராசிரியர் பேசத்தொடங்கினார்.… “சாதா ரணமான மண் கோப்பைகளை யாரும் எடுக்கவில்லை. விலை உயர்ந்த அழகான கோப்பைகளைத்தான் நீங்கள் எல்லோரும் எடுத்திருக்கிறீர்கள் என்பதை கவனித்தீர்களா? கோப்பையைக் கையில் வைத்திருக்கப் போகிறீர்கள் அவ்வளவுதான். தேநீ ர்தான் உள்ளேபோய் உங்களுடன் ஒன்றாகப் போகிறது. ஆனால், உங்கள் கவனம் கோப்பையில் நின்றுவிட்டது. எனக்கு என்ன கிடைத்தது, அடுத்தவருக்கு எந்தக் கோப்பை போய்விட்டது என்பதில் சிந்தனை போய்விட்டதால், தேநீரின் உண்மையான ருசியைக் கவனிக்கத் தவறுகிறீர்கள். காதலும் அப்படித்தான். அந்த அற்புதமான உணர்வு கொண்டுவரும் ஆனந்தத்தை வெளித் தோற்றங்களுடன் தொடர்புபடுத்தி, ருசிக்கத் தவறு கிறீர்கள்… வேதனையில் அல்லாடுகிறீர்கள்!” என்று தன் பேச்சை முடித்தார் பேராசிரியர்.

                                                                     ஆம் அன்பர்களே ஒரு பெண்ணிடம் ஏற்படும் காதல் தேன் மாதிரி சுவையானது, ஆனால் அந்த தேனை நாம் சரியாக சுவைப்பதில்லை. வெறும் கோப்பையில் மட்டும் கவனம் செலுத்திய அந்த பட்டதாரி மாணவர்கள் போல த்தான் நம்மில் சிலர் காதல் தேனை சுவைப்பதில்லை. காதல் என்பது  தேன் கூடு, அதை கட்டுவதென்றால் பெரும்பாடு, காலம் வந்தால் கைகூடும் அது கனவாய் போனால் மனம் வாடும். காதலில் தோற்று உட்கார்ந்த தேவதாஸ் போன்றவர்களுக்கு த்தான் காதலின் அருமை தெரியும்! என்றும் அன்புடன் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...