பின் தொடர்பவர்கள்

0285 நிகழ்ச்சிக்கு முன் மகிழ்ச்சி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0285 நிகழ்ச்சிக்கு முன் மகிழ்ச்சி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 டிசம்பர், 2015

0285 நிகழ்ச்சிக்கு முன் மகிழ்ச்சி.

நிகழ்ச்சிக்கு முன் மகிழ்ச்சி.

என் அன்பின் உறவுகளே! உங்கள் எல்லோரு க்கும் இது உவப்பான காலமல்லவா! வெற்றி அன்னை அன்னையின் திருவிழாவை கொண்டாட, கொடி மரம் ஏற்றி, ஆயத்த வழிபாடாக நவநாள் தொடங்கிவிட்டீர்கள், நேற்றைய தினம் திருவருகைக்காலத்தின் முதாலம் ஞாயிறு, காரிருளில் காத்திருந்தவ ர்கள் பேரொளியை கண்டனர். அந்த பேரொளி எது? அதுதான் இயேசுவின் பிறப்பு, மீட்பின் செய்தி  நற்செய்தியாக அறிவிக்கப்படுகி ன்ற து. ஆண்டாண்டாக காத்தி ருந்த வருகை பிறப்பு நிகழவிருக்கின்றது என்றால் ஆனந்தம் மகி ழ்ச்சி அடையமுடியாமல் இருக்கமுடியுமா? என்ன உறவுகளே உங்களைத்தான் கேட்கி ன்றேன். இயேசு பிறக்க இருக்கின்ற இக்கால த்தை திருவருகைக்காலமாக திருச்சபை நான்கு மெழுகு திரிகளை ஒவ்வொரு ஞாயிறும் ஏற்றி கொண்டாடிவ ருகின்றது. காத்து கிடப்பதில் இன்பமுண்டு, காக்க வைப்பதி லும் இன்பமுண்டு, காதலித்தவர்களுக்கு, இது நன்றாக புரியும். 

                           இந்தவேளயில் the little prince என்ற கதை எனக்கு நினைவுக்கு வருகின்றது, காலமெல்லாம் காத்திருந்த ஒரு நரியின் கதை "The Little Prince" (by Antoine de Saint-Exupery) என்பது ஒரு கற்பனைக் கதை. அரிதான, அழகான கற்பனை. வெளி உலகத்திலிருந்து நம் பூமிக்கு வந்து சேரும் ஒரு குட்டி இளவரசனின் கதை. அந்தக் கதையில் வரும் இளவரசன் ஒரு நரியைச் சந்திக்கிறான். நட்பு மலர்கிறது. ஒருநாளே நிகழ்ந்த சந்திப்பிற்கு பின், அடுத்த நாள் சிறுவன் வந்ததும் நரி அவனி டம் உரிமையாய், "நீ நேற்று வந்த நேரத்திற்கே வந்திருந்தால், ரொம்ப நன்றாக இருந்திருக்கும்." என்று சொல்கிறது. ஏன் அதே நேரத்திற்கு வரவேண்டும் என்று கேட்கும் இளவரசனுக்கு நரி சொல்லும் விளக்கம் அழகானது. "உதாரணத்திற்கு, நீ நாலு மணிக்கு வருவாய் என்று உறுதியாக எனக்குத் தெரிந்தால், நான் மூன்று மணிக்கே மகிழ்வில் துள்ளி குதிக்க ஆரம்பித்துவி டுவேன். நீ ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நேரத்திற்கு வந்தால், என் மனம் தயாராக, மகிழ்வாக இருக்கமுடியாதே" என்று நரி சொல்கிறது. நரி சொல்வதில் நிறைய ஜதார்த்தம் உண்டு அன்பர்களே! இதை உணர்ந்துதான் என்னவோ திருச்சபையானது கிறிஸ்து பிறப்பு விழாவை, குறித்த நாளில் அதாவது மார்கழி 25 திகதியை நிர்ணயித்துள்ளது. ஐரோப்பா நாடெங்கும், கிறிஸ்மஸ் வியாபாரத்திற்காக, அலங்கார விளக்குகளால் சோடிக்கப்பட்டு, காட்சி தருகின்றது. கார்த்திகை மாதம் இறந்த உறவுகளின், மாவீரர்களின் துயர நினைவுகளில் தோய்ந்திருந்த உள்ளம், சற்று ஆறுதல் பெற்று, திருவருகை திருவிழாவுக்காக காத்திருப்பதில் ஒரு மகிழ்ச்சிதான் உறவுகளே! நிகழ்ச்சிக்கு முன் மகிழ்ச்சி.

                                                                                            நடக்கப்போகும் நல்லதொரு நிகழ்வுக்காக, அல்லது, மனதுக்குப் பிடித்த ஒருவரைச் சந்திப்ப தற்காகக் காத்திருக்கும் நேரம் மிக ஆனந்தமானது. குறிப்பாக தாயகத்தை பிறிந்து, தொலைதூர, குளிரான, பனிபடர்ந்த துர்வ நாட்டில், கையது கொண்டு, தோளது தழுவி மேனி குளிரால் நடுங்கும் இந்த நேரத்தில், இதமான வெப்பம் கொண்ட மார்கழியில் நமக்கு நெருக்கமான உறவுகளை நினைப்பதும், அவர்களை சந்திக்க துடிப்பதும் ஆனந்தமான இன்பம் தானே! மாதங்களில் அவள் மார்கழி என்றானே கவிஞன் அது இதற்குத்தானோ? இதை எல் லாரும் வாழ்வில் உணர்ந்திருப்போம். காத்திருக்கும் ஆனந்தத் தைத் தருவது திருவருகைக் காலம். மனமகிழ்ச்சிக்கு தயராகுவோம் உறவுகளே!  என்றும் அன்புடன் பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...