பின் தொடர்பவர்கள்

0075 உலகமா உள்ளமா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0075 உலகமா உள்ளமா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூன், 2015

0075 உலகமா, உள்ளமா?

உலகமா, உள்ளமா?



நமது சிந்தனைகள், நமது எண்ணங்கள், ஏன் நமது உள்ளங்களையே மாற்றி அமைக்க சிந்திக்கும் தருனம் இது. எல்லோரும் ஏதோ ஒரு மாற்றத்தை வாழ்வில் விரும்பிக்கொண்டுதான் இருக்கின்றனர். பெரிய வீடு வேண்டும், இன்னும் அதிக பணம் வேண் டும் என்ற மாறுதலுக்காக மனம் விரும்பிக்கொ ண்டே இருக்கின்றது. ஆனால் ஒரு ஞானி மட்டும் இப்படி இறைவனிடம் மன்றாடினார். புரட்சிகளை அதிகம் விரும்பிய இளைஞனாய் நான் இருந்த போது, "கடவுளே, உலகை மாற்றும் வரம் தா!" என்று இறைவனிடம் வேண்டினேன். நடுத்தர வயதை அடைந்தபோது, என் செபம் சிறிது மாறியது: "கட வுளே, என் குடும்பத்தினரை, நண்பர்களை, என் னைச் சுற்றியுள்ளவர்களை மாற்றும் வரம் தா!" என்பது என் செபமானது. இப்போது வயது முதிர்ந்த நிலையில், என் இறுதி நாட்கள் எண்ணப்பட்டுள்ளன என்பதை உணர்கிறேன். இப்போது நான் வேண்டு வது ஒன்றே... "கடவுளே, என்னையே நான் மாற்றிக் கொள்ளும் வரம்தா!" என்பதே என் இப்போதையச் செபம். இந்த செபத்தை நான் ஆரம்பத்திலிருந்தே வேண்டியிருந்தால், என் வாழ்வு எவ்வளவோ மாறி யிருக்கும். என்னைச் சுற்றியிருந்தவர்கள் மாறியி ருப்பர். இந்த உலகமும் மாறியிருக்கும். அன்பர் களே! "உலகில் நாம் காண விழையும் மாற்றம் நம் மிடம் முதலில் துவங்கவேண்டும்" என்று சொன் னவர் மகாத்மா காந்தி. மாற்றங்களின் ஆரம்பம்... உலகமா, உள்ளமா? சிந்தியுங்கள் 

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...