பின் தொடர்பவர்கள்

0473 சிரிக்கத் தெரிந்தால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0473 சிரிக்கத் தெரிந்தால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 ஜனவரி, 2018

0473 சிரிக்கத் தெரிந்தால் போதும், துயர் நெருங்காது நமை ஒரு போதும்!

 சிரிக்கத் தெரிந்தால் போதும், துயர் நெருங்காது நமை ஒரு போதும்! 
அன்பர்களே சிரிக்கவும் சிந்திக்கவும் தெரிந்தவன் மனிதன் மட்டுமே, ஆனால் இன்று அவன் நிலை என்ன? பிறக்கும் போதும் அழுகின்றான், இறக்கும் போதும் அழுகின்றான். ஒருநாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தான் மானிடன். வாழ்வுக்கு சிரிப்பு எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதற்காக மலரும் ஒரு கதை இதோ! 
                                                                                  அக்காலத்தில் வாழ்ந்த ஒரு ஞா னி, தனது வாழ்க்கை முழுவதும் ஆனந்தமாக இருந்தார். அவரை யாருமே கவலையோடு பார்த்ததே இல்லை. அவர் எப்போதும் சிரித்துக்கொண்டே இருந்தார். அவரது மொத்த இருப்பே ஒரு விழாவின் நறுமணத்துடன் இருந்தது.
அவர் முதுமையை அடைந்தார். அவரது மரண தருணத்திலும் அவர் தன்னைத் தழுவும் மரணத்தை ரசித்துக்கொண்டே சிரித்தபடி இருந்தார்.

அவரது சீடன் ஒருவன், “உங்களைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது நீங்கள் இறந்துகொண்டிருக்கிறீர்கள்? அப்படியும் சிரிக்கிறீர்கள். நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள்? சாவதில் என்ன வேடிக்கை இருக்கிறது? நாங்கள் சோகமாக இருக்கிறோம்.

ஏன் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கிறீர்கள் என்ற கேள்வியை உங்களிடம் கேட்க நாங்கள் பலமுறை விரும்பியுள்ளோம். ஆனால் சாவைச் சந்திக்கும் இந்த நேரத்திலும் சிரிக்கிறீர்கள். எப்படி?” என்று கேட்டான்.

அந்த சூபி சொன்னார். “அது மிக எளிமையானது. பதினேழு வயதில் என் குருவைக் காணச் சென்றேன். அந்த வயதிலேயே நான் மனம் முழுவதும் கவலையுடன் பரிதாபமாக இருந்தேன். எனது குருவுக்கோ 70 வயது.

அவர் ஒரு மரத்தின் கீழே அமர்ந்திருந்து காரணமே இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்தார். வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தார். நான் அவரைப் பார்த்து என்ன விஷயம் என்று கேட்டேன். உங்களுக்குப் பைத்தியமா என்றும் கேட்டேன்.”

அவர் சொன்னார். “ஒரு காலத்தில் நானும் உன்னைப் போல வருத்தமாக இருந்தேன். ஒரு நாள் அது மாறியது. அதுமுதல் ஒவ்வொரு நாள் எழும்போதும், காலையில் கண் விழிப்பதற்கு முன்னர், நான் என்னிடமே எனது பெயரைச் சொல்லிக் கேட்பேன்.

தேவதாஸ், உனக்கு என்ன விருப்பம்? துக்கமா? ஆனந்தமா? இன்று எதைத் தேர்வு செய்யப்போகிறாய் என்று கேட்டுக்கொள்வேன். நான் ஆனந்தத்தையே தேர்வு செய்ய நேர்ந்தது.

அது ஒரு தேர்வுதான். அதை முயற்சி செய்து பார். காலையில் எழுந்தவுடன் உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். ‘தேவதாஸ், என்ன திட்டம் உனக்கு? நீ தேர்வு செய்யப்போவது துக்கத்தையா? சந்தோஷத்தையா?”

யார்தான் துக்கத்தைத் தேர்வு செய்வார்கள்? எதற்கு நாம் துக்கத்தை தேர்வு செய்ய வேண்டும்? அது இயல்பற்றது. ஒருவர் துக்கத்தில் ஆனந்தமாக உணர்ந்தால் மட்டுமே அதை தேர்வு செய்ய வேண்டும். எப்பொழுதும் ஆனந்தத்தையே  தேர்வு செய்யுங்கள். ஆனந்தமாக வாழ்வே இறைவன் நம்மை படைத்து இந்த உலகத்தையும் படைத்தான். மனிதன் வாழத்தெரியாமல் வாழ்ந்து இறைவனை சார்ந்து இருக்காமல் எல்லா ஆனந்தத்தயும் இழந்துவிட்டு, ஆனந்தம் மோட்சத்தில் இருப்பதாக நினைக்கின்றான். ஆனந்தம் இதோ இங்கே , இந்த உலகத்தில் இருக்கின்றது நாம் தான் அதை கண்டு கொள்ள தவறுகின்றோம்,,,, அன்புடன் பேசாலைதாஸ்

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...