பின் தொடர்பவர்கள்

0325 பணக்காரராய் இருப்பது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0325 பணக்காரராய் இருப்பது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 பிப்ரவரி, 2016

0325 பணக்காரராய் இருப்பது, ஒருவர் எவ்வளவு கொடுக்கிறார் என்பதைப் பொருத்தது.

பணக்காரராய் இருப்பது, ஒருவர் எவ்வளவு கொடுக்கிறார் என்பதைப் பொருத்தது.
அது ஒரு எளிய குடும்பம். தனது வகுப்பு நண்பர்களின் தந்தையரைவிட தனது தந்தை கடினமாக உழைத்தும், பண க்காரராகவில்லையே என்ற வருத்தம் அச்சிறுவனுக்கு. எனவே தந்தையின் செயல் கள் ஒவ்வொன்றையும் வெறு ப்போடு பார்த்தான் அவன். ஒருநாள் பள்ளிக்குச் செல்வதற்கு முன்னர் அவனுக்குக் கைச்செலவுக்குப் பணம் கொடுத்த தந்தை, பின்னர், இன்னும் கொஞ்சம் பணத்தையும் கொடுத்தார். சிறுவன் மகிழ்வோடு அதை வாங்கினான். ஆனால் தந்தை யோ, ஓர் உண்டியல் டப்பாவை மேஜைமீது வைத்து, தனது பங் காக சில காசுகளைப் போட்டார். பின்னர் சிறுவனுக்கு, மிகுதி யாகக் கொடுத்த கைச்செலவு பணத்தை அதில் போடச் சொன் னார். அவனுக்குப் பயங்கரக் கோபம். பின்னர் தந்தையிடம், நாம் ஏன் இன்னும் பணக்காரராகவில்லை என்று கோபமாகக் கேட்டான். இந்த எதிர்பாராத கேள்வியால் முகம் வாடினார் தந்தை. பின்னர் சொன்னார்-பணக்காரராய் இருப்பது என்பது, நீ எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய் என்பதில் அல்ல, ஆனால், நீ எவ்வளவு கொடுக்கிறாய் என்பதில்தான் உள்ளது என்று. அதைக் கேட்டு, கோபத்துடன் பள்ளி சென்றான் சிறுவன். படித்து நல்ல வேலையிலும் சேர்ந்தான். ஒருகட்டத்தில் தந்தை தொலைபேசியில், இந்தப் புத்தாண்டு விழாவுக்கு ஊருக்கு வருவாயா என்று கேட்டதற்கு, முடியாது, அலுவலகத்தில் வேலை என்று வெறுப்பாக, தொலைபேசியைத் துண்டித்தான் அந்த மகன். பின்னர் ஒருநாள் ஒரு மாற்றுத்திறனாளர் இல்லத்திலிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. அங்குச் சென்றான் அவன். நீங்கள் அனுப்பிய நன்கொடைக்கு நன்றி என்றார்கள். நான் பணம் அனுப்பவில்லையே என்று சொன்னபோது, அவர்கள் சொன்னார்கள்-இது உங்கள் தந்தை உங்கள் பெயரால் அனுப்பிய நன்கொடை. இது உங்களுக்குத் தெரிய வேண்டாம் என்று தந்தை கேட்டுக்கொண்டார். உங்கள் தந்தை தனது நோயையும் மறைத்து, தனக்குக் கிடைத்த வேலைகள் அனைத்தையும் செய்து வந்தார். இந்த இல்லத்திற்கும் அடிக்கடி வந்து பல விளையாட்டுக்களால் எங்களை மகிழ்வித்தார், எங்களில் தன்னம்பிக்கையை ஊட்டினார் என்று. இவ்வாறு அவன் தந்தையின் ஊக்கமூட்டும் பல செயல்களைச் சொல்லி மகிழ்ந்தார்கள் அந்த இல்லத்தினர். அப்போதுதான் அவன், தனது தந்தையின் உயரிய பண்பை உணர்ந்தான். ஆனால் தந்தையின் படத்திற்கு முன்பாக மண்டியிட்டு கண்ணீர் சிந்த மட்டுமே அவனால் முடிந்தது. ஏனென்றால் அவனது தந்தை அப்போது உயிரோடு இல்லை. ஆம், பணக்காரராய் இருப்பது, ஒருவர் எவ்வளவு கொடுக்கிறார் என்பதைப் பொருத்தது. அன்புடன் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...