பின் தொடர்பவர்கள்

0365 உண்மையான ஆணவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0365 உண்மையான ஆணவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 ஏப்ரல், 2016

0365 உண்மையான ஆணவம்

உண்மையான ஆணவம்

ஒரு நாட்டின் தலைமை அமைச்சராக, டாங் பரம்பரை யைச் சேர்ந்த ஒருவர் இருந்தார். அவர் ஆட்சியை நன் முறையில் நடத்துவதில் மிகவும் சிறந்தவர். அவருக்கு புகழ், அதிகாரம் மற்றும் செல்வங்கள் இருப்பினும், புத்த சமயக் கருத்துகள் பற்றி அறிவதில் ஆர்வமுள்ள வராக இருந்தார். அதற்காக, அந்த ஊரில் இருக்கும் ஒரு ஜென் குருவிடம் அடிக்கடி சென்று கற்றுக் கொண்டார். அவ்வாறு கற்கும் அவர், தான் ஓர் அமைச்சர் என்ற எந்த ஒரு அகங்காரமும் இல்லாமல், ஓர் உண்மையான சீடன் போல நன்கு கற்று வந்தார். ஒரு நாள் அந்த அமைச்சர், ஜென் குருவிடம், "புத்த சமயத்தின்படி, ஆணவம் என் றால் என்ன?" என்று கேட்டார். அதைக் கேட்டதும், குரு வின் முகம் சிவந்தது. பின் குரு கோபமாகத் தனது குர லை சற்று உயர்த்தி, "என்ன முட்டாள்தனமான கேள்வி இது?" என்று கேட்டார். இந்த மறுமொழியை எதிர்பா ராத அந்த அமைச்சருக்கும் கோபமும், அதிர்ச்சியும் ஏற்பட்டன. பின் குரு சிரித்துக் கொண்டே, "இதுதான் உண்மையான ஆணவம்" என்றார். இதுவரை குருவிடம் கோபம் கொள்ளாத சீடனாக இருந்த அமைச்சருக்கு, குரு கோபப்பட்டு பேசியதைக் கேட்டதும், ‘நான் ஒரு நாட்டின் அமைச்சர், என்னைப் பார்த்து எப்படி கோபத் தோடு பேசலாம்’ என்று எண்ணியபோது, தன்னுள் எழும்பிய கோபமே, உண்மையான ஆணவம் என்பது நன்கு புரிந்தது.ஆணவம் என்பது சுயம் தரும் பெருமிதம் இதனை மீறுவதே கடவுள் தன்மை  அன்புடன் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...