கிளி சொன்ன ஞானம் பேசாலைதாஸ்
ஒரு பெரியவர் தவம் செய்து கொண்டிருக்கும்போது அவருக்கு அருகில் ஒரு கிளி இருந்துகொண்டு அவரை கவனித்து “நீங்கள் ஞானி” என்று திரும்ப திரும்ப கூறிக்கொண்டே இருந்தது.
அதைக் கேட்ட பெரியவர் தான் ஞானி இல்லை.
இப்போது தான் நான் தவம் செய்யும் முறையை பயின்று கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.
ஆனாலும் தொடர்ந்து அந்த கிளி அவரை ஞானி என்று கூறிக் கொண்டே இருந்தது.
சிறிது காலம் தவம் செய்த பின் பெரியவருக்கும் கிளி கூறுவதில் உண்மை என்றே நினைத்தார்.
அதனால் அடுத்த நாள் கிளி ஞானி என்று கூறும்போது ஆம் நான் ஞானி தான். தவம் செய்து ஞானத் தன்மை அடைந்துவிட்டேன் என்ற செய்தியை கூற வேண்டும் என்று எண்ணினார்.
அடுத்த நாள் அதேபோல் தவம் செய்ய ஆரம்பித்தவுடன் பெரியவர் அருகில் கிளி வந்தமர்ந்தது.
பெரியவர் கிளி எப்போது ஞானி என்று சொல்லும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்தார்.
வெகு நேரமாகியும் கிளி சொல்வே இல்லை.
பொறுமை இழந்த பெரியவர் தானே கிளியிடம் நீ கூறுவது உண்மை தான். நான் ஞானி என்று என்னை உணர்ந்து கொண்டேன் என்றார்.
அதைக் கேட்ட கிளி உடனே நேற்றுவரை
நீங்கள் ஞானி தான், ஆனால் இன்று நீங்கள் ஞானி இல்லை என்று கூறியது.
இதைக் கேட்ட பெரியவர் மிகவும் திடுக்கிட்டார்.
பெரியவர் மட்டுமா திடுக்கிட்டார். இதை படிக்கும் நாமும் தானே......!!!
இது கற்பனை கதை என்றாலும் ஆழமான உள் அர்த்தம் இருப்பதை கவனிக்க வேண்டும்.....!!!
யாரோவர் தன்னை ஞானி என்று பறைசாற்றிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறாரோ அவர் ஞானத் தன்மையை அடையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை......!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக