பின் தொடர்பவர்கள்

0522 ஆசை என்னும் தொட்டில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0522 ஆசை என்னும் தொட்டில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

0522 ஆசை என்னும் தொட்டில்,,,,,,,

"ஆட்டிவித்தால் யாறொருவர் ஆடாதாரோ கண்ணா! ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரோ கண்ணா!" -கவிஞர் கண்ணதாசன்

                                                                            தொட்டில் எப்படி முன்னும் பின்னு மாக ஆடுகின்றதோ, அதே போலத் தான் மனித வாழ்வில், ஆசைகள் ஒரு தொட்டில் போல, ஆசைகளின் உந் துதலில் நாம் வாழ்வில் முன்னேறு கின்றோம். அதே ஆசையால் வாழ் வில் பின் தள்ளப்படுகின்றோம். முன்னுக்குப்பின்  முரணாகின்றது மனித ஆசைகள்: ஆசைகள்தான் சகல துன்பங்களின் பிறப்பிடம் எனவே ஆசை படுவதை துறந்துவிடு என்கின்றார் புத்தர். இன்னொரு பக்கம், நித்தியானந்தா, சத்குரு போன்ற வர்கள்,  அத்தனைக்கும் ஆசைப்படு! என்கின்றார்கள். கருத்துக்களில்தான் எத்தனை கலகங்கள்? 


                                                     கேள்விச்சுழியில் சிக்கிக்கொண்ட தெய்வதாஸின் சிந்தனையை களைத்தாது புவனாவின் செருமல்,,, "அங்கிள்,,, என்று செருமிய குரலில், அவனுக்கு முன்னாள் வந்து நின்றாள் பள்ளி ஆசிரியை புவனா. " என்னம்மா என்ன விசயம், பள்ளிக்குப்போகாமல், என்னிடம்,, என்று கேள்வி யோடு நிமிர்ந்தான் தெய்வதாஸ். " ஒன்னுமில்லை சார், சேகருக்கு இன்றை க்கு மன்னார் ஆஸ்பத்திரியில், ஒரு செக்கப்,, பரீட்சைகள் நெருங்குவதாள் என்னால லீவு எடுக்கமுடியாது,,, என்று மெல்ல இழுத்தவளை, " அம்மா போதும் நிட்பாட்டு, சேகரோடு மன்னாருக்குப்போக வேண்டும் அவ்வளவு தானே! சரி நான் போகிறேன் நீ உன் கடமையை கவனி" என்று சொல்லி விட்டு அவளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, சேகரை மன்னாருக்கு கூட்டிக் கொண்டு போக ஆயத்தமாகினார் அங்கிள் தெய்வதாஸ்:

                                                                    புவனா அருமையான ஒரு பள்ளி ஆசிரியை, ஊருக்குள்ளே அவள் நல்ல அழகி, சிகப்பும் மஞ்சளும் கலந்த மேனியழகு, அவளின் கண்கள் தேனிலே நனைந்த நிலாப்போல, அன்பை பார்வையில் படரவிடும் அழகிய பார்வை. அவள் மீது மிராண்டா சம்மாட்டியாருக்கு ஒரு கண்." அந்த குளிர் நிலவை ஒரு நாளுக்கென்றாளும் அனுபவிக்கவேண்டும், என்று மிராண்டா சம்மாட்டியாரின் ஆசைத்தொட்டில் முன்னும் பின்னும், ஆசையின் உந்துதலில் நிலையில்லாமல் ஆடிக்கொண்டு இருந்தது.

                                                               புவனாவும் சேகரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். அவர்களின் இல்லறவண்டி சுமூகமாக நகர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில்,  இறுதி ஈழப்போரின் விமான குண்டு வீச்சால் பார்வை இழந்தான் சேகர். இரண்டு பிள்ளையுடன், புவானவின் ஆசிரியை சம்பள த்தில் வாழ்க்கை இனிதே நகர்ந்து கொண்டிருந்தது.

                                                             
,                                                               ,,,,,,,,,,,புவனா சொன்னபடி , சேகரை மன்னார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற தெய்வதாஸிற்கு,  கசப்பான செய்தி ஒன்று அங்கே கத்திருந்தது. சேகரை செக் பண்ணிய, வைத்தியர் சொன்னார், சேகருக்கு இப்போது இரத்தபுற்று வந்திருக்கின்றது. உடனடியாக ஐந்து இல ட்சம் செலவாகும். உடனடியாக பணத்துக்கு ஏற்பாடு  பண்ணுங்கள், என்று சொல்லிவிட்டார். அதுவும் உடனடியாக வைத்தியம் செய்யவேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவி ட்டார்கள்.

                                                                         "டாக்டர் சார், இந்த விசயத்தை சேகருக்கு சொல்லவேண்டாம், நான் எப்படியாவது இந்த நோயை சுகமாக்க வழி பண் ணுவேன்" என்று சொல்லியபடி சேகரை அழைத்துக்கொண்டு வீடு சென்றார் தெய்வதாஸ் அங்கிள். மாலை நேரம், பள்ளியில் இருந்து, புவனா வீடு திரும் பியிருந்தாள், புவனாவிடம் பக்குவமாக விடயத்தை சொன்னார் தெய்வதாஸ் அங்கிள். " புவனா இந்த விடயம் சேகருக்கு இன்னும் தெரியாது, என்னிடம் இரண்டு இலட்சம் பணம் இருக்கு, மிகுதியை நீ தான் சரி பண்ணவேண்டும்" என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார்.

                                                                          புவனா அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனாள். நாழிகை சில கழிந்தன,,, சிந்திக்க தொடங்கினாள் புவனா! இன் னும் மூன்று இலட்சம் ரூபா?  அந்த நினைப்பு அடிக்கடி  சுழல ஆரம்பித்தது. மிராண்டா சம்மாட்டியார், அவரைத்தவிர, மீன்பாடு இல்லாத இந்த கஸ்ட காலத்தில்,, யார் தருவார்கள்? மனதில் எழும்பிய கேல்விகளோடு மிராண்டா சம்மாட்டியார் வீட்டுக்குப்போனாள் புவனா. சம்மாட்டியார் குடும்பம் முழு க்க மடுக்கோவிலுக்கு, கோவில் காப்பதற்கு சென்றிருந்தார்கள். சம்மாட்டி யார் மட்டும் வீட்டிலே,,,,, புவனாவை அவர் தன் வீட்டு வாசலில்,அதுவும் மாலை நேரத்தில், தன் வீட்டு வாசலில்,,,," வா புவனா,, என்ன இந்த பக்கம்,," என்றார்  ஒரு பீடிகையோடு. புவனா முழுவிடயத்தையும்  அவரிடம் சொன் னாள். " ஓ அப்படியா இதுக்கு ஏன் கவலைப்படவேண்டும்? உன் உதவிக்கு நான் இருக்கின்றேன். என்று சொன்னவர் கொஞ்சமும் யோசிக்காமல், பீரோ வை திறந்து, கட்டுக்களை எடுத்து வந்து, புவனாவின் கைகளில் வைத்தார். இரண்டு கைகளில் பணத்தஏந்தியபடி,,, வியப்பில் கண் விசாலித்த புவனா,,,,,

                                                                         வியப்பில் அழ்ந்த புவனாவைப்பார்த்து சம்மாட்டியார் சொன்னார்,,, " புவனா எனக்கு இந்த பணத்தை திருப்பித்தர வேண்டிய‌ அவசியமே இல்லை ஆனால்,,,," என்று மெல்ல புவனாவின் தோளில் கைவைத்தார் சம்மாட்டியார். அவரது கைகள் சேலை முந்தானையை அகற்றுவதில்,,,, புவனா மறுப்பு ஒன்றும் காட்டவில்லை,,, மெல்ல மெல்ல சேலை கழன்றது. அடுத்தவீட்டில் இரவு வானொலியில் இன்பமும் துன்பமும் பாடல் நிகழ்ச்சியில் பாடல் மெல்ல தவழ்ந்தது,,,,, பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டான்,, அந்த பார்த்தனவன் உன்னி டத்தில் கீதை கேட்டான், நான் இருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்,,,,,,,,  புவானாவின் சேலை ஜக்கட் எல்லாமே முற்றாக அகன்ற நிலையில், மிராண்டா சம்மாட்டியார் புவனாவை அணைத்தபடி கட்டிலுக்கு நகர்ந்தார். சமாட்டியாரின் ஆசைத்தொட்டில் கனவுகள் இப்போது கட்டிலில்,,,,,,, யாவும் கற்பனையே.... பேசாலைதாஸ்



துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...