பின் தொடர்பவர்கள்

0133 ராமரும் தேரையும்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0133 ராமரும் தேரையும்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 ஜூன், 2015

0133 ராமரும் தேரையும்!

ராமரும் தேரையும்!





ராமர் வனவாசமிருந்தபோது... ஒரு நாள் காலை நதியில் குளிக்க வேண்டி, அம்பறாத் துணியை...
(முதுகில் கட்டிக் கொள்ளும் அம்புகள் நிறைந்த சிறு கூடை) கழற்றி மணலில் ஒரு அம்பைச் சொருகி அதன் மீது அம்பறாத் துணி முதலியவை களைச் சாய்த்து வைத்துவிட்டுச் செல்கிறார்.
                                            குளித்து முடித்துவிட்டு வந்து மணலில் சொருகி இருந்த அம்பைப் பிடுங்கு கிறார். ஓ..! இதென்னக் கொடூரம்.? அம்பின் நுனி யில், உயிர் ஊசலாட்டத்தில் ஒரு தேரை. துடித் துப் போகிறார் ராமர். "ஓ..! தேரையே! நீ மணலு க்குள் இருப்பதை அறியாமல், தீயவர்களை மட் டுமே அழிக்கும், என் பாணம், இன்று அப்பாவி யான உன்னை பலி வாங்கிவிட்டதே.
தயவு செய்து என்னை மன்னித்து விடு." "பரவயி ல்லை ராமா! உன் கையால் சாவதே ஒரு பெரும் பாக்கியம்தான்," என்றது தேரை. அப்போதும் மனம் ஆறவில்லை ராமருக்கு. "என் அம்பு உன் னைத் துளைக்கும் போது...ஒரு வார்த்தை...ஒரே ஒரு வார்த்தை... ராமா என்று என்னை அழைத்தி ருக்கக் கூடாதா?" தேரை சொன்னதாம்.
"வேறு எவராவது என்னைக் கொல்ல வந்திரு ந்தால்..., நான் 'ராமா' என்று உன்னை அழைத் திருப்பேன்! ஆனால்...
அந்த ராமனே என்னைக் கொல்ல வரும்போது நான் யாரை அழைப்பது...?"

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...