பின் தொடர்பவர்கள்

0057 நல்ல குணத்தை கைவிடலாகுமா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0057 நல்ல குணத்தை கைவிடலாகுமா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூன், 2015

0057 நல்ல குணத்தை கைவிடலாகுமா?

நல்ல குணத்தை கைவிடலாகுமா?


ஒரு முட்புதரில் தேள் ஒன்று மாட் டிக்கொண்டது. வெளியே வர முடி யவில்லை. அதைக் கண்ட ஒரு துறவி, அந்தத் தேளை விடுவிக்க முயன்றார். தேள் அருகில் அவர் கை சென்றதும், தேள் அவரைக் கொட்டியது. முட்புத ரும் அவர் கையைப் பதம் பார்த்தது. இருந்தாலும் அத்துறவி, தேளை விடுவிக்க மீண்டும் மீண்டும் முயன்றார்.
                           அருகிலிருந்து, இந்தக் காட்சியைப் பார்  த்துக் கொண்டிருந்த ஒருவர், பொறுமை இழந்தார். அத்துறவியிடம், "உமக்குக் கொஞ்சமும் மூளை இல்லையா? அந்தத் தேள்தான் உம்மைக் கொட்டிக் கொண்டே இருக்கிறதே. ஏன் அதை விடுவிக்க தொடர்ந்து முயற்சி செய்கிறீர்?" என்று கேட்டார். அதற்கு அத்துறவி, "கொட்டுவது தேளின் குணம். அதை மாற்றமுடியாது. அதற்குப் பயந்து, கஷ்டப்ப டும் ஒரு ஜீவனைக் காப்பாற்றும் என் குணத்தை நான் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்?" என்று பதில் கேள்வி கேட்டார்.
மிருகக் குணத்திற்குப் பயந்து, நம்மில் உறைந்திருக் கும் தெய்வீகத்தை நாம் மறைக்க வேண்டுமா? மற க்க வேண்டுமா?

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...