பின் தொடர்பவர்கள்

0468 விலைமதிப்பில்லாத லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0468 விலைமதிப்பில்லாத லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 டிசம்பர், 2017

0468 விலைமதிப்பில்லாத நமது உயிரே நமக்கு நம்பிக்கை!

விலைமதிப்பில்லாத நமது  உயிரே நமக்கு நம்பிக்கை!

அன்பர்களே நேற்று நாம் இருந்தோம், இன்று நாம் இருக்கின்றோம், நாளை இருப்போமோ நாம் அறி யோம் ஆயினும் உயிரோடு இருப்போம் என்ற ஒரு நம்பி க்கையில் நமது வாழ்க்கை நகர்கின்றது. நாம் இன்று வரை உயிரோடு இருக்கி ன்றதே ஒரு அதிசயம்! அதுவே பெரும் கொடை. நாம் உயிரோடு மட்டுமல்ல தேக ஆரோக்கி யத்துடன் வாழ்வதே மிகப்பெரிய ஆசீர்வாதம் பலர் இதனை அறிந்து கொள்ளாமல் வாழ்க்கையின் மீது சலிப்படைந்தவர்க ளாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். நமக்கு இருக்கும் உயிரே போதும்! தன்னம்பிக்கை கொண்டு எதனையும் சவலாக கொண்டு வாழ்வை ஜெயிக்கலாம் அதற்கு இதோ ஒரு அறிவுரைகதை!
                                             ஏழை ஒருவர் சென் துறவியைப் பார்த்து, "குருவே! நான் பெரும் ஏழை, என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை. நான் நல்ல வசதியுடன் வாழ வழி சொல்லுங்கள்" என்று கேட்டார். அதற்கு குரு அவரிடம், "நான் 5000 தருகிறேன், உன் கைகளை என்னிடம் வெட்டிக் கொடு" என்று சொன்னார். என்னால் 5000 ரூபாய்க்காக என் கைகளை இழக்க முடியாது என்று கூறினார் ஏழை. "சரி, நான் உனக்கு 15,000 ரூபாய் தருகிறேன், உன் கால்களைக் கொடு" என்றார்.

                                            அதற்கும் ஏழை ஒப்புக் கொள்ளவில்லை. "வேண்டுமென்றால் 50,000 ரூபாய் தருகிறேன், உன் கண்களை யாவது கொடு" என்று கேட்டார் துறவி. அதற்கும் அவர் முடி யாது என்றார். “உனக்கு இருபது இலட்சம் வேண்டுமென்றா லும் தருகிறேன், உன் உயிரைக் கொடு” என்றார். அதற்கு அந்த ஏழை, “என்னால் நிச்சயம் நீங்கள் சொல்வதை செய்ய முடி யாது” என்று கூறினார். அதைக் கேட்ட அந்த குரு அவரிடம், "உன்னிடம் உன் உயிரைத் தவிர வேறு எந்தச் சொத்தும் இல்லை, மேலும் எவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தா லும், கொடுக்க விரும்பாத, விலை மதிப்பற்ற, உயிரை கொண்டுள்ள நீ, எவ்வாறு ஏழை ஆக முடியும். தன்னம்பிக்கை யுடன் உழைத்து வாழ்க்கையில் முன்னேறு" என்று கூறினார்.
விலைமதிப்பில்லாத நம் தன்னம்பிக்கை ஒன்று போதும், வாழ்வை ஜெயிக்க...
அன்புடன் பேசாலைதாஸ்

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...