பின் தொடர்பவர்கள்

0499 தனி ஒரு மனிதனுக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0499 தனி ஒரு மனிதனுக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 ஜனவரி, 2018

0499 தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால்,,,,!

தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால்,,,,!
அன்பர்களே வசதி படைத்தவன் தரமாட்டான், வயிறு பசித்தவன் விடமட்டான் இது பொதுவுடமை பாட்டாளி வர்க்கத்தின் கோசமாக அவ்வப்போது, உங்கள் காதுகளில் விழுந்திருக்கலாம். உண்மைதான் பசிவந்தால் பத்தும் பறக்கும் என்பார்களே அது இதுதான்! தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான் யுகக்கவிஞன் பாரதி. ஊட்டத்தை அளிக்கும் முன்னர் பசி வாட்டத்தை போக்கிடவேண்டும், இது எனது சிந்தனை, என் சிந்தனையை வலுவூட்ட புத்தரை துணைக்கு அழைக்கின்றேன்.

புத்தரின் சீடர் ஒருவர், ஒரு பிச்சை க்காரருக்கு போதனை செய்தார். ஆனால், அதை அவர் காதில் வாங்கவில்லை. சீடருக்குக் கோபம் வந்தது. புத்தரிடம் போய் சொன்னார். ''அந்தப் பிச்சைக்காரரை என்னிடம் அழைத்துவா'' என்றார் புத்தர். அவ்வாறே செய்தார் சீடர். பிச்சைக்காரரைப் பார்த்தார் புத்தர். உடல் மெலிந்து, பல நாளாகப் பட்டினி கிடந்து பசியோடு காணப்பட்டார் அவர். புத்தர், அவருக்கு வயிறு நிறைய உணவு கொடுத்தார். பின்பு, ''நீ போகலாம்'' என்று அனுப்பிவிட்டார். சீடருக்குப் பொறுக்கவில்லை. ''நீங்கள் அவருக்கு உணவு மட்டும்தானே அளித்தீர்கள். போதனை ஏதும் செய்யவில்லையே?'' என்று கேட்டார். ''இன்று அவருக்கு உணவுதான் போதனை. அதுவே அவருக்கு இப்போது முதல் தேவை. அவர் உயிரோடு இருந்தால்தான் நாளை போதனையைக் கேட்பார். பசித்தவருக்கு என்ன சொன்னாலும் பயன்படாது'' என்றார் புத்தர். அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...