பின் தொடர்பவர்கள்

0221 உண்மையான பக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0221 உண்மையான பக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 ஜூலை, 2015

0221 உண்மையான பக்தி


உண்மையான பக்தி
ஆலையம் தொழுவது சாலவும் நன்று இது ஒரு முதுமொழி. ஆலை யத்தி ற்கு தினமும் வருவதால் நாம் இறைவனுக்கு மிகவும் வேண்டப்ப ட்டவர்கள், தாம் நல்லவர்கள், இரட் சிக்கப்பட்டவர்கள் என்ற கர்வம் சார் ந்த நான் என்கி ன்ற சுயம் பலருக்கு இயல்பாக வந்துவிடுகின்றது. இயேசு வின் போதனை யின், அவரின் வாழ் வின் பாடங்களின் அடிப்படை சாரா ம்சம், நான் என்கின்ற சுயம் மறைந்து, நாம் என்கின்றே ஒரே உணர்வில் இறை தரிசனம் காண்ப துவே! ஆலைய வழிபாடுகள் இவைகளில் கலந்து கொண்டு பலர் இறை இயேசுவின் அடிப்படை சாராம்சத்தை இழந்து விடுவது வேதனையானது. ஒரு சிலரின் இத்தகைய நடவடிக்கைகள், பலரை ஆலை யப்பக்கம் வரவிடாமல் தடுக்கின்றது. அப்படி வரக்கூடாது என்ற எண்ணத் தில் தான் இவைகளைச் செய்கின்றார்களா? என்கின்ற சந்தேகம் எழுகின்றது. பிறர்சிநேகம், அவர்களின் ஆன்மீக வாழ்வின் மீதான அக்கறைகள் இவைகள் தான் உண்மையான பக்தி முயற்ச்சிகள் என்று என்ம்சிறுமதியில் தோன்றுகி ன்றது அன்பர்களே! என் கருத்துக்கு வலுவூட்டும் இந்த கதையை வாசியு ங்கள்.
                                                       ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. உண்மையான பக்தி உடையவர் யார் என்பதுதான் அது.  நேராக இறைவனிடம் சென்று தங்கள் சந்தேகத்தைக் கேட்டன. அப்போது இறைவன், "தேவதைகளே! இந்த ஊரில் போய் யார் எனது உண்மையான பக்தர் என்பதை விசாரித்து வாருங்கள்" என்றார். உடனே தேவதைகள் புறப் பட்டு பலரிடமும் சென்று விசாரித்தன. ஒருவர், "நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை... தினமும் மூன்று வேளை கடவுளை வணங்கு கிறேன்," என்றார். அடுத்தவரோ, "நான் வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் கோவில் போவேன்," என்றார். மற்றவரோ, "நான் வாரத்தில் ஒரு நாள் நிச்ச யம் கோவிலுக்குச் செல்லுவேன்," என்றார். இன்னொருவரோ, "எனக்கு கஷ் டம் வரும் சமயத்தில் கடவுளிடம் முறையிடுவேன்," என்றார். இப்படி யாக பலரும் ஏதோ ஒரு சமயத்தில் கடவுளை நினைப்பவராகவே இருக்க, இதில் யார் உண்மையான பக்தர்' எனக் கண்டுபிடிப்பது எப்படி என்ற குழப்பம் தேவ தைகளுக்கு ஏற்பட்டது. அப்போது அந்த வழியே அவசரமாகச் சென்று கொ  ண்டிருந்த ஒருவரை நிறுத்தி, "அய்யனே! உனக்கு கடவுள் பக்தி உண்டா? நீ எப்போது கடவுளை வழிபடுவாய்?'' என்று ஒரு தேவதை கேட்டது. அதற்கு அவர், "எனக்குக் கடவுளை நினைக்கவே நேரமில்லை... அவசரமாக சிலரு க்கு உதவிசெய்ய வேண்டியிருக்கிறது. நான் போகிறேன்...'' என்று பதில் கூறிவிட்டு ஏழைகளுக்கு உதவிட விரைந்தார். 
                                                   தேவதைகள் கடவுளிடம் திரும்பி வந்து நடந்ததை அப்படியே விவரித்தன. எல்லாவற்றையும் கேட்ட கடவுள் மவு னம் சாதித்தார். "தேவனே... உண்மையான பக்தர் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?'' என்று கேட்டன. "கண்டுபிடித்துவிட்டேன்!'' என்றார் கடவுள். "யார் பிரபு? தினமும் மூன்று வேளை கோவிலுக்கு வருபவர்தானே?'' என்று கேட்டன தேவதைகள். கடவுள் புன்னகைத்தபடியே, "இல்லை... இல்லை... என்னை நினைக்கக்கூட நேரமில்லாது ஏழைகளுக்கு சேவை செய்ய ஓடின ஒருவரை இறுதியில் சந்தித்தீர்களே... உண்மையில் அவர்தான் எனது உண் மையான பக்தர்,'' என்றார். இறைவனின் பணியைச் செய்துகொண்டிருந்த அவர் மட்டுமே உண்மையான பக்தர்.  அன்பர்களே! பக்தி என்றால் என்ன என்று இப்போது புரிகின்றதா? அன்பினால் நாமாகி, இறைவனை நமதாக்கு வோம் என்ற நப்பாசையால் இதனை எழுதுகின்றேன் என்றும் அன்பில் பேசாலைதாஸ்(பேர்கன் நோர்வே)


ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...