பின் தொடர்பவர்கள்

0022 கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0022 கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

0022 கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்

கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்   இயேசு ,    பேசாலைதாஸ்

                                   
                                        நம்மில் பலர் மதிப்பு மரியாதை புகழ் இவைகளுக்காக மற்றவர் களிடம் இருந்து எதிர்பார்க்கின் றோம் அது கிடை க்கவில்லை என்றவுடன் கோபம் கொள் கின்றோம், ஒன்றை மற்றும் தெரிந்து கொள் ளதவருகின்றோம், நாம் மற்றவர்களிடம் எதை எதிர்பார்க்கின்றோமோ அதை நாம் மற்றவர்களுக்கு கொடுக்க தவறுகின்றோம்!
                                        அதற்கு காரணம் நம்மில் இருக்கும் கர்வம் ஆணவம்,  இதற்கு படிப்பி னையாக ஒரு சம்பவத்தை நினைவூட்டிட விரும்புகின்றேன்.

                                              அரசனுக்கு ஒரு ஆசை தோன்றியது. சாதாரண உடை அணிந்து தெருவில் நடந்து சென்றால் எத் தனை பேர் அவரை அடையாளம் கண்டு கொள் கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பினான்.
                                                உடனே சாதாரண உடை அணிந்து கொண்டு தனது மெய்க் காப்பாளனை உடன் அழைத்துக் கொண்டு வீதியில் இறங்கி நடந்து சென்றார். மெய்க்காப்பாளன் முன்னே செல்ல சிறிது இடைவெளியில் அரசன் பின்னே நடந்து சென்றார். வீதி யில் எதிர்ப்பட்ட அனைவரும் மெய்க்காப்பாளனைக் கண்டு புன் முறுவல் பூத்தவாறு சென்றனர். அரசனை யாரும் கண்டு கொள்ள வேயில்லை. 
                                              மன்னனுக்கு மெய்க்காப்பாள னுக்கு இருந்த மரியாதை கண்டு ஒரு புறம் ஆச்ச ரியம், மறுபுறம் தன்னை யாரும் அடையாளம் காணவில்லையே என்று கடுமையான கோபம். அவனிடம் சற்று கடுமையாகவே கேட்டார்,

                                                ''என்ன உனக்கு நாட்டில் எல்லோரையும் தெரியும் போலிருக்கிறதே, அவ் வளவு செல்வாக்கா,உனக்கு?'' அவன் சொன் னான்,  '',எனக்கு இவர்கள் யாரையும் முன்னே பின்னே தெரியாது.'அரசன் ஒன்றும் புரியாமல் திகைப்பதைப் பார்த்து மேலும் அவன் சொன் னான், 
                            'அரசே', நான் சாலையில் நடக்கும் போது எதிரில் வரும் யாரைப் பார்த்தாலும் ஒரு சினேக பாவத்துடன் சிறிதாகப் புன்முறுவல் பூப்பேன். அப்போது எதிரில் வருபவன் எப்படி ப்பட்ட குணம் உடையவனாகினும் பதிலுக்கு கட்டாயம் புன்முறுவல் பூப்பான்.இப்போதும் அப்படித்தான் நடந்தது.

                                                            உண்மை இதுதான் நண்பர்களே  உனக்கு என்ன வேண்டுமோ அதை முதலில் மற்றவர்களுக்கு வழங்கு.நீ விரும்பியது உன்னை வந்து அதுவாக சேரும்
, அன்புடன் பேசாலைதாஸ்

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...