பின் தொடர்பவர்கள்

0194 நீ நீயாகவே இரு! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0194 நீ நீயாகவே இரு! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 30 ஜூன், 2015

0194 நீ நீயாகவே இரு!

நீ நீயாகவே இரு!

அன்பர்களே கொஞ்ச நேரம் நான் சொல்லவருவதை கேளுங்கள். நாம் மனமகிழ்ச்சியோடு வாழ்கி ன்றோம் என்றால் நாம் சரியாக வாழ்கின்றோம் என்று அர்த்தம். சோகமாக துன்பமாக வாழ்கின் றோம் என்றால் நாம் சரியாக வாழவில்லை எங்கேயோ தவறு நடக்கின்றது என்று அர்த்தம். துன்பங்களுக்கெல்லாம் மூல காரனம் நாம் நம்மை ஏற்றுக்கொ ள்ளவில்லை, அன்பு செய்யவி ல்லை என்றுதான் அர்த்தம். உன்னை நீ நேசிக்குமாப்போல என்று இயேசு சொன்னதை கவனியுங் கள். நீ எதுவாக இருக்கின்றாயோ அது வாகத்தான் வாழ முடியும்! நமக்கு ள்ள பிரச்சனை, துயரம் இவைகளு க்கு அடிப்ப டைக்காரனம், நம்மை நாம் ஏற்றுக்கொள்வதோ, நம்மை நாம் அறிந்து கொள்வதோ இல்லை. உண்மையில் நம்மை நாம் ஏற்று க்கொள்ளவேண்டும். நம்மை நாம் அன்பு செய்யவேண்டும். அதாவது நமது இருப்பை, இயல்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அநாவசியமாக நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டு, மதிப்பீடு செய்வது தவறானது. அப்படி நாம் செய்தால் நாம் நமது சுயாதீனத்தை, நமது சுய த்தை இழந்துவிடுகின்றோம். இது நாம் செய்கின்ற முதல் பாவம்! கடவுள் நம்மை சுயாதீனமாக படைத் தார். சுயமாக சிந்தித்து வாழ நம்மை அழைக்கின் றார். நம் சுயாதீனத்தை இழப்பது, அவரின் அழை ப்பை புறக்கனிக்கின்ற செயலாகும்!. காக்கா நீந்துமா? மீன் நடக் குமா? குரங்கு நிற்குமா? அவைகளால் அதை செய்ய‌ முடியாது அதற்காக அவை கவலைப்படுவது கிடை யாது. ஆனால் மனிதன் மட்டும் தன்னிடம் இருப் பதை எடைபோடுவதில்லை. இல்லாத ஒன்றிற்காக அதன்பின் ஓடுகின்றான். இதை விளக்க அருமையான சம்பவம் ஒன்று உங்களுக்காக சொல்கின்றேன்.
                                                                                 யுவானி என்ற ஒரு நல்ல மனிதர், மரணப்படுக்கையில் இருந்தார், கொஞ்சம் கொஞ்சமாக மரணித்துக் கொண்டிருந்தார். அவருக் காக இறுதி அபிசேகம்(நோயில் பூசுதல்) கொடுக்க ஒரு குரு வந்தார். அவர் மெதுவாக, மரணப்படுக்கை யில் இருக்கும் யுவானியிடம் " நீர் கொஞ்ச நேரத் தில் மரிக்கப்போகின்றீர். மரித்தவுடன் நேராக தனித் தீவைக்காக கடவுள் முன் நிற்கப்போகின்றீர். கடவுள் உம்மைப்பார்த்து, மோசேயின் சட்டப்படி வாழ்ந்தா யா? என்று கேட்பார். பதில் சொல்ல தயாரயிருங்கள் என்று சொன்னார் "அந்த குரு. இதைகேட்டு யுவானி என்ற அந்தமனிதர்,கண்களை திறந்து பார்த்து, மிக வும் பிரயத்தனப்பட்டு, பலமாக சொன்னார் " மடத் தனமாக உளறாதே! கடவுள் என்னிடம், மோசேஸி ன் கட்டளைப்படி வாழ்ந்தாயா என்று கேட்க ப்போவ தில்லை. நீ ஏன் யுவனியாக இருந்திருக்கவில்லை என்றுதான் கேட்பார்" என்று சொல்லி உயிர்பிரிந்தார். நாம் நாமாக வாழ்வது தான் முதல் அழைப்பு. அதை நாம் உதாசீனம் செய்தால் அது கடவுளை நோகப்பன்னும். ஏனெனில் நாம் கடவுளின் பிள்ளைகள்!                  நானாக இருக்க ஆசைப்படும் பேசாலைதாஸ்

ரப்பர் முதலைகள்

 ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்க...