பின் தொடர்பவர்கள்

0265 தூபம் போல் என் செபம் உமை நோக்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0265 தூபம் போல் என் செபம் உமை நோக்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

0265 தூபம் போல் என் செபம் உமை நோக்கி எழும்பாதோ?

தூபம் போல் என் செபம் உமை நோக்கி எழும்பாதோ? 


தூபம் போல் என் செபம் உமை நோக்கி எழும்பாதோ?
இன்பம் யாவுமே துன்பமா குமே! இதுதான் வாழ்வின் அனுபவம். துன்பமில்லா வாழ்வு இல்லை அதுபோல வாழ்வில் அவ்வப்போது இன்பங்கள் வந்து போகாமல் இருப்பதில்லை. பிரச்சனை என்னெவென்றால் அவையா வுமே நிலையாய்நிற்பதி ல்லை . இன்பமாய் நாம் நினைப்பது துன்பமாக திடீரென மாறும். இன்பத்தை துன்பமாக மாற்ற கெட்ட சக்திகளால் முடியும். ஆனால் கெட்டனவற்றை இன்பமாக மாற்ற கடவுள் ஒருவரலேயே முடியும்.  கடவுள்  எந்த வழியில் செய்வார் என்பது அவர் ஒருவருக்கே தெரியும், நாம் நமது துன்பங்கள் துயரங்களை தீப்பதற்கு நாமாகவே ஒரு வழியை கண்டு பிடித்து அதன்படி கடவுள் உதவி செய்யவேண்டும் என்று மன்றாடுவோம் அது நடக்காமல் இருக்கலாம் ஆனால் நமது பிரச்சனை ஏதோ ஒருவழியில் தீர்க்கப்பட்டிருக்கம் ஆனாலது கடவுள் செய்தார் என்றில்லாமல் ஒரு சம்பவத்தின் ஊடாக நிகழ்ந்திருப்பதை நாம் அறியலாம்  அதற்கு  ஒரு  சம்பவத்தை இப்போது உங்கள் மனக்கண் முன் கொண்டுவருகின்றேன்,,,,, கப்பல் ஒன்று கடலில் மூழ்கியபோது, அதிலிருந்து ஒரே ஒருவர் மட்டும் தப்பித்து, அருகிலிருந்த தீவுக்கு நீந்திச்செ ன்றார். மனித நடமாட்டம் எதுவும் இல்லாத ஒரு தீவு அது. கடவுளிடம் தன்னை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் வேண்டிவந்தார். ஏதாவது ஒரு கப்பல் அவ்வழியே வராதா என்று ஒவ்வொரு நாளும், கடற்கரையில் ஏங்கிக் கிடந்தார். பல நாட்கள் சென்றன. தனக்கென ஒரு குடிசை அமைத்து அதில் தங்கியிருந்தார். ஒரு நாள் அவர் தீவில் உணவு சேகரித்துவிட்டு திருப்பும்போது, இடி, மின்னலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. அவர் தன் குடிசையை நோக்கி ஓடினார்.  அந்தோ அவர் கண்முன்னே, அவரது குடிசையை ஒரு மின்னல் தாக்கவே, அது தீப்பற்றி எரிந்தது. அதிலிரு ந்து எழுந்த புகை வான் நோக்கி உயர்ந்தது. சிறிது நேரத்தில் மழையும் நின்றது. இதைக் கண்டு அவருக்கு கடவுள் மேல் பெரும் கோபம் வந்தது. தன்னைக் காப்பாற்ற மனமில்லை என்றாலும், தன்னை அந்தக் குடிசையில் தங்கு வதற்கு அனுமதித்திருக்கலாமே  என் குடிசையையும் கடை சியில் அழித்துவிட்டார். அவர் கடவுளைக் குறை சொன்னார். சிறிது நேரம் சென்று, தீவை நோக்கி ஒரு கப்பல் வந்தது. அதைக் கண்டதும் அவருக்கு நிலைகொள்ளா மகிழ்ச்சி. தான் அங்கிருப்பது அவர்களுக்கு எப்படி தெரிந்தது என்று அவர் வியப்புடன் கப்பல்சிப்பந்தியிடம் கேட்டார். அவரைக் காக்க வந்தவர்கள், "நீங்கள் உருவாக்கிய புகை எங்கள் கவனத்தை ஈர்த்தது" என்று அவர்கள் பதில் சொன்னார்கள். அடுத்த முறை நமது கனவுகள் எரிந்து சாம்பலாவதைப் போல் உணர்ந்தால், அது விண்ணை நோக்கி எழும் ஒரு புகை அடையாளம் என்று எண்ணிப் பார்க்கலாம். தூபம் போல் என் செபம் உமை நோக்கி எழும்பாதோ? ஆபத்துக்காலங்களில் அவரை நோக்கி உன் அவலக்குரலை எழுப்பு, அவர் உன் குரலுக்கு செவிசாய்த்து உன் துன்பங்களை எல்லாம் துடைப்பார். அன்புடன் பேசாலைதாஸ்

பேரழகும் பெருஞ்செல்வமும்

பேரழகும்  பெருஞ்செல்வமும்   பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.. அப்போது அங்கு வந்தான் மன்மதன்.. "இக்குழந்தைக்கு பேரழகைத...