Followers

Monday 28 August 2023

காவி

 1983 இலங்கை இன கலவரத்துக்கு பின்பும் கிளிநொச்சியில் புலிகள் மற்றும் போராட்ட இயக்கங்களுக்கு மத்தியில் கண்டி பிரதான சாலைக்கு அருகில் சிங்கள மகா வித்தியாலயம் இயங்கி கொண்டிருந்தது. ஒரு புத்த பிக்குவும் அருகில் இருந்தார். முழு தமிழர்கள் நிறைந்த தெருவில் ஒரு சிங்களவரும் இல்லாத தெருவில் பிக்கு குடை பிடித்தபடி நடந்து போய் வந்து கொண்டிருந்தார். அவர் அருகில் தமிழ் பிள்ளைகள் கூட சென்று வந்தனர்.அந்த காவி நிறம் எங்கள் தெருவுக்கு மிக அழகாக இருந்தது. காவி எப்போது அழகாக இருந்ததெனில் அப்போது தான்.

கிளிநொச்சி கரடி போக்கு சந்திக்கு அருகில் போர் தொடங்கிய பின்னரும் அரச மரம் புத்த பகவான் சிலை இருந்தது. அதை ஆக்கிரமிப்பு சின்னமாக நினைத்து போராளிகள் உடைத்து எறிந்ததை நான் காண வில்லை. புத்தர் சிலை எப்போது ஆக்கிரமிப்பு சின்ன மாறுகிறது இந்த கேள்விகளுக்கு பதில் தேட வேண்டியது தென் இலங்கையே.
அந்த புத்த பிக்கு தன் வீட்டில் இருந்து தமிழ் சனங்களுக்கு ஓதி நீர் தெளித்து ஆசீர் வதித்தார். அந்த அன்புக்காக கிளிநொச்சி பிள்ளைகள் கிளிநொச்சி குளத்தில் தாமரை மலர்கள் பறித்து சென்று பிக்குவுக்கு கொடுத்து அவர் தமிழில் மகிழ்ந்தனர்.
நல்ல நினைவு இருக்கிறது நானும் என் தாயாரும் சென்று. பிக்குவிடம் மருந்து எண்ணெய் பெற்று அவரிடம் நூல் கட்டி கொண்டோம். அந்த நூல் ஒரு விஷ பாம்பு போல் கை களில் தோன்ற வில்லை.
பிறகு கிளிநொச்சி பெரும் போரின் போது தமிழ் மக்களோடு அந்த பிக்குவும் அகதியாக நடந்து கொண்டிருந்தார்.இப்போதும் நாம் எதிர் பார்ப்பது அவரை போல தமிழ் மக்களை புரிந்து கொண்ட ஒரு பிக்கு கூட நடந்து வர வேண்டும் என்பதையே அந்த அன்பின் பிரதி உப கார மான தாமரை மலர் கள் இப்போதும் எங்களிடம் உண்டு.

No comments:

Post a Comment

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்

தூண்டிவிடும் தூண்டில்கள்! பேசாலைதாஸ்  ஆசைகாட்டி மக்களை தூண்டி தம் காரியங்களை சாதிக்கும் பல மக்களை நாம் நிஜவாழ்வில் சந்தித்து இருக்கின்றோம்,...