பின் தொடர்பவர்கள்

0374 செய்யும் தொழிலே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
0374 செய்யும் தொழிலே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

0374 செய்யும் தொழிலே தெய்வம்

செய்யும் தொழிலே தெய்வம்

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இணைந்து அர ண்மனை ஒன்றைக் கட்டிக் கொண்டிருந்தனர். அ வ்வழியேச் சென்ற ஒருவர், அங்கு நடந்த பணிகளை ஆர்வத்தோடு பார்த்தார். மரக்கட்டைகளைக் கொண்டு அழகிய வேலைப்பாடுகள் செய்து கொண்டிருந்த ஒரு வரிடம் சென்று, "ஐயா, என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டார். "தச்சு வேலை செய்கிறேன்" என்று ஆர்வமற்ற தோர் பதில் வந்தது, அவரிடமிருந்து. கல்லில் அழகிய சிற்பம் ஒன்றை வடித்துக்கொண்டிருந்த சிற்பியிடம் சென்று, "ஐயா, என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்ட போது, "பார்த்தால் தெரியவில்லையா? கல் உடைத்துக் கொண்டிருக்கிறேன்" என்று சலிப்புடன் பதில் சொ ன்னார், அந்தச் சிற்பி. அடுத்து, உண்மையிலேயே கல் உடைத்துக் கொண்டிருந்த ஒருவரிடம் சென்று, "ஐயா, என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டபோது, அவர் தலையை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி, "நான் ஓர் அரண்மனையைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்" என்றார்.
அன்பர்களே ! செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும், அத்தொழிலைப்பற்றி ஒருவர் கொண்டிருக்கும் கண்ணோட்டம், உயர்வானதாக இருந்தால், செய்யும் தொழில் உயர்வடையும். எத்தொழில் யார் யார் செய்யினும், அத்தொழிலில் மேன்மை காண்பது அறிவு. நம் சான்றோர்கள் எவ்வளவு அருமைய்டாக பாடிச்சென்றனர் செய்யும் தொழிலே தெய்வம் என்று,,,,,   மீண்டும் அடுது ஒரு கதைச்சிந்தனையுடன் உங்கள் அன்பு  பேசாலைதாஸ்  பேர்கன் நோர்வே

துஷ்டனைக் கண்டால் தூர விலகு.

துஷ்டனைக் கண்டால் தூர விலகு. குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்,  தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார்.  துரியோதனன், அந்...